அதிகரித்திருக்கும் பயனாளர்கள்.. லாபத்தில் ட்விட்டர் நிறுவனம்.. விளம்பர வருவாய் அதிகம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க : ஸ்மார்ட் போன் உலகில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் என்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ட்விட்டர் சமூக வலைதளம் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் தனி இடத்தை பிடித்துள்ளது.

 

இந்த நிலையில் ட்விட்டர் சமூக வலைதளம் கடந்த செவ்வாய் கிழமையன்று வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் அதன் வருவாயும், ட்விட்டர் பயனாளர்களின் என்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளது.2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் ட்விட்டர் எதிர்பார்பை மிஞ்சிய பலனை அடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ட்விட்டர் மாதத்திற்கு 90 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதால், ட்விட்டரை மாதம் தோறும் சுமார் 33 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முடிவடைந்த காலாண்டில் ட்விட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை 22 லட்சம் குறைந்து 31.8 கோடியாக இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் இதுபோன்ற பொய்யான கணிப்புகள் பொய்யாகி விட்டன.

ஸ்பேம் கனக்குகளை நீக்கியது

ஸ்பேம் கனக்குகளை நீக்கியது

ட்விட்டர் தனது பாதுகாப்பையும் அதிகப்படுத்த பல ஸ்பேம் கணக்குகளை நீக்கியுள்ளது. இதே போல் அடுத்த காலாண்டிலும் இது போன்ற பணிகளை தொடர விருக்கிறது.

விளம்பரங்களை அதிகம் பார்வையிடும் பயனாளர்களையும் ட்விட்டர் தனியே அடையாளம் கண்டுள்ளது. இந்த காலாண்டில் அவர்களின் எண்ணிக்கை 13.4 கோடியாக உள்ளது. இது முந்தைய காலாண்டை விட 11% அதிகமாகும்.

அமெரிக்காவில் வருவாய் 25%

அமெரிக்காவில் வருவாய் 25%

அமெரிக்காவில் விளம்பர வருவாய் 25%

இதேபோல ட்விட்டரின் வருவாயும் 18% உயர்ந்துள்ளது,அதாவது 787 மில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 665 மில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்கதகக் விஷயம் என்னவெனில் அமெரிக்காவில் மட்டும் ட்விட்டரின் விளம்பர வருவாய் 25% கூடியிருக்கிறது.

விளம்பரங்கள் மூலமே வருவாய் அதிகம்
 

விளம்பரங்கள் மூலமே வருவாய் அதிகம்

ட்விட்டரின் வருவாயில் பெரும் பகுதி விளம்பரங்களிலிருந்து தொடர்ந்து வருகிறது. தரவு உரிம வருவாயும் குறிப்பிட்ட அளவில் அதிகரித்த வன்ணமே உள்ளது . இது குறிப்பாக 20 சதவிகிதம் அதிகரித்து ஆண்டுக்கு 107 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் அதிகரித்துள்ளது.

தினசரி பயனாளர்கள் அதிகம்

தினசரி பயனாளர்கள் அதிகம்

அதோடு தினசரி ட்விட்டரை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. 2019ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 134 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இதுவே கடந்த 2018-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பயனாளர்களின் எண்ணிக்கை 120 மில்லியன் ஆகும். ஆக நடப்பு ஆண்டோடு ஒப்பிடும் போது தற்போது 11 சதவிகிதம் பயனாளர்கள் அதிகரித்துள்ளனர்.

வரும் காலாண்டிலும் லாபம் அதிகரிக்கும்

வரும் காலாண்டிலும் லாபம் அதிகரிக்கும்

இந்த நிலையில் வால் ஸ்ட்ரீட் கணித்த அளவுக்கு வளர்ச்சியை ட்விட்டர் இந்த காலாண்டில் எட்டவில்லை எனினும் வரும் காலாண்டில் ட்விட்டர் தனது வருவாய் 770 மில்லியன் டாலரிலிருந்து 830 டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Twitter Earnings: First-Quarter Results Highlight Strong Execution

Twitter saw impressive growth in its first quarter, with revenue rising 18% year over year to $787 million. 
Story first published: Friday, April 26, 2019, 6:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X