Appraisal-ல் தோற்ற Disney CEO.! ரூ.450 கோடி வாங்கியவருக்கு இனி ரூ.95 கோடி தான் சம்பளமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகப் புகழ் மார்வெல் அவெஞ்சர்களை நம்மூர் சத்தியம் தியேட்டர்களுக்கு கொண்டு வந்தவர்கள் Disney நிறுவனத்தினர்கள் தான். ஆம். Disney நிறுவனம் தான் அவெஞ்சர் கதாபாத்திரங்களை உருவாக்கிய மார்வெல் நிறுவனத்தின் தாய் நிறுவனம். Disney நிறுவனத்தைன் CEO முதன்மைச் செயல் அதிகாரியாக பாப் இகர் (Bob Iger)நிர்வகித்து வருகிறார்.

உலகமே அவெஞ்சரின் எண்ட் கேம் படத்துக்காக காத்திருக்கிறது. ஆனால் Disney நிறுவனமோ தன் முதன்மைச் செயல் அதிகாரி பாப் இகரின் சம்பளம் மிக அதிகமாக இருக்கிறது. அதைக் குறைக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சொல்வது வெளியாட்கள் இல்லை, Disney நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் தான்.

இந்த பிரச்னையை அப்பட்டமாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் வால்ட் டிஸ்னியின் மகள் அபிகெயில் டிஸ்னி தான். இதை பல ஆங்கில ஊடகங்களிலும், மேடைகளிலும் சொல்லி தன் நியாயத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் விளைவு.. காப்பர் ஏற்றுமதி 70% வீழ்ச்சி.. இறக்குமதி அதிகரிப்பு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் விளைவு.. காப்பர் ஏற்றுமதி 70% வீழ்ச்சி.. இறக்குமதி அதிகரிப்பு

அபிகெயில் டிச்னி

அபிகெயில் டிச்னி

அவர் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு கொடுத்த பேட்டியில் "கார்ப்பரேட் அமெரிக்காவுக்கு மிக அதிகமாக சம்பளம் கொடுத்து வருகிறோம். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரிகளுக்கும் (CEO) மிக அதிகமாக சம்பளம் கொடுக்கிறோம்." என்றார். இப்போது வரை Disney நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கும் பாப் இகர் தன் சம்பளப் பிரச்னை குறித்து எதையும் பேச வில்லை.

சராசரியை சம்பளம்

சராசரியை சம்பளம்

ஒரு நிறுவனத்தில் 250 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வருடத்தில் கொடுக்கும் மொத்த சம்பளம் + போனஸ் + மற்ற சலுகைகளை எல்லாம் கூட்டினால் 1.50 கோடி ரூபாய் வருகிறது என வைத்துக் கொள்வோம். இந்த 1,50,00,000-த்தை வேலை பார்க்கும் மொத்த நபர்களான 250-ஆல் வகுத்தால் வரும் விடை 60,000. ஆக ஒரு ஊழியருக்கு ஒரு வருடத்தில் 60,000 ரூபாயை சம்பளமாகக் கொடுக்கிறது. இதைத் தான் மீடியன் சம்பளம் அல்லது சராசரி சம்பளம் என்பார்கள்.

500 மடங்கா

500 மடங்கா

டிஸ்னியில் வேலை பார்ப்பவர்களின் ஆண்டு சராசரி சம்பளம் 1,31,200 டாலர் தான். ஆனால் ஒரு சராசரி Disney நிறுவன ஊழியரின் சம்பளத்தை விட 500 மடங்கு கூடுதலாக 6,56,00,000 டாலர் தொகையை சம்பளமாக மட்டும் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் பெற்றார் Disney நிறுவனத்தைன் முதன்மைச் செயல் அதிகாரி பாப் இகர்.

அப்படி என்ன சாதித்தார்

அப்படி என்ன சாதித்தார்

அதோடு 35 மில்லியன் டாலர் மதிப்புக்கு Disney
நிறுவன பங்குகளை வேறு பெற்று இருக்கிறார். ஆக 100.6 மில்லியன் டாலர் மதிப்புக்கு சொத்துக்கள், பணம், சம்பளம் என பெற்று இருக்கிறார். இவ்வளவு கொட்டிக் கொடுக்கும் அளவுக்கு, பாப் இகர் எந்த ஒரு பெரிய விஷயத்தையும் சாதிக்கவில்லை என்பது என் கருத்து. என்னைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய தொகைக்கு கடவுளே தகுதியற்றவர் தான் என குற்றம் சாட்டுகிறார் அபிகெயில் டிஸ்னி.

2018 - 19 நிதி ஆண்டுக்கு

2018 - 19 நிதி ஆண்டுக்கு

இந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு Disney நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியின் அடிப்படைச் சம்பள உயர்வை 5 லட்சம் டாலரில் இருந்து 3 லட்சம் டாலராக குறைத்திருக்கிறார்கள். அதோடு கேஷ் போனஸை 20 மில்லியன் டாலரில் இருந்து 12 மில்லியன் டாலராக குறைத்திருக்கிறார்கள். நீண்ட காலத்துக்கு வழங்கும் ஊக்கத் தொகையை 25 மில்லியன் டாலரில் இருந்து 20 மில்லியனாக குறைத்திருக்கிறார்களாம்.

அரசிடம் தெரிவிப்பு

அரசிடம் தெரிவிப்பு

அமெரிக்க பங்குச் சந்தைகளிடமே Disney நிறுவனம் தன் முதன்மைச் செயல் அதிகாரியின் சம்பளத்தைத் குறைத்திருக்கும் விஷயத்தை பைசா வித்தியாசம் இல்லாமல் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆகையால் Disney நிறுவன முதன்மைச் செயல் அதிகாரியின் சம்பளம் 450 கோடி ரூபாயில் இருந்து 95 கோடி ரூபாய்க்கு சரிந்திருப்பது உறுதி ஆகிறது. இந்த வருட முதல் appraisal நம் Disney நிறுவன சிஇஓ-க்கே அப்படிப்படதாகத் தான் அமைந்திருக்கிறது. நமக்கு என்ன ஆகுமோ..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Disney ceo bog igers compensation and remuneration has reduced to 95 crore for this year

Disney ceo bog igers compensation and remuneration has reduced to 95 crore for this year
Story first published: Wednesday, April 24, 2019, 13:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X