பணத்தை கட்டு.. இல்லன வான்கடே மைதானத்தை விட்டு வெளியே போ..மிரட்டும் மகாராஷ்டிரா அரசு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : மைதானத்திற்கான பாக்கி தொகையை கட்டு இல்லையேல் வெளியேறு என்று மகாராஷ்டிரா அரசு, மும்பை கிரிகெட் வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

120 கோடி ரூபாய் பாக்கி தொகையை கட்டிவிட்டு, லீஸ் ஒப்பந்தத்தை புதுப்பியுங்கள் இல்லையேல் வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்தோ இடைக்கால கூட்டமோ அல்லது எந்தவொரு பேச்சுவார்த்தையோ மே-3 வரை எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளது இந்த அரசு.

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானம் உலகப் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்று. இந்த மைதானம் 43,977.93 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த கிரிகெட் மைதானம் மகாராஷ்டிரா அரசுக்கு சொந்தமானது. இந்த வான் கடே கிரிகெட் மைதானத்தை கடந்த 50 வருடத்திற்கு முன்பு மும்பை கிரிக்கெட் சங்கம் லீஸ்க்கு பெற்றது.

தாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு தாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு

ரூ.120 கோடி பாக்கியை கட்டுங்கள்

ரூ.120 கோடி பாக்கியை கட்டுங்கள்

எனினும் இந்த லீஸ் கடந்த வருடம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் கிரிகெட் வாரியம் இதுவரை இந்த லீஸை புதுப்பிக்கவில்லை. அதோடு மகாராஷ்டிரா அரசுக்கு 120 கோடி ரூபாய் பாக்கியும் வைத்துள்ளது.

பணத்தை கட்டி லீஸை புதிப்பியுங்கள்

பணத்தை கட்டி லீஸை புதிப்பியுங்கள்

இந்த நிலையில் 120 கோடி ரூபாய் பாக்கி பணத்தை கட்டுங்கள். அதன்பின் லீஸ்-ஐ புதுப்பியுங்கள்.இல்லையேல் மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என்று மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு மகாராஷ்டிரா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கிரிகெட் சங்கத்திற்கு இது மிக சிறிய தொகை

கிரிகெட் சங்கத்திற்கு இது மிக சிறிய தொகை

நோட்டீஸ் அனுப்பிய மும்பை கலெக்டர் இதுகுறித்து கூறியதாவது, பாக்கி தொகை குறித்த பிரச்சனை இருக்கும்போதே, மும்பை கிரிக்கெட் சங்கம் லீஸ்க்கு விண்ணப்பித்துள்ளது. அவர்களுடைய செயலை பார்க்கும்பொழுது 120 கோடி ரூபாய் மிக சிறிய தொகைதான்.

இடைக்கால கூட்டமோ & பேச்சு வார்த்தையோ கிடையாது

இடைக்கால கூட்டமோ & பேச்சு வார்த்தையோ கிடையாது

இருப்பினும் இடைக்கால கூட்டமோ அல்லது கால நீட்டிப்போ கிடையாது என்றும், மே 3-ம் தேதி கூட்டத்திற்குப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் மகாராஸ்டிரா அரசு அறிவித்துள்ளது.

வரும் மே மாதத்தில் 2-போட்டிகள்

வரும் மே மாதத்தில் 2-போட்டிகள்

இந்த கிரிகெட் மைதானம் 1975- ம் ஆண்டு கட்டப்பட்டது. 2011-ல் உலக கோப்பைக்காக புதுப்பிக்கபட்டது. இது மும்பை ராஞ்சி அணியின் வீடு என்றும் கூறப்படுகிறது.இந்த கிரிகெட் மைதானம் சுமார் 33,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக் கூடிய அளவில் உள்ள மைதானமாகும். இதோடு வரும் மே மாதத்தில் 2 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pay Rs 120-cr dues or vacate Wankhede Stadium

Maharashtra government has sent a notice to the Mumbai Cricket Association asking it to pay Rs 120 crore towards unpaid dues and lease renewal. If failing which it will have to vacate premises of the iconic Wankhede Stadium in south Mumbai.
Story first published: Tuesday, April 23, 2019, 9:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X