ரூ.9.45 கோடி நஷ்ட ஈடு கேட்டு விவசாயிகள் மீது வழக்கு தொடுத்த Pepsico.! பிரச்னையில் விவசாயிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஹமதாபாத்: அமெரிக்காவின் பிரம்மாண்ட குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான Pepsico நிறுவனம் குஜராத்தில் உள்ள ஒன்பது விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. படித்தது சரி தான் விவசாயிகள் மீது Pepsico நிறுவனம் வழக்கு பதிவு செய்திருக்கிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு எதிராக நடத்தப்படும் Copyright - IPR ரக வழக்கு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Pepsico நிறுவனம் மட்டுமே தன் பிராண்டெட் லேஸ் சிப்ஸ்களை (Lays Chips) தயாரிக்க பயன்படுத்தும் ஒரு ஸ்பெஷல் ரக உருளைக் கிழங்கை இந்த 9 விவசாயிகள் பயிரிட்டு விற்று இருக்கிறார்களாம். அதற்காக ஒவ்வொரு விவசாயியும் 1.05 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கேட்டிருக்கிறது Pepsico நிறுவனம்.

 

2018-ம் ஆண்டில் இருந்து, குஜராத்தின் 6 விவசாயிகள் மீது சில நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி வருகிறது Pepsico. இப்போது கடந்த ஜனவரி 2019-ல் மேலும் 3 பேர் மீது வழக்கு தொடுத்திருக்கிறது. கீழ் நீதிமன்றங்களில் சரியான தீர்வு கிடைக்காத்தால் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறது Pepsico. நாளை அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது இந்த 9 விவசாயிகள் வழக்கு.

ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே

வழக்கு பின்னனி

வழக்கு பின்னனி

FL 1867 and Wischip ஆகிய இரண்டு ரக உருளைக் கிழங்கின் ஹைப்பிரிட் கலவையில் தயாரிக்கப்பட்டது தான் இந்த FL 2027 ரக உருளைக் கிழங்குகள். இந்த ரக உருளைக் கிழங்குகளைத் தான் Pepsico நிறுவனம் தன்னுடைய லேஸ் பிராண்ட் சிப்ஸ்களுக்கு பயன்படுத்துகிறது. Protection of Plant Varieties and Farmers' Rights Act, 2001-ன் படி இந்த FL 2027 ரக உருளைக்கிழங்கை பயிரிடுபவராக தன்னை பதிவு செய்து கொண்டது Pepsico. இந்த FL 2027 விதையை பிராண்டெட் விதையாக பதிவு செய்யவில்லை.

இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் 2009-ம் ஆண்டில் தான் FL 2027 ரக உருளைக்கிழங்குகள் பயிரிடப்பட்டது. அதன் பின் FC 5 என்கிற பெயரில் இந்த FL 2027 ரக உருளைக்கிழங்குகளை பஞ்சாப்பில் உள்ள சில விவசாயிகளுக்கு மட்டும் பயிரிட அனுமதி கொடுத்தது Pepsico. அதையும் திரும்ப Pepsico நிறுவனமே வாங்கிக் கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பயிரிட அனுமதி கொடுத்தது. எக்காரணத்தைக் கொண்டும் FC 5 என்கிற FL 2027 ரக உருளைக்கிழங்குகளைப் பயிரிடும் விவசாயிகள், தங்கள் விளைச்சள்களை Pepsico தவிர வேறு யாருக்கும் விற்கக் கூடாது. இன்று வரை இப்படித் தான் இந்தியாவில் FC 5 ரக உருளைக்கிழங்குகள் பயிரிடப்படுகின்றன.

விதி மீறல்
 

விதி மீறல்

கடந்த ஜனவரி 2019-ல் குஜராத்தில் 3 விவசாயிகளும் இந்த FC 5 ரக உருளைக்கிழங்கை பயிரிட்டிருக்கிறார்கள் என்கிற விஷயம் Pepsico-க்கு தெரிய வருகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட உடனேயே, சில தனியார் துப்பறியும் நிறுவன உதவியுடன் Pepsico நிறுவனம் சில மாதிரி உருளைக்கிழங்குகளை விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டது.

சோதனை முடிவு

சோதனை முடிவு

சேகரித்த உருளைக்கிழங்கு மாதிரிகளை, சிம்லாவில் இருக்கும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்துக்கும் (Central Potato Research Institute, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் (Indian Council of Agricultural Research) டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். சோதனையின் முடிவில் Pepsico நினைத்தது போலவே இந்த 3 விவசாயிகளும் விதியை மீறி இருக்கிறார்கள். அது Pepsico நிறுவனம் மட்டுமே பயிரிட பதிவு செய்து கொண்ட FC 5 ரக உருளைக்கிழங்குகள் தான் எனக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

கீழ் நீதிமன்றத்தில் வழக்கு

கீழ் நீதிமன்றத்தில் வழக்கு

அதை ஆதாரமாக வைத்து தெஸா (Deesa) நகர ஒருங்கிணைந்த குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் 3 விவசயிகள் மீதும் வழக்கும் தொடுத்திருக்கிறார்கள். இந்த வழக்குக்கு முன்பே கடந்த 2018-ல் 6 விவசாயிகள் மீது இந்த காப்பிரைட் பிரச்னையைச் சொல்லியே சில வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கையும் சேர்த்து மொத்தம் 9 விவசாயிகள் Pepsico நிறுவனத்தின் பிடியில் சிக்கி இருக்கிறார்கள்.

கீழ் நீதிமன்ற ஆணையர்

கீழ் நீதிமன்ற ஆணையர்

தெஸா நகர நீதிமன்றம் இந்த பிரச்னையை விசாரிக்க, ஒரு நீதிமன்ற ஆணையரை நியமித்தது. நீதிமன்ற ஆணையர் விவசாயிகளின் நிலத்தை பார்வையிட்டு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். நீதிமன்ற ஆணையர் விவசாயிகளின் நிலத்தை பார்வையிட்ட பின், உருளைக்கிழங்குகளை பாதுகாத்து வைத்திருக்கும் பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள குளிர்சாதன குடோன்களைப் பார்வையிடச் சென்றிருக்கிறார். அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் பதில்

விவசாயிகள் பதில்

கேட்டால் விவசாயிகளே பதில் கொடுத்திருக்கிறார்கள். விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கின்றன. தெஸா நீதிமன்றம் விவசாயிகளின் நிலங்களைத் தான் பார்வையிடச் சொல்லி இருக்கிறார்கள். குளிர்சாதன குடோன்களை அல்ல என களத்தில் இறங்கி இருக்கிறார்கள். பிரச்னை வேண்டாம் என தெஸா நீதிமன்ற ஆணையர் பின் வாங்கி இருக்கிறார்.

அலஹாபாத் நீதிமன்றம்

அலஹாபாத் நீதிமன்றம்

எனவே Pepsico நிறுவனம், அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 18, 2019 அன்று இந்த மேல் முறையீடு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 3 விவசாயிகள் பியிருட்டு விளைவித்திருக்கும் தங்களுடைய FC 5 ரக விளைச்சல்களை விற்க தடை போட்டது. அதோடு தற்காலிகமாக அந்த ரக உருளைக்கிழங்குகளைப் பயிரிடவும் தடை விதித்திருக்கிறது. அதோடு சாபில் பாய் படேல் (Chabilbhai Patel), வினோத் படேல் (Vinod Patel), ஹரிபாய் படேல் (Haribhai Patel, ஆகியோரிடமும் பெப்ஸிகோ நிறுவனம் உரிமை கோருவது தொடர்பாக விளக்கம் கேட்டிருக்கிறது.

குளிர்சாதன குடோன்களையும் பார்வையிடலாம்

குளிர்சாதன குடோன்களையும் பார்வையிடலாம்

மேலும் Pepsico நிறுவனம் கேட்டுக் கொண்டது போலவே ஒரு நீதிமன்ற ஆணையரை அலஹாபாத் நீதிமன்றம் நியமித்திருக்கிறது. பராஸ் சுக்வானி தான் நீதிமன்ற ஆணையராக, இந்த பிரச்னையை விசாரித்து ஒரு அறிக்கை தயாரித்து அலஹாபாத் உயர் நீதிமன்றத்திடம் சமர்பிக்க இருக்கிறாராம். மேலும் இந்த பிரச்னைக்கு தொடர்புள்ள அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய விசாரிக்க நீதிமன்ற ஆணையருக்கு அனுமதி கொடுத்திருக்கிறது அலஹாபாத் உயர் நீதிமன்றம்.

மீண்டும் சோதனை

மீண்டும் சோதனை

மேலும் விவசாயிகள் எவ்வளவு கிலோ FC 5 ரக உருளைக்கிழங்கை விளைவித்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை பார்வையிட்டு நீதிமன்றத்திடம் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு மீண்டும் உருளைக்கிழங்கு மாதிரிகளை அரசு சோதனைக் கூடங்களுக்கு அனுப்பி, அது என்ன ரக உருளைக்கிழங்கு என்பதை உறுதி செய்து நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்பிக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது அலஹாபாத் உயர் நீதிமன்றம்.

அரசு தலையீடு

அரசு தலையீடு

விவசாய சங்கங்கள் மற்றும் யூனியன் செயற்பாட்டாளர்கள் ஒன்று சேர்ந்து கடந்த ஏப்ரல் 24, 2019 அன்று மத்திய விவசாய அமைச்சகத்துக்கு 194 விவசாயிகள் கையெழுத்திட்டு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில் விவசாயிகள் உரிமை காக்கப்பட வேண்டும், Protection of Plant Varieties and Farmers' Rights Act, 2001 பெயரில் pepsico நிறுவனத்திடம் சிக்கி இருக்கும் 9 விவசாயிகளை அரசு தலையிட்டு நியாயம் வழங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்களாம்.

விவசாயிகள் தரப்பு

விவசாயிகள் தரப்பு

Protection of Plant Varieties and Farmers' Rights Act, 2001 சட்டம் பிரிவு 64-ன் படி Pepsico நிறுவனம் விவசாயிகள் மீது வழக்கு தொடுத்திருக்கிறது. ஆனால் அதே சட்டம் பிரிவு 39-ன் படி ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைவிக்கும் பயிரைச் சேகரித்துக் கொள்ளவோ, பயன்படுத்தவோ, பயிரிடவோ, மறு பயிரிடவோ, பரிமாறிக் கொள்ளவோ, பகிர்ந்துக் கொள்ளவோ, விற்கவோ செய்யலாம். குறிப்பாக மேலே சொன்ன Protection of Plant Varieties and Farmers' Rights Act, 2001 சட்டப்படி பதிவு செய்யப்பட்ட விதைகளாக இருந்தாலும் விவசாயம் செய்யலாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த வழக்கே செல்லாது எனச் சொல்கிறார்கள். பிராண்டெட் விதைகளாக பதிவு செய்திருந்தால் தான் Pepsico சொல்வது போல எல்லா விவசாயிகளும் பொதுவாக அனுமதி இல்லாமல் விற்கக் கூடாது எனவும் தெளிவுபடுத்துகிறார்கள் விவசாயிகள்.

இந்த வழக்கில் ஜெயிப்பது ஏழை விவசாயியா..? இல்லை உலகை ஆளும் கார்பப்ரேட்டா..? பொருந்திருந்து பார்ப்போம். படித்த விவசாயிகளை தலை நிமிரட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

pepsico filed case against 9 farmers for cultivating copyright potato variety

pepsico filed case against 9 farmers for cultivating copyright potato variety
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more