தற்காலிகமாக ஜெட் இடத்தை பிடிக்கும் மற்ற நிறுவனங்கள்..சேவை தொடங்கப்பட்டால் கொடுத்து விட வேண்டும்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஜெட் ஏர்வேஸின் காலியிடங்களை தற்போது தற்காலிகமாக அடிப்படையில் நிரப்பிக் கொண்டிருப்பதாகவும், அதே நேரம் ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை மீண்டும் தொடங்கினால் மற்ற விமான நிறுவனங்கள் கொடுக்கப்பட்ட இடங்களை திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் விமான துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

மேலும் ஜெட் ஏர்வேஸ்ஸை பாதுக்காக்கவும், அதன் வரலாற்று இடங்களையும் பாதுக்காக்கவும் ஜெட் ஏர்வேஸின் விதிமுறைக்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதோடு எஸ்.பி.ஐ தலைமையிலான கூட்டாளியும், ஜெட் ஏர்வேஸின் ஊழியர்களின் தொழிற் சங்களும் சர்வதேச தரையிறக்கங்களின் மதிப்பீடுகளை அறிந்து அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளன.

சீன பால் பொருட்களுக்குத் தடை..! மெலமைன் (Melamine)லேப்கள் வந்தால் தான் அனுமதிப்போம்..! சீன பால் பொருட்களுக்குத் தடை..! மெலமைன் (Melamine)லேப்கள் வந்தால் தான் அனுமதிப்போம்..!

பயனிகளின் சிரமத்தை குறைக்க முயற்சி

பயனிகளின் சிரமத்தை குறைக்க முயற்சி

பயணிகளின் சிரமத்தை குறைக்கவும், அவர்களின் கூடுதல் வசதிக்காக ஜெட் ஏர்வேஸின் மூன்று மாத சேவைகளை மட்டும் முற்றிலும் மற்ற விமான நிறுவனங்களுக்கு மாற்ற, ஜெட் ஏர்வேஸ் ஏஜெண்டுகளை ஒதுக்கி விடுவதற்கான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் திடீரென மூடப்பட்டது

ஜெட் ஏர்வேஸ் திடீரென மூடப்பட்டது

மேலும் கடந்த புதன் கிழமையன்று பண நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக திடீரென மூடப்பட்டது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பயனிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேறினர். இந்த நிலையில் உள் நாட்டிலும் சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகளின் சிரமத்தை குறைக்க கட்டாயம் சில இடங்களை ஒதுக்கீடு செய்ய அமைச்சகம் கட்டாயப்படுத்தியது.

சிரமத்திற்கு ஆளாகிய பயணிகள்
 

சிரமத்திற்கு ஆளாகிய பயணிகள்

ஜெட் ஏர்வேஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பல விமானப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியதையடுத்து, அமைச்சரகம் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளது. பயணிகள் சிரமத்தை குறைக்க மற்றும் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவையை ஆரம்பித்தால் கொடுத்து விட வேண்டும்

சேவையை ஆரம்பித்தால் கொடுத்து விட வேண்டும்

எப்படி இருந்தாலும் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்தால், இந்த இடங்கள் திரும்ப ஜெட் ஏர்வேஸிடம் அளிக்கப்பட வேண்டும் என்றும் இது பற்றிய மேற்பார்வைக்காக இது டி.ஜி.சி.எ என்ற குழுவை உருவாக்கியுள்ளது. இதில் விமான துறை அதிகாரி, தனியார் விமான துறை மற்றும் ஸ்லாட் ஒருங்கிணைபாளர்கள் அனைவரும் சேர்ந்து இந்த அமைபினை உருவாக்கியுள்ளது.

எளிமையான முறையில் ஒதுக்கீடு

எளிமையான முறையில் ஒதுக்கீடு

இதனால் இந்த ஒதுக்கீடு மிக எளிமையான வெளிப்படையான வகையில் ஒதுக்கீடு செய்வதை இது உறுதி செய்கிறது. இந்த குழுவானது மூன்று மாதங்களுக்கு, கூடுதல் கொள்ளவு கொண்ட விமானங்களுக்கு மட்டுமே இந்த ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இந்த விமான துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aviation Ministry says Jet Airways’s slot allocation only temporary

These slots will be made available to Jet as and when they revive their operations.
Story first published: Tuesday, April 23, 2019, 22:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X