H1-B Visa-க்கு அலையவிடும் அமெரிக்கா வேண்டாம், அன்பு காட்டும் கனடா போதும்! நிமிர்ந்த இந்தியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: அமெரிக்கா, இந்தியர்களை வெறி கொண்டு துரத்திக் கொண்டிருப்பதும், இனி இந்தியர்களை உள்ளேயே நுழைய முடியாத படிக்கு H1-B Visa சட்டங்களை கடுமையாக்குவதும் அதிபர் ட்ரம்பின் நித்திய திருவிளையாடல்களில் ஒன்றாக இருக்கிறது.

எப்போதும் நம் மீது கடுமை காட்டும் அமெரிக்கா மீது நம் இந்தியர்களுக்கு சலிப்பே வராதா..? பிழைக்க வேறு நல்ல நாடுகளே இல்லையா..? என பலரும் கேள்வி கேட்பார்கள். ஆனால் முதல் முறையாக செயலில் பதில் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள் இந்தியர்கள்.

அமெரிக்கா கொடுக்காத மரியாதையை, கனடா கொடுக்கிறது, நான் கனடாவில் வாழ்ந்துவிட்டுப் போகிறேனே என பலரும் அமெரிக்காவுக்கு இணையாக கனடா நாட்டிலும் குடியேறி வருகிறார்கள் நம் இந்தியர்கள்.

இந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி  லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம் இந்தியாவில் டிக் டாக் தடை..தினசரி லட்சம் டாலர் நஷ்டம்.. 250 வேலைகள் இழக்கும் அபாயம்

அமெரிக்கா  H1-B Visa

அமெரிக்கா H1-B Visa

தற்போதைய கணக்குப் படி அமெரிக்கா ஒரு ஆண்டில் 60,000 (பொது) + 25,000 (அமெரிக்காவில் உயர் கல்வி படித்தவர்கள் சிறப்பு கோட்டா) = 85,000 H1-B Visa வழங்குகிறது. அதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 01, 2019 முதல் ஏப்ரல் 05, 2019-க்குள்ளேயே சில லட்சங்களுக்கு மேல் விண்ணப்பித்து தள்ளிவிட்டார்கள். இதில் அமெரிக்காவில் மேல் படிப்பு படித்திருக்க வேண்டிய கட்டாயம் வலுபெற்று வருவதால், அமெரிக்கா மீதான மோகம் கொஞ்சம் குறையத் தொடங்கி இருக்கிறது.

கனடா திட்டம்

கனடா திட்டம்

இன்னொரு பக்கம் கனடா. இந்தியர்களை மட்டும் அல்ல உலகப் பிரஜைகளை மரியாதையோடு நடத்தும் நாடு. கடந்த 2017-ம் ஆண்டில் Global Skills Strategy என ஒரு திட்டத்தைத் தொடங்கினார்கள். உலக அள்வில், தொழில்நுட்பத் துறையில் அதிக திறன் படைத்தவர்களை கனடாவில் குடியேற வைப்பது தான் இந்த திட்ட நோக்கம். திட்டத்தை அழகாக நிறைவேற்றியும் வருகிறார்கள்.

3,30,000 பேர்

3,30,000 பேர்

இந்த திட்டப்படி 2018-ம் ஆண்டு அதிக திறன் கொண்ட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெக் பணியாளர்கள் 3,10,000 பேருக்கு கனடாவில் நிரந்தரமாக இருக்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இந்த 2019-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 3,30,000 ஆக உயர்த்தி இருக்கிறார்கள். இது போக நவம்பர் 2018 வரையான ஆண்டில், அதிக திறன் படைத்தவர்கள் என்கிற பெயரில் 40,833 வேலைகள் மற்றும் 3,625 விண்ணப்பங்களுக்கு அனுமதி கொடுத்து கனடா விசா கொடுத்திருக்கிறார்கள்.

நீட்டிப்பு

நீட்டிப்பு

அமெரிக்காவில் பொதுவாக ஒரு நபருக்கு ஒரு முறை H1-B Visa வழங்கினால் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை பார்க்கலாம். மீண்டும் ஒரு முறை மூன்று ஆண்டுகளுக்கு H1-B Visa காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் பக்கம் வந்து விட வேண்டியது தான். அதன்பிறகும் அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்றால் நிரந்தரமாக குடியேற பச்சை அட்டைக்கு விண்னப்பிக்க வேண்டியது தான். ஆனால் இன்று நம் ட்ரம்ப் வந்த பிறகு, இந்தியர்கள் தங்களின் H1-B Visa நீட்டிப்பை பெறுவது கூட மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது.

மோசமான ட்ரம்ப்

மோசமான ட்ரம்ப்

ஓபாமா காலத்தில் நீட்டிப்பு வழங்கினால் 3 ஆண்டுகளுக்கு வழங்குவார்கள் இல்லை என்றால் நீட்டிப்பை மறுப்பார்கள். ஆனால் ட்ரம்ப் காலத்தில் தான் 5 நாட்கள் தொடங்கி 50 நாட்கள் வரை என தங்கள் இஷ்டத்துக்கு நீட்டிப்பு வழங்குகிறார்கள். எனவே அமெரிக்கா மீதான மோகம் குறைந்து கொண்டே வருதாக StackRaft என்கிற ஐடி ஸ்டார்ட் அப் நிறுவனம் சொல்கிறது.

H1-B Visa வைத்திருப்பவர்கள்

H1-B Visa வைத்திருப்பவர்கள்

பொதுவாக அமெரிக்காவில் H1-B Visa-வின் கீழ் வேலை பார்த்தவர்களுக்கு எந்த நாட்டிலும் எளிதாக வேலை கிடைத்துவிடும். அவர்களுக்கு முன்னுரிமையும் கொடுக்கப்படும் என்கிறார் StackRaft நிறுவனர் வர்திகா மானஸ்வி. இப்படி H1-B Visa விசாவில் அமெரிக்கா போன இந்தியர்களில் 3-ல் ஒரு பங்கினர் தங்களின் விசா காலம் முடிந்த பின் கனடாவுக்கு சென்றுவிடுவதாகவும் சொல்கிறார்.

நிரந்தரமாக குடியேறுதல்

நிரந்தரமாக குடியேறுதல்

ஐடி துறையில் அதிக திறன் படைத்த ஊழியர்கள் கூட அமெரிக்காவிலேயே நிரந்தரமாக குடியேற வருடக்கணக்கில் அலைய வேண்டி இருக்கும். அதன் பிறகும் கிடைக்குமா, கிடைக்காதா என சந்தேகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் கனடாவில் நிலைமை தலைகீழ். ஒரு அதிக திறன் படைத்த ஐடி ஊழியர் நிரந்தரமாக கனடாவில் குடியேற விரும்பினால் அடுத்த சில மாதங்களில் தேவையான அனைத்து அனுமதிகள் டாக்குமெண்டுகள் கையில் இருக்கும்.

சம்பளம் குறைவு

சம்பளம் குறைவு

ஆனால் ஒரே பிரச்னை, சம்பளம். ஒரு ப்ராஜெட்டுக்கு அமெரிக்காவில் கிடைக்கும் கூலியை விட, கனடாவில் குறைவாகத் தான் கிடைக்கும். எது எப்படியோ, டெக் சார்ந்த அறிவாளிகள், அதிக திறன் படைத்த டெக் ஊழியர்களை வளைக்க ஆரம்பித்துவிட்டது கனடா. அதை நம் இந்தியர்களும் ஜாலியாக பயன்படுத்திக் கொண்டு கனடாவில் குடியேறவும் தொடங்கிவிட்டார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H1-B Visa holding indians are taking permanent resident in canada due to usa visa extension discrimination

H1-B Visa holding indians are taking permanant resident in canada due to usa visa extension discrimination
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X