ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : இந்திய ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் 25,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை மே மாதத்தில் வாங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதுவும் இரு தவனைகளாக வாங்க திட்டமிட்டுள்ளது.

 

இதில் முதல் கட்டமான நிதித் திரட்டலை 2019 - 2020-ம் நிதியாண்டில் மே 2- ம் தேதி 12,500 கோடியை வெளி சந்தையில் (OMO) வாங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இரண்டாவது தவணை குறித்து இன்னும் எதுவும் தகவல்கள் அறிவிக்கப்படவில்லை.

ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே


கடந்த 2018-ல் ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தாண்டில் மட்டும் நிதிக் கொள்ளை குழு இரு முறை கூடியது கவனிக்க தக்கது. இதில் இரு முறைகளும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை தலா 0.25 சதவிகிதம் குறைத்தது.

சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்

வட்டி விகிதத்தை குறைப்பது இல்லை
ஆனால் இந்த வட்டி குறைப்பின் முழு பலன் களும் அவற்றின் பல்வேறு கடன் களுக்காக வழக்கப்பட்டதாக தெரியவில்லை. சில வங்கிகள் மட்டுமே அதுவும் குறைந்த வட்டி விகிதத்தை குறைத்தன. இந்த நிலையில் வாராக்கடன் பிரச்சனையால் வங்கிகள் வாராக்கடனின் மதிப்பை குறைப்பதற்காக வங்கிகள் வட்டி விகிதத்தை குறைப்பது இல்லை.

ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே


இரு முறை வட்டி குறைப்பு பலன் இல்லை
இதன் காரணத்தினாலேயே ரிசர்வ் வங்கி இரு முறை வட்டி விகிதத்தை குறைத்தும் அதன் பலனை மக்களும் பெற முடியாமல், தொழில் நிறுவனங்களும் பெற முடியாமல் இருப்பதே உண்மையான நிலைமை. இது ஒட்டுமொத்த வளர்ச்சியில் பொருளாதாரமும் நினைத்த அளவு இல்லை.

வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம்
இதன் காரணமாகவே ரிசர்வ் வங்கி வெளி சந்தைகளில் கடன் பத்திரங்களை வாங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கடன் பத்திரங்கள் வாயிலான முதலீடின் மூலம் பணப்புழக்கமும் அதிகரிக்கும். இதனால் வங்கிகள் கடனுக்குக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம். இதன் மூலம் சிறு,குறு நிறுவனங்கள் வணிகர்கள் பயன்பெற முடியும். இதோடு வாகனக் கடன், வீட்டு வசதி கடன், தனி நபர் கடன் ஆகியவற்றிக்கான வட்டி குறைக்கப்பட்டால் மக்களும் பயன் பெறுவர் என்றும் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi ஆர்பிஐ
English summary

RBI to buy Rs.25000 crore of bonds in two installments

The Reserve Bank of India plans to buy Rs 25,000 crore worth of bonds in two installments from the secondary market in May
Story first published: Thursday, April 25, 2019, 13:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X