கொஞ்சமும் ரெஸ்பான்சிபிலிட்டியே இல்ல.. ஐ –ய மிஸ் பண்ணின ஆஸ்திரேலியா.. கரன்சி நோட்டில் பிழையாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய அரசுக்கு மிகப்பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வென்றால் அது ஆஸ்திரேலியன் கரன்சியில் பிழைதான். அட ஆமாங்க ஆஸ்திரேலியாவில் வெளியிட்டப்பட்ட A$50 கரன்சியில் Responsibility என்கிற வார்த்தையில் Responsibilty என்று தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளதாம்.

 

மஞ்சள் நிறத்திலான இந்த நோட்டுகள் கடந்த ஆண்டு கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுக்கும் வகையிலான அம்சங்களுடன் கூடிய புதிய A$50 கரன்சியை அறிமுகப்படுத்தியதாம்.

தவறு சின்னதுதான் என்றாலும் அது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. I -ய மிஸ் பண்ண ஆஸ்திரேலிய அரசுக்கு இது மிக்பபெரிய தலைக்குனிவு தான்.

Facebook-ஐ அழித்துவிடுங்கள்! அமெரிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கும் Facebook நிறுவனர்! யார் இவர்..!

பிழையுடன் 400 மில்லியன் டாலர்

பிழையுடன் 400 மில்லியன் டாலர்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 400 மில்லியன் டாலர் நோட்டுகள் இவ்விதமாக பிழையுடன் அச்சடிக்கப்பட்டுள்ளதாம். இதில் வெறும் 46 மில்லியன் தான் மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டுள்ளனவாம். அதனால ஏதோ கொஞ்சம் நிம்மதி.

இந்திய மதிப்பு ரூ.97,780 கோடி

இந்திய மதிப்பு ரூ.97,780 கோடி

இதன் இந்திய மதிப்பு 97,780 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்களில் பிழை இருக்காம். சி என் என் செய்தி நிறுவனம் 400 மில்லியன் நோட்டுக்களில் தவறாக அச்சிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே 40 கோடி நோட்டுக்கள் * 50 (அச்சடித்தது 50 டாலர் நோட்டு என்பதால்) = 2000 கோடி ஆஸ்திரேலிய டாலர். இந்த 2000 கோடி ஆஸ்திரேலிய டாலர் * 48.89 (இந்திய ரூபாய் மதிப்பு) = 97,780 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆஸ்திரேலிய டாலர் நோட்டுக்களில் தவறாக அச்ச்சிட்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் ரொம்ப ஹாட்டான நியூஸ் இது தானாம்
 

சமூக வலைதளங்களில் ரொம்ப ஹாட்டான நியூஸ் இது தானாம்

இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா? சமூக வலைதளங்களில் ரொம்ப ஹாட்டான நியூஸ் இதுதானாம். இந்த தப்பு கூட இப்படி தான் இந்த ஆஸ்திரேலியா அரசுக்கு தெரிஞ்சுதாம். என்ன கொடுமைடா இது. ஒரு நாட்டோட கரன்சிய பிரிண்ட் செய்யுறதில தவறா? அப்படின்னா இவங்க என்ன நிதானத்துல இருப்பாங்க.

ரேடியோ  மூலமே தெரிய வந்ததாம்

ரேடியோ மூலமே தெரிய வந்ததாம்

இதைவிட கொடுமை என்னவெனில் இந்த தவறை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது தான். ஒருவர் ரேடியோ நிகழச்சியில் பேசும் போது இதை பற்றி கூறியிருந்தாராம். இதைப்பற்றி தெரிந்து கொண்ட அந்த ரேடியோ நிலையம் அந்த நோட்டை போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதாம்.

விரைவில் புதிய நோட்டுகள்

விரைவில் புதிய நோட்டுகள்

இதன் பின்னரே ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு இந்த தவறு தெரிய வந்ததாம். இதன் பிறகே இந்த ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி பிழையான பழைய நோட்டுக்கு பதிலாக புதிய நோட்டுகள் விடப்படும் என்றும் தெரிவித்துள்ளதாம். என்ன கொடுமைடா இது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Australia central bank prints A$50 notes with spelling mistake

Millions A$50 bank notes in Australia have an embarrassing typographical error that was overlooked by the country’s central bank before they were prited and irculated
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X