ஐ.டி.சியின் நிகரலாபம் 19% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.5.75.. மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிகரலாபம் 18.72 சதவிகிதம் அதிகரித்து 3482 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 2932 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

 

இதுவே கடந்த காலாண்டில் வருவாய் ரூ.12,206 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில் இது ரூ.10,586.80 கோடியாக இருந்தது.

ஐ.டி.சியின் நிகரலாபம் 19% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.5.75.. மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்

இதோடு வட்டி, வருமானம், தேய்மானம் இதற்கு முந்தைய லாபம் 4,572 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 4,144 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.

இதோடு இன்றிலிருந்து ஐ.டி.சி நிறுவனத்தின் புதிய தலைவராக சஞ்சீவ் பூரி நிர்ணயிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தது கவனிக்கதக்கது. இதோடு இவர் இன்றிலிருந்தே இந்த தலைவர் பதிவியில் வகிப்பார் என்றும், அதோடு ஏற்கனவே மேற்கொண்டுள்ள நிர்வாக இயக்குனர் பதவியையும் வகிப்பார் எனவும், இன்றைய ஐ.டி.சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாம்.

Iran Economic Sanction: மீண்டும் பெட்ரோல் விலை உயரலாம்.! அமெரிக்க சதி வலையில் சிக்கும் இந்தியா..!

ஐடிசி நிறுவனத்தின் மொத்த வருவாய் 14.26 சதவிகிதம் வளர்ச்சியடைந்து, 12,946.21 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இது 11,329.74 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் சிகரெட் உள்ளிட்ட எஃப்.எம்.சி.ஜி பொருட்களுக்கான வருவாய் 8,759.84 கோடி ரூபாயாக இருந்தது. இதே இதற்கு முந்தைய காலாண்டில் 7,988.29 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.

இதே மார்ச் காலாண்டில், சிகரெட்களின் வருவாய் மட்டும் 5,485.92 கோடி ரூபாயாக இருந்தது. இது 2017- 2018ன் நான்காம் காலாண்டில் இது 4,936.45 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதுவே எஃப்.எம்.சி.ஜி தவிர மற்ற துறைகளில் இதன் வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் 3,273.92 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முன்பு 3,051.82 கோடி ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது. இந்த எஃப்.எம்.சி.ஜி தவிர மற்ற துறைகளில் இதன் வருவாயில் ஹோட்டல், விவசாய தொழில்கள், பேப்பர் போர்டுகள், பேப்ர & பேக்ஜேஜிங்க் உள்ளிட்ட பல பிஷினஸ்களில் முதலீடு கிடைத்த வருவாயாகும். இதோடு இந்த நிறுவனம் டிவிடெண்ட்டாக 5.75 ரூபாயும் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: itc ஐடிசி
English summary

ITC Q4 net profit rises 19% to Rs.3,481.9cr

FMCG major ITC today reported a 19% growth in net profit for the March quarter. The net profit increased to Rs.3,482 crore as compared to Rs.932 crore in the same quarter of the previous year.
Story first published: Monday, May 13, 2019, 17:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X