அடுத்தடுத்த தோல்விகளால் திவால்... அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல் தயார்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவின் முக்கிய பனக்காரர் யார் என்றால் அடுத்த நிமிடம் அனைவரும் கூறுவது அம்பானி தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூறும் ஒரே பதில் அம்பானி குடும்பம் தான். அந்தளவிற்கு லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்து வந்தவர்கள் தான் அம்பானி.

 

ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி எது எடுத்தாலும் சக்ஸஷ் என்றிருக்க, மறுபுறம் அனில் அம்பானியின் நிலையோ பரிதாபகரமானதாக காணப்படுகிறது. எந்த தொழில் தொடங்கினாலும் அதில் வெற்றி பெறுவது முகேஷின் பாணியாக இருக்கும். அதே நேரம், எந்த தொழில் தொடங்கினாலும் அதில் தோல்வியை சந்தித்து கடனாளியாவது தான் அனிலின் பாணியாக உள்ளது. இத்தகைய இக்கட்டான நிலையில் சிக்கித் தவித்து வரும் அனில் அம்பானியின் சாம்ராஜ்யம் இப்போது திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த தோல்விகளால் திவால்... அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல் தயார்

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமம் கடந்த சில ஆண்டுகளாகவே பெருத்த நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில் கடந்த மே7ம் தேதி எஸ்.பி.ஐ தலைமையிலான குழு இந்த நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை எடுப்பதற்கான செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கான முதல் கட்ட நடவடிக்கை தான் இந்த தீர்மானம் என்றும் அறிவித்துள்ளது.

மோடி ஆட்சியில் GDP-க்கு பயன்படுத்திய தரவுகள் தவறானது..! உரக்கச் சொன்ன என்.எஸ்.எஸ்.ஓ..!

இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமம் தொழில் நிபுணர்கள் மூலமாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் அணுகி 13 மாதங்களுக்கு தணிக்கையை தள்ளி வைத்தது. இந்த நீட்டிப்பு கடந்த ஏப்ரல்30, 2018 முதல் மே-30, 2019 வரையில் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த கெடு முடிய இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் அடுத்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் என்ன செய்யபோகிறது என்று தெரியவில்லை.

அடுத்தடுத்த தோல்விகளால் திவால்... அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல் தயார்

இந்த நிலையில் மேலும், ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்பெக்ட்ரம் சொத்துக்களை monetising மூலம் கடனளிப்போர் திரும்ப செலுத்த பொதுமக்களிடம் செய்யப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் இந்த நிறுவனம் வெற்றிபெறவில்லை.

 

மேலும் அனில் அம்பானியின் சகோதரர் கடந்த மாதம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு, மீண்டும் எரிக்சன் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையில் 480 கோடி ரூபாயை கொடுத்தார். இதனால் உச்சநீதி மன்றத்தின் ஒரு சாத்தியமான சிறைத் தண்டனையைத் அனில் அம்பானியால் தவிர்க்க முடிந்தது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தை திவால் நடவடிக்கை முன்பு அனைத்து அறிக்கைகளும் தயார் செய்யப்பட வேண்டும் இதற்காக வி.பி.சிங்க் மற்றும் ரவிக்குமார் துரைசாமி தலைமையிலான மும்பை தலைமையிலான இந்த குழு மே-30 வரையிலான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NCLT begins bankruptcy process for Ambani's RCom

The lenders to the crippled Reliance communication May7 moved NCLT to appoint a new resolution professional and form a committee of creditors
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X