என் வீட்டை வாங்கிக் கொடுங்கள்.. கதறும் அமரபள்ளி விளம்பர தூதர் தோனி.. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : அமரபள்ளி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலிருந்து தனக்கு தர வேண்டிய வீட்டையும், விளம்பரத் தூதராக நடித்தமைக்காக தர வேண்டிய ரூ.40 கோடியையும் வழங்க உத்தரவிடக்க கோரி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் அமரப்பள்ளி ரியல் எஸ்டே நிறுவனம் செயல்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் சார்பில் கட்டப்பட்ட அமரப்பள்ளி சபாரி குடியிருப்பில் கிரிக்கெட் வீரர் தோனி ஒரு வீடு வாங்கி இருந்தார். மேலும் அமரப்பள்ளி நிர்வாகம் தங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதராகவும் தோனியை நியமித்தனராம். இந்த நிலையில் பல்வேறு விளம்பரங்களில் அமரப்பள்ளி நிறுவனத்துக்காக தோனி நடித்தும் கொடுத்துள்ளார்.

 

மேலும் இது கடந்த 2009 முதல் 2016-ம் ஆண்டுவரை பல்வேறு விளம்பரங்களில் அமரப்பள்ளி நிறுவனத்துக்காக தோனி நடித்தார். இதையடுத்து திடீரென அமரப்பள்ளி நிர்வாகம் நிதிநெருக்கடியில் சிக்கியதை அடுத்து, வீடு முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் வீட்டை கொடுக்க முடியாத சூழ் நிலையும் ஏற்பட்டது.

என் வீட்டை வாங்கிக் கொடுங்கள்.. கதறும் அமரபள்ளி விளம்பர தூதர் தோனி.. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு

ரூ.40 கோடியை கொடு

இதுதொடர்பாக ஏற்கனவே வீட்டுக்காக பணம் அளித்த 46,000 ஆயிரம் பேர் அமரப்பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தோனி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமரப்பள்ளி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்காக பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்தேன் அதற்கான நிலுவை தொகை ரூ.40 கோடியை வழங்கவில்லை அதை பெற்றுத்தரக் கோரி மனுத் செய்திருந்தார்.

கையிருப்பு குறைந்தது.. அன்னிய செலவாணி கையிருப்பு 4.14 பில்லியனாக குறைந்தது

சொத்துக்கள் முடக்கம்

அதோடு அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமரப்பள்ளி நிறுவனத்தின் சொத்துக்களும், அதன் துணை நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் மகேந்திர சிங்க் டோனி மீண்டும் உச்ச நீதி மன்ரத்தில் வழக்கு தொடுத்திருப்பது அனைவரின் மனதிலும் கேள்வியை எழுப்பியுள்ளது.

என் வீட்டை வாங்கிக் கொடுங்கள்

இந்நிலையில், தோனி சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில்ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமரப்பள்ளி ரியல்எஸ்டேட் நிறுவனத்தில் தான் வீட்டுக்கு பணம் செலுத்தி இருந்தேன். அந்த வீட்டை இன்னும் வழங்கவில்லை. அந்த வீட்டை நீதிமன்றம் கையகப்படுத்தி தனக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mahendra Singh Dhoni moves Supreme Court over cheating by Amrapali group

Mahendra Singh Dhoni has moved the Supreme Court seeking possession of a penthouse in an Amprapali project, and also to include his name in the list of creditors of the real estate company.
Story first published: Sunday, April 28, 2019, 15:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more