தாமதமாகும் ரயில்வே திட்டங்களால் அதிகரிக்கும் செலவுகள்.. ரூ.2.21 லட்சம் கோடி அதிகரிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்திய மத்திய ரயில்வே துறையில் 344 ரயில்வே திட்டங்களில் 5ல் 3ன்று பங்கு திட்டங்கள், பல்வேறு காரணங்களால் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிக அளவு செலாவாகிறது என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதம் காரணமாக 205 திட்டங்களுக்கான செலவு 2.21 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக செலவாகியுள்ளது என்று திட்ட அமல் படுத்தும் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமல்படுத்தல் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி இந்திய ரயில்வேயின் 205 திட்டங்களுக்கான செலவு ரூ.2.21 லட்சம் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளதே இந்த செலவின அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் அதிகரிக்கும் நஷ்டம்

ரயில்வே துறையில் அதிகரிக்கும் நஷ்டம்

தற்போது சுமார் 150 கோடி ரூபாய்க்கும் மேலான அரசு திட்டங்களை புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கண்காணித்து வருகிறது. இதன்படி டிசம்பர் 2018 நிலவரப்படி 205 ரயில்வே திட்டங்களின் மொத்த செலவு 1,68,116 கோடி ரூபாயாகும். ஆனால், இந்தத் திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதமாவாதால் மொத்த செலவு 3,89,745 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு கிட்டதட்ட 131.8 சதவிகிதம் உயர்வாகும். இதன் மூலம் அரசுக்கு 2.21 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

94 திட்டங்களில்  நஷ்டம் அதிகரிப்பு

94 திட்டங்களில் நஷ்டம் அதிகரிப்பு

இந்திய ரயில்வேயின் 367 திட்டங்களை இந்த அமைச்சகம் கண்கானித்து வருகிறது. மேலும் இந்த ரயில்வே திட்டத்தில் 94 திட்டங்கள் 1மாதத்திலிருந்து 324 மாதங்களாக ஆகின்றது. இதனால் செலவினங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது என்றும் அறிவித்துள்ளது.

மின் சார துறையிலும் செலவு அதிகம்

மின் சார துறையிலும் செலவு அதிகம்

அதேசமயம் மின்சார துறையிலும் செலவினங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. 90 திட்டங்கள் இந்த மின்சார துறையால் கண்கானிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்சாரத் துறையில் 40 திட்டங்களுக்கான செலவு 63,334.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த செலவு ரூ.2.36,165 கோடியாக அதிகரிப்பு

மொத்த செலவு ரூ.2.36,165 கோடியாக அதிகரிப்பு

இந்த 40 திட்டங்களுக்கான மொத்த செலவு 1,72,830.6 கோடி ரூபாயாகும். ஆனால் இதற்கான செலவுத் தொகை 2,36,165.5 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின் படி 95 திட்டங்களில், 56 திட்டங்களின் செயல்பாடுகள் இரண்டு மாதத்திலிருந்து 147 மாதங்களாக அதிகரித்துள்ளது.

சாலை &போக்கு வரத்து துறையிலும் செலவு அதிகரிப்பு

சாலை &போக்கு வரத்து துறையிலும் செலவு அதிகரிப்பு

மூன்றாவது பெரிய செலவு தொகை அதிகரிப்பு துறையாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைகள் உள்ளது. இதில் சுமார் 605 திட்டங்கள் இந்த அமைச்சகத்தின் மூலமாக கண்கானிக்கப்பட்டு வருகிறது. தற்போது 49 திட்டங்கள் கால தாமதமான செயல்பாடுகளாலும் பல்வேறு காரணிகளாலும் செலவுகள் அதிகரித்திப்பதாக அந்தந்த துறைகள் அறிவித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: railway ரயில்வே
English summary

Railway projects report cost overrun of Rs.2.21lakh crore

indian railways account for nearly threefifths of 344 central sector projects that are facing huge cost overrun due to delay in implementation for various reason.
Story first published: Tuesday, April 23, 2019, 8:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X