டெல்லி: சாக்லேட் நிறத்தில் பத்து ரூபாய் நோட்டை வெளியிட்ட ரிசர்வ் வங்கி இப்போது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் 20 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த நோட்டில் ஜியோமெட்ரிக் பேட்டன் இருப்பதால் போலி ரூபாய் நோட்டுக்கள் அச்சிட முடியாது என கூறப்படுகிறது.
புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. இது குறித்த ரிசர்வ் வங்கி அறிவிப்பில், மஞ்சளும், பச்சையும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டு இருக்கும் எனவும் இதற்கு ஏற்ப ஜியோமெட்ரிக் பேட்டன்ஸுடன் இருக்கும் எனவும் கூறிப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு 12 மணிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. 2016 நவம்பர் மாதம், இந்திய அரசால், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், 17.9 ட்ரில்லியன் ரூபாய் நோட்டுகள் சுழற்சியில் இருந்தது.
கோதுமை விளைச்சல் சுமார் 10 கோடி டன் இலக்கை தாண்டும் - 3.57 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய திட்டம்
ரிசர்வ் வங்கி பிங்க் நிறத்தில் புதிய 2000 மற்றும் சாம்பல் நிறத்தில் 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து விநியோகம் செய்தது. கடல் நீல நிறத்தில் 50 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. ஊதா நிறத்தில் 100 ரூபாய் நோட்டும் வெளியானது என்றாலும் பழைய நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் மஞ்சள் நிறத்தில் புதிய 200 ரூபாய் நோட்டினை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. போலி நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவே புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக தெரிவித்துள்ளது.
புது 20 ரூபாய் நோட்டு - ஜியோமெட்ரிக் பேட்டன் இருக்கு - போலிகள் அச்சடிக்க முடியாது
சாக்லேட் நிறத்தில் 10 ருபாய் நோட்டுக்களை ரிலீஸ் செய்த ரிசர்வ் வங்கி கோனார்க் சூரிய கோவிலை அச்சிட்டிருந்தது. இந்த நிலையில் பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் 20 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது ரிசர்வ் வங்கி. கடந்த 1970 முதல் 1975 ஆம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த எஸ். ஜெகன்நாதன் கையெழுத்திட்டிருந்த 20 ரூபாய் நோட்டில் நாடாளுமன்றம், புலி, சின்னம் இருந்தது. 13 மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. தற்போது புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டு பிங்க் கலரில் உள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கையெழுத்தில் பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் 20 ரூபாய் நோட்டு வெளியாகிறது.
10 முதல் 2000 வரை ரூபாய் நோட்டுக்கள் பல வண்ணங்களில் வெளியாகியுள்ளன. 5 ரூபாய், 1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுக்களை இனி என்ன நிறத்தில் வெளியிடப்போகிறார்களோ தெரியலையே.