ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் சம்பளம் பற்றி பேச யாரும் முன்வரவில்லையே: வினய் துபே வருத்தம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நிலுவையில் உள்ள ஊழியர்கள், பொறியாளர்கள் மற்றும் பைலட்களின் சம்பளத்தை வழங்குவது பற்றி வாய் திறந்து பேச நிறுவனத்தினரோ அல்லது வங்கிகளோ முன்வரவில்லையே என்று ஜெட் ஏர்வேஸின் தலைமை அதிகாரி வினய் துபே வருத்தத்துடன் தெரிவித்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது ஊழியர்களின் சம்பளத்தை வழங்க சுமார் 983 கோடி ரூபாய் கேட்டிருந்ததை எஸ்பிஐ வங்கி தலைமையிலான அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பு வழங்க மறுத்துவிட்டதை அடுத்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில் அதன் 20000 ஊழியர்களின் சம்பளம் என்னவாயிற்று என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

சேவை நிறுத்தம்
 

சேவை நிறுத்தம்

கடன் பிரச்சனை குத்தகை பாக்கி, பைலட்கள், ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி என அடுத்தடுத்த தீராக பிரச்சனையால் தொடர்ந்து நிறுவனத்தை நடத்த முடியாக ஜெட் ஏர்வேஸ் தனது விமான சேவையை கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நள்ளிரவோடு நிறுத்திக்கொண்டது.

யாரும் முன்வரவில்லையே

யாரும் முன்வரவில்லையே

நிறுவனத்தை தொடர்ந்து நடத்த தேவையான பணத்தை திரட்டுவதற்கு எஸ்பிஐ வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இது வரையிலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் யாரும் வராததால் ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளையும் விற்க முடியாமல் தவித்து வருகிறது.

ஸ்பைஸ்ஜெட்டுக்கு பறந்த விமானிகள்

ஸ்பைஸ்ஜெட்டுக்கு பறந்த விமானிகள்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையை நிறுத்திக்கொண்டதால், இதில் பணிபுரிந்துவந்த ஊழியர்கள், பொறியாளர்கள், மேலாளர்கள், பைலட்கள் மற்றும் விமான சிப்பந்திகள் என 38000 பேர் வேலையிழந்து தவித்துவருகின்றனர். இவர்களின் 100 பைலட்கள், 200 விமான சிப்பந்திகள் மற்றும் 200 பொறியாளர்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உடனடியாக பணிக்கு அமர்த்திக்கொண்டது. மற்றவர்கள் வழி தெரியாமல் முழித்துக்கொண்டுள்ளனர்.

சுப்ரமணியம் சுவாமி கொளுத்திப்போட்ட திரி
 

சுப்ரமணியம் சுவாமி கொளுத்திப்போட்ட திரி

நடுவில் வந்து புகுந்த பாஜக தலைவரான சுப்ரமணியம் சுவாமி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவும் தான் காரணம் என்றும், அவர்கள் இருவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு பார்சல் செய்து கொடுக்கும் வேலையை பார்ப்பதாகவும், இதை தவிர்க்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தோடு இணைப்பதே சரியான வழி என்று கொளுத்திப்போட்டார்.

சம்பள பாக்கிக்கு என்ன தீர்வு

சம்பள பாக்கிக்கு என்ன தீர்வு

அனைவரும் மற்றவர்களை குற்றம் சொல்வதில் மட்டுமே பிஸியாக உள்ளதால் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களையும் பைலட்களின் நிலைமையையும் எண்ணிப்பார்க்க மறந்துவிட்டர். ஊழியர்களின் 4 மாத நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கு சரியான தீர்வை யாரும் சொல்வதாக தெரியவில்லை.

ரூ.983 கோடியாவது தாருங்கள்

ரூ.983 கோடியாவது தாருங்கள்

விமான சேவையை தொடர்ந்து நடத்தவும், ஊழியர்கள், பைலட்களின் மார்ச் வரையிலான சம்பளத்தை செட்டில் செய்வதற்கு தேவையான ரூ.983 கோடியை மட்டுமாவது தாருங்கள் என்று ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், எஸ்பிஐ வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கையை வங்கிகள் கூட்டமைப்பு நிராகரித்துவிட்டது. இதனால் வேறு வழியில்லாமல் ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை நிறுத்திக்கொண்டது வேதனையானது.

உத்தரவாதம் கிடையாது

உத்தரவாதம் கிடையாது

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு வங்கிக் கூட்டமைப்பு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில், வங்கிக் கூட்டமைப்போ, அல்லது பங்குதாரர்களோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது பற்றி இதுவரையில் எந்த ஒரு தெளிவான வாக்குறுதியோ உத்தரவாதமோ அளிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று தலைமை அதிகாரி வினய் துபே கடந்த வெள்ளிக்கிழமையன்று ஊழியர்களிடம் தனது கவலையை பகிர்ந்துகொண்டார்.

தேடித் தேடி அலைந்தோமே

தேடித் தேடி அலைந்தோமே

ஒருபக்கம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விற்கும் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்க இந்தப்பக்கம் ஊழியர்கள், பைலட்கள் சம்பளம் இல்லாமல் திண்டாடிவருகின்றனர். வேறு வழி இல்லாத பெரும்பாலான ஊழியர்கள் மாற்று வேலை தேடி அலைந்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்தப் பிரச்சனை குறித்து தெளிவாக விளக்கி, இது குறித்து ஜெட் ஏர்வேஸ் பங்குதாரர்களிடம் ஆலோசனை செய்து, நிறுவனத்தை தொடர்ந்து நடத்த நீண்ட காலத் திட்டம் வகுக்க வேண்டும், என்று வங்கிக் கூட்டமைப்பிற்கு கடிதமும் எழுதி உள்ளேன் என்றும் வினய் துபே கண் கலங்கினார்.

சாதகமான பதில் வரவில்லை

சாதகமான பதில் வரவில்லை

வினய் துபே மேலும் தொடர்ந்து, இயக்குநர்களின் கூட்டங்களில் பங்கேற்ற பங்குதாரர்கள் யாரும் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த நிதி அளிப்பது பற்றி மூச்சு விடவில்லை என்று ஆதங்கப்பட்டார். அதோடு மத்திய அரசின் மேல் மட்ட அதிகாரிகள் வரையிலும் தொடர்புகொண்டு எங்களின் பிரச்சனையைத் தீர்க்க உதவுமாறு கதறினோம். ஆனால் யாரும் எங்களுக்கு சாதகமான பதிலைத் தரவில்லை என்று விரக்தியாக கூறினார்.

அதே பல்லவிதான்

அதே பல்லவிதான்

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் மற்றும் பைலட்களின் சம்பளப்பிரச்சனையை மீண்டும் மீண்டும் தொடர்ந்து எடுத்துக்கூறி சம்பளம் இல்லாமல் ஊழியர்கள் படும் அவஸ்தையையும் விளக்கி நிதி உதவி வழங்காவிட்டால் அனைவரும் மாற்று வேலைக்கு சென்றுவிடுவார்கள் என்று வங்கிக் கூட்டமைப்பிடம் முறையிட்டோம். ஆனால் வங்கிக் கூட்டமைப்போ தொடர்ந்து எங்களால் உதவ முடியாது என்று அதே பல்லவியை பாடுகின்றது என்று துபே கூறினார்

அமைதி ஊர்வலம்

அமைதி ஊர்வலம்

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு மும்பையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு அமைதி ஊர்வலம் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் காவல்துறையும் மாநில அரசும் கேட்டுக்கொண்டதால் கடைசி நேரத்தில் அம்முடிவை கைவிட்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jet Airways CEO talk to staffs, banks and promoters gives no signal for salaries

In a clear indication of lack of support from the lenders on further funding, Jet Airways chief executive Vinay Dube has said it is painful that there is no commitment on the part of the all stakeholders on paying salaries to the employees which are due in a few days.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more