39000-த்தில் வலு இல்லாத Sensex..! வழுக்கி விழுந்த Nifty..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 39,101 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 38,730 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. நேற்று மாலை சென்செக்ஸ் 39,054-க்கு நிறைவடைந்தது நினைவிருக்கலாம்.

இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கும் போதே சென்செக்ஸ் சுமார் 47 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. அடுத்தடுத்து ஏற்றம் கண்டாலும், வர்த்தக நேரத்தின் கடைசி சில மணி நேரங்களில் இறக்கம் கண்டு 323 புள்ளிகள் ஒரே நாளில் சரிந்தது.

கடந்த ஏப்ரல் 22, 2019 அன்று ஒரே நாளில் 493 புள்ளிகள் இறக்கம் கண்டது. அதை ஏப்ரல் 24, 2019 அன்று ஒரே நாளில் 490 புள்ளிகள் ஏற்றம் கண்டது, இன்று ஏப்ரல் 24, 2019-ல் ஒரே நாளில் 323 புள்ளிகள் இறக்கம் கண்டது என சென்செக்ஸ் தன் வலுவான சப்போர்ட் மற்றும் ரெசிஸ்என்ஸுக்கு அல்லாடிக் கொண்டிருக்கிறது.

342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள் 342 ஸ்டார்ட்-அப்களுக்கு ஏஞ்சல் வரி விலக்கு..சிலருக்கு மட்டும் நோட்டீஸ்..குழப்பத்தில் நிறுவனர்கள்

கடைசி நேர பயம்

கடைசி நேர பயம்

காலையில் இருந்து பங்குச் சந்தைக்கு வலு சேர்க்கும் விதத்தில் டைட்டன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு வாழ் நாள் சாதனை படைத்தது, நெல்கோ மற்றும் டாடா நிறுவனங்களுக்கான VSAT தொலைத் தொடர்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, க்ளென்மார்க் நிறுவனம் தன் Momate Rhino metered nasal spray-க்களை விற்க ரஷ்யாவில் அனுமதி கிடைத்தது, கெடிலா நிறுவனத்தின் Leflunomide Tablets USP மருந்துகளை USFDA அனுமதித்தது என பல பாசிட்டிவ் செய்திகள் வந்து கொண்டு தான் இருந்தன.

நெகட்டிவ் செய்திகள்

நெகட்டிவ் செய்திகள்

மாருதி சுஸிகியின் மார்ச் காலாண்டு முடிவுகள் கொஞ்சம் சுமாராக இருந்தது, கச்சா எண்ணெய் விலை 75 டாலரைத் தொட்டது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ரூபாய்க்கு மேல் வர்த்தகமானது, பல்வேறு நிஃப்டி இண்டெக்ஸ் சார்ந்த பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமானது போன்ற செய்திகள் சந்தையில் ஒரு வித பயத்தைப் படரவிட்டு 2.30 மணிக்கு மேல் சந்தை சரியத் தொடங்கிவிட்டது. அதுவரை சந்தை 39,000 புள்ளிகளை உரசிக் கொண்டிருந்தது.

எப்போது மாறும் டிரெண்டு
 

எப்போது மாறும் டிரெண்டு

கடந்த ஏப்ரல் 11, 2019 செய்தியில், சென்செக்ஸ் ஒரு வலுவான சப்போர்ட் (38,585) மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸ் (39,000) புள்ளிகளுக்கு மத்தியில் ஃப்ளாட்டாக கடந்த எட்டு வர்த்தக நாட்கள் வர்த்தகமாகி வந்ததையும் சொல்லி இருந்தோம். ஆனால் இன்று வரை அந்த கரெக்‌ஷன் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆம் இது ஒரு கரெக்‌ஷன் தான். இந்த கரெக்‌ஷனுக்குப் பின் மிக வலுவாக சென்செக்ஸ் இந்த 39,000 என்கிற மாய எண்ணை உடைத்துக் கொண்டு வர்த்தகமாகும் என எதிர்பார்க்கலாம்.

39000

39000

அதே போல கடந்த ஏப்ரல் 15, 2019 அன்றே, சென்செக்ஸ் வரலாற்றில் 39,000 புள்ளிகளை ஒரு மாய எண் எனச் சொல்லி இருந்தோம். இந்த 39,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் தன் வாழ் நாளிலேயே நான்கு முறை மட்டுமே குளோஸ் ஆகி இருக்கிறது. எனவே நாளையும் இந்த புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து முதலில் ஏற்றத்துக்கு வலு சேர்க்கட்டும். அதன் பின் வலுவான ஏற்றத்தைப் பற்றி யோசிக்கலாம். ஆக இன்னமும் கூட 39,000 என்பது ஒரு வலுவான ரெசிஸ்டென்ஸ் தான் எனச் சொல்லி இருந்தோம். அதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது நம் சென்செக்ஸ். இப்போதும் 39,000 வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது.

சென்செக்ஸ் ரெசிஸ்டென்ஸ்

சென்செக்ஸ் ரெசிஸ்டென்ஸ்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸுக்கு முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக 39,000 லெவல்கள் இருக்கும். அதை உடைத்து மேலே போனால் 39,165 புள்ளிகளும், நாளை ஒரே நாளில் அதற்கு மேல் போக வாய்ப்பில்லை. அப்படிப் போனால் 39,350-ஐ உச்சகட்ட இலக்காக வைத்துக் கொள்ளலாம்.

சென்செக்ஸ் சப்போர்ட்

சென்செக்ஸ் சப்போர்ட்

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸுக்கு முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக 38,650 லெவல்கள் இருக்கிறது. அதை அப்படியே வைத்துக் கொள்ளலாம். ஏப்ரல் 01, 2019-க்கு பிறகு ஒரு நாள் கூட சென்செக்ஸ் 38,500-க்கு கீழ் வர்த்தகம் நிறைவடையவில்லை. எனவே அந்த 38,500-ஐ இரண்டாம் நிலை சப்போர்ட்டாகவும், 38,320-ஐ அடுத்த வலுவான சப்போர்ட்டாகவும் வைத்துக் கொள்ளலாம்.

நிஃப்டி 50

நிஃப்டி 50

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,735 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,642 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் நிஃப்டி50 11,726 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

ஏன் ஃப்ளாட்

ஏன் ஃப்ளாட்

சென்செக்ஸைப் போலவே நிஃப்டியும் ஒரு வலுவான சப்போர்ட் (11,585) மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸ் (11735)-க்கு உள்ளேயே சின்ன சின்ன ஏற்ற இறக்கத்தோடு வர்த்தகமாகி வந்திருக்கிறது என ஏப்ரல் 11, 2019-ல் சொல்லி இருந்தோம். ஆக ஃப்ளாட் டிரெண்டு உறுதியாகிறது. எனவே இந்த ஃப்ளாட் டிரெண்டை சந்தை உடைத்துக் கொண்டு வெளியேற வலுவான ட்ரிக்கர்கள் தேவை. இந்த கரெக்‌ஷன் காலம் முடிந்து நிஃப்டி 11735-ஐ உடைத்துக் கொண்டு வெளி வரும் போது நல்ல ஏற்றம் காணும்.

11700

11700

சென்செக்ஸுக்கு 39000 புள்ளிகளைப் போல நிஃப்டிக்கு 11,700-ஐச் மாய எண்ணாக சொல்லி இருந்தோம். சொல்லி வைத்தாற் போல நிஃப்டிக்கு நாம் குறித்திருக்கும் 11,700 புள்ளிகளுக்கு மேல் இதுவரை நான்கு முறை மட்டுமே சந்தை நிறைவடைந்திருக்கிறது. ஆக இன்னமும் 11,700 வலுவான ரெசிஸ்டென்ஸ் தான். இனி நிஃப்டியின் மாய எண் பதவியை நம் 11735-க்கு கொடுத்து விடுவோம். அதோடு 11,735-ஐ முதல் வலுவான ரெசிஸ்டென்ஸாகவும் வைத்துக் கொள்வோம். அதற்கு மேல் 11760 மற்றும் 11,810 புள்ளிகளை வைத்துக் கொள்ளலாம்.

நிஃப்டி சப்போர்ட்

நிஃப்டி சப்போர்ட்

நிஃப்டி 50 இண்டெக்ஸுக்கு முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக11,575 லெவல்கள் இருக்கும். ஏப்ரல் 01, 2019-க்கு பிறகு ஒரு நாள் கூட சென்செக்ஸ் இந்த 11,575-க்கு கீழ் வர்த்தகம் நிறைவடையவில்லை. இரண்டாம் நிலை சப்போர்ட்டாக 11,515-ஐ அடுத்த வலுவான சப்போர்ட்டாகவும் வைத்துக் கொள்ளலாம்.

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

சென்செக்ஸ் & பி.ஸ்.இ

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 27 பங்குகள் இறக்கத்திலும், 03 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,658 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,104 பங்குகள் ஏற்றத்திலும், 1,399 பங்குகள் இறக்கத்திலும், 155 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,658 பங்குகளில் 44 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 86 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 39 பங்குகள் இறக்கத்திலும், 11 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.

செக்டோரியல் இண்டெக்ஸ்

செக்டோரியல் இண்டெக்ஸ்

ரியல் எஸ்டேட் இண்டெக்ஸ் சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற அனைத்து இண்டெக்ஸ் சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ஓஎன்ஜிசி, மாருதி சுஸிகி, ரிலையன்ஸ், யெஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஏற்ற & இறக்கப் பங்குகள்

ஏற்ற & இறக்கப் பங்குகள்

அல்ட்ராடெக் சிமெண்ட், க்ராசிம், பாரத் பெட்ரோலியம், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், யுபிஎல் போன்ற பங்குகள் சராசரியாக 2 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், டாடா ஸ்டீல், வேதாந்தா, இந்தியா புல்ஸ் ஹவுசிங், ஹிண்டால்கோ போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 2.50 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. குறிப்பாக பார்தி இன்ஃப்ராடெல் 10% இறக்கத்தில் வர்த்தகாமாயின.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஏப்ரல் 24, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் -0.23% வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அதோடு இன்று ஐரோப்பிய சந்தைகளில் லண்டனின் எஃப்.டி.எஃப்.இ -0.52%, பிரான்சின் சி ஏ சி --0.23% , ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் -013% வர்த்தகமாகி வருகின்றன. ஆசிய பங்குச் சந்தைகளில் ஜப்பானின் நிக்கி மற்ரும் தைவானின் தைவான் வெயிடெட் என இரனுட் சந்தைகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகமாயின. மற்ற நைத்து சந்தைகளும் இறக்கத்தில் தான் வர்த்தகமாயின. அதிகபட்சமாக சீனாவின் ஷாங்காய் காம்போசைட் -2.43% இறக்கத்திலும் வர்த்தகமாயின.

டாலர் Vs ரூபாய்

டாலர் Vs ரூபாய்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.26 ரூபாய்க்கு வர்த்தகமாகி நிறைவடைந்திருக்கிறது. இத்தனை நாள் பயந்து கொண்டிருந்த 70 ரூபாயைத் தொட்டு விட்டது இந்திய ரூபாய். அதே நேரத்தில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலையும் பேரல் 74.44 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

again sensex fall down to 39000 mark and nifty fall down to from 11700 mark

again sensex fall down to 39000 mark and nifty fall down to from 11700 mark
Story first published: Thursday, April 25, 2019, 17:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X