லண்டனில் தொடரும் இந்திய முதலீடுகள்.. இதுவரை இல்லாத அளவு உயர்ந்து சாதனையாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன் : இந்தியர் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் முதலீடு என்பது ஒரு அசாத்தியமான வளர்ச்சியாகவே கருத்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அன்னிய நாடுகளில் முதலீடு செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக லண்டன் இருந்துள்ளது.

ஆமாங்க இந்தியாவில் இருந்து அதிக அளவிலான அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களில் ஈர்த்த நாடுகளில் பிரிட்டன் தான் முதலிடத்தை பிடித்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் அதிகாரபூர்வ சர்வதேச வர்த்தக மேம்பாட்டு பணிகளை லண்டன் அண்டு பார்ட்னர்ஸ் (London & Partners (L&P)) நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது வெளியிட்டள்ள அறிக்கையில், கடந்த 2018ல் பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களில் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்திய முதலீட்டில் பிரிட்டனுக்கு முதலிடம்

இந்திய முதலீட்டில் பிரிட்டனுக்கு முதலிடம்

இதையடுத்து கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அதிக அளவில், அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களை ஈர்த்த நாடுகளில் பிரிட்டன் முதலிடத்தை பிடித்துள்ளதாகவும், இந்த வகையில் கடந்த 2018-ல் இந்திய முதலீட்டாளர்களின் 52 திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு 2017-ல் மேற்கொண்டதை விட 100 சதவிகிதம் அதிகம் என்றும் கூறியுள்ளதாம்.

அமெரிக்காவே 2-வது இடம் தான்

அமெரிக்காவே 2-வது இடம் தான்

இந்த நிலையில் அமெரிக்காவை விட இந்தியா முன்னிலையில் இருப்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம். இதில் அமெரிக்கா 51 திட்டங்களில் மட்டும் கையெழுத்திட்டிருப்பது கவனிக்கதக்கது. ஐக்கிய அரபு எமிரேட்சில்(UAE) 32 திட்டங்களில் மட்டும் முதலீடு செய்துள்ளது.

லண்டனில் மொத்த அன்னிய முதலீட்டில் 60% இந்தியா

லண்டனில் மொத்த அன்னிய முதலீட்டில் 60% இந்தியா

இந்தியாவில் இருந்து பிரிட்டனில் செய்யப்பட்ட அன்னிய முதலீடுகளில் லண்டன் நகரம் 60 சதவிகித பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இந்த நகரின் பல்வேறு துறைகளில் இந்தியர்களின் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017 -2018ல் மட்டும் 255 சதவிகிதம் அதிகரித்துள்ளதாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 100 சதவிகிதம் அதிகமாம்.

குறிப்பாக 32 திட்டங்களில் முதலீடு அதிகரிப்பு

குறிப்பாக 32 திட்டங்களில் முதலீடு அதிகரிப்பு

இதுவரை இல்லாத வகையில், இந்திய நிறுவனங்கள் லண்டனில் 32 திட்டங்களில் தங்களது முதலீட்டை அதிகரித்து செய்துள்ளனர். இதற்கு முன்னர் இந்தியர்களின் முதலீடு துபாய் மற்றும் சிங்கப்பூரில் முன்னனியாக இருந்தது. ஆனால் தற்போது இதை விட அதிகமாக இந்திய நிறுவனங்கள் லண்டணில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

லண்டனில் நல்ல வர்த்தக வாய்ப்பு உள்ளது

லண்டனில் நல்ல வர்த்தக வாய்ப்பு உள்ளது

மேலும் லண்டனில், நிதிச் சேவைகள், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், வர்த்தக வாய்ப்பு நன்றாக உள்ளதும், கடந்த 10 ஆண்டுகளில், லண்டனில் உள்ள இந்திய நிறுவனங்கள் 249 கோடி பவுண்டுகளை முதலீடு செய்துள்ளன. அத்துடன், 5,691 புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.

ஓலா & ஓயோ முதலீடு செய்ய ஆர்வம்

ஓலா & ஓயோ முதலீடு செய்ய ஆர்வம்

இந்த நிலையில் இந்தியாவில் மொபைல் ஆப் மூலம் வாடகை கார் சேவையை வழங்கி வரும் ‘ஓலா' நிறுவனம், கடந்த ஆண்டு லண்டனில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிவித்தது. இதோடு மிகப்பெரிய அளவில் ஹோட்டல் சேவையை வழங்கும் ‘ஓயோ' நிறுவனமும் லண்டனில் முதலீடு செய்யப் போவதாகவும் சமீபத்தில் வெளியிட்டுள்ளன.

வர்த்தக தரத்தை மேம்படுத்தும் பாலம்

வர்த்தக தரத்தை மேம்படுத்தும் பாலம்

மேலும் மும்பை மற்றும் பெங்களுருரில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கும் லண்டனுக்கு இடையே உள்ள வர்த்தக தரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை ஆதரரிப்பதற்காகவும் இந்த நிறுவனக்கள் ஒரு பாலாமாக செயல்படும் என்றும் லண்டன் அறிவித்துள்ளது.

நிபுனர்களின் கருத்து

நிபுனர்களின் கருத்து

இந்தியா போன்றதொரு வளர்ந்து வரும் நாடுகளில் அதிகளவில் தொழில் துறைகளில் முதலீடு செய்தால் மட்டுமே, இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். ஆனால் இதற்கான ஒரு சூழல் இந்திய அரசிடம் நிலவுதாகவும் தெரியவில்லை. இந்திய நிறுவனங்களும் அன்னிய நாடுகளை தேடி பிடித்தும் முதலீடு செய்கின்றன. இதனாலேயே இந்தியாவில் பணவீக்கம் என்பது ஒரு வகையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் வேலை வாய்ப்பும் குறைகிறது. ஏன் சில அத்தியாவசிய பொருட்களை கூட நாம் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்திய அரசு இந்தியாவில் தொழில்துறையை மேமபடுத்த முதலில் உள் நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை அளிக்க வேண்டும். இதனால் பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள் பொருளாதார நிபுனர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

London Best choice for Indian investors with record investments in 2018

London emerged as the top choice for Indian investors ahead of other cities such as Dubai and Singapore, with investments by Indian companies in the British capital reaching an all-time high last year, according to a new analysis. The UK emerged as the top most country to attract Indian FDI with 52 projects, ahead of us sign 51 projects only.
Story first published: Sunday, May 5, 2019, 9:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X