GFRG Home: வெறும் 6 லட்சம் ரூபாய்க்கு சொந்த வீடு வேண்டுமா..? படிங்கப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க படிச்சது உண்மை தான். வெறும் 6,00,000 ரூபாய்க்கு, 508 சதுர அடிக்கு வீடு (home) கட்ட முடியுமாம். ஆனால் அந்த வீட்டை (Home) வழக்கமான செங்கல் சிமெண்ட் வைத்து கட்ட முடியாதாம். மாறாக GFRG பேனல்களை வைத்துக் கட்டிக் கொடுப்பார்களாம்.

GFRG - Glass Fibre Reinforced Gypsum Panel - கண்ணாடி இழைகளை ஜிப்ஸத்துடன் ஒன்றிணைத்து வலுவூட்டப்பட்ட பேனல்கள் தான் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum எனப்படுகிற புதிய வீடு கட்டும் பேனல்கள்.

இன்று வீடு (Home) வாங்கிவிட்டு தான் தாலி கட்டுவேன், என சொந்தக் காலில் நிற்கும் 90-ஸ் கிட்ஸ் பிறந்த காலத்திலேயே இந்த பேனல்களை வைத்து வீடு கட்டத் தொடங்கிவிட்டார்களாம். ஆனால் இந்த முறை உலகம் முழுக்க பரவி ஹிட்டாக கொஞ்சம் நேரம் பிடித்துவிட்டது. அவ்வளவு தான்.

 

அதிகரித்து வரும் விளம்பரத்துறையின் அசுரவளர்ச்சி.. 2021ல் ரூ.1400 கோடிக்கு இலக்கு

எப்படி செய்கிறார்கள்

எப்படி செய்கிறார்கள்

ஜிப்ஸம் உடன் வொயிட் சிமெண்ட், நீர் சேர்த்து குலைப்பார்கள். அதை சில தொழிற்சாலை இயந்திரங்களால் ஒரு ஜிப்ஸம் பிளாஸ்டர் போலத் தயார் செய்வார்கள். இந்த ஜிப்ஸம் பிளாஸ்டர் மேல் கண்ணாடி இழைகளைப் போடுவார்கள். மீண்டும் அதன் மேல் ஒரு ஜிப்ஸம் பிளாஸ்டர் கோட்டிங் போடுவார்கள். ஆக இரண்டு ஜிப்ஸம் பிளாஸ்டர்களுக்கு மத்தியில் கண்ணாடி இழைகளை வைத்து தயாரிப்பது தான் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்கள். இந்த தட்டையான பேனல்களை ஒரு அச்சில் வைத்து வடித்து எடுப்பதால் நடுவில் சிமெண்ட் நிரப்ப பெரிய துவாரம் கிடைக்கிறது.

சீனா வரவேற்பு

சீனா வரவேற்பு

இந்த GFRG பேனல்களை வைத்து, முதலில் ஃபால் சீலிங் மட்டுமே செய்தார்கள். 1990-களில் தான் வீடு கட்டினால் என்ன எனத் தோன்ற, ஆஸ்திரேலியர்கள் வீடு கட்டத் தொடங்கினார்கள். ஆனால் அத்தனை சிறப்பானதாக அமையவில்லை. நிறையப் பிரச்னைகள் இருந்தது. அதன் பின் சில பல திட்ட மாற்றங்கள், பேனல்களைச் செய்யும் முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து மீண்டும் வீடு கட்டினார்கள் ஆஸ்திரேலியர்கள். இந்த முறை, ஆஸ்திரேலியாவின் GFRG வீட்டை அங்கீகரித்தது உலகம். அங்கீகரித்த கையோடு சிங் மங் சங் சீனர்கள் இந்த GFRG வீட்டுக்கு ஆரத்தி எடுத்தார்கள். சீன நாடெங்கிலும் GFRG வீடுகளாகக் கட்டித் தள்ளினார்கள்.

இந்தியா - கேரளம்
 

இந்தியா - கேரளம்

சீனாவுக்குப் பிறகு பல நாடுகளுக்கு இந்த GFRG பரவி ஒருவழியாக 2008-ல் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. 2008 -ல் GFRG இந்தியா வந்த போது, GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் வீடுகளுக்கு முதலில் டிக் அடித்த மாநிலம், நம் சுதந்திர பீஃப் தேசமான கேரளம் தான். "GFRG வரணம், எல்லாவர்க்கும் வீடு கிட்டணம் (GFRG வர வேண்டும், எல்லோருக்கும் வீடு கிடைக்க வேண்டும்)" என இன்முகத்தோடு வரவேற்றார்கள். 2008-ல் இருந்தே சரமாரியாக பல கேரள பில்டர்கள், காண்டிராக்டர்கள், இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் முறையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டிக் அடித்த ஐஐடி சென்னை

டிக் அடித்த ஐஐடி சென்னை

ஆனால் நம் தமிழகமோ, GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனலை ஒரு சந்தேகத்தோடும், பயத்தோடுமே இப்போது வரை அணுகிக் கொண்டிருந்தது. அதில் தவறில்லை. மெளவுலிவாக்கம் சம்பவம் கண் முன் வந்து போகாதா என்ன..? தமிழர்களின் சந்தேகம் ஒரு பக்கம் இருக்க, 2013-ம் ஆண்டில் சென்னை ஐஐடி-ல் இந்த GFRG குறித்து பல ஆராய்ச்சிகள் நடந்தன. அதோடு 3 கட்டிடங்கள் ஐஐடி சென்னை வளாகத்திலேயே கட்டப்பட்டிருக்கின்றன. இந்திய அரசும் இந்த ரக கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்களாம். ஐஐடி சென்னையின் பல ஆராய்ச்சிகளிலும் நம் GFRG அசால்டாக பாஸாகி இருக்கிறதாம். சரி இனி இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் வீடுகளின் நன்மைகளைப் பார்ப்போம்.

வலிமை

வலிமை

மரத்துக்கு அடுத்து எடை குறைவாக வீடு கட்ட பயன்படும் மெட்டீரியல்களில் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்கள் இரண்டாமிடம் பிடிக்கின்றன. எனவே கல் வீட்டின் எடையை விட 50% குறைவாக இருக்குமாம். ஆனால் சாதாரண கல் வீட்டின் வலிமையை விட 5 மடங்கு கூடுதல் வலிமையாக வீடு இருக்குமாம். அதற்கு GFRG வீடுகள் 80 ஆண்டு காலம் வரை பாதிப்பில்லாமல் இருக்கும் அதற்கு நான் கேரண்டி என சாட்சிப் பத்திரம் வாசிக்கிறார்கள் பில்டர்கள். சாதாரண செங்கல் சிமெண்ட் வீடுகளுக்கு 50 ஆண்டுகள் தான் வாழ் நாளாம். இந்த ரக GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் வீடுகளில் வெப்ப நிலை தானாகவே சீராகுமாம், காரணம் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்களில் இருக்கும் சிறு துளைகளால் வீட்டுக்குள் வெப்பத்தை சீராக்கிக் கொடுக்க முடியுமாம்.

இயற்கை பேரிடர்கள்

இயற்கை பேரிடர்கள்

இந்த GFRG பேனல்களில் கட்டப்படும் வீடுகள் 8.0 அளவு ரிக்டர் பூகம்பத்தை அசால்டாக தாங்குமாம். அதிகபட்சம் 8.9 வரை தாங்கியும் இருக்கிறதாம். இந்த வீட்டை 900 - 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 3 மணி நேரத்துக்கு மேல் எரிந்து கொண்டே இருந்தால் தான், வீடு எரியவே தொடங்குமாம். அதுவரை வீடு தீப்பிடிக்காதாம். காரணம் ஜிப்ஸம் மற்றும் கண்ணாடி இழைகள். 3 மணி நேரத்தில் நெருப்பை அணைத்து விடமாட்டீர்களா என்ன..?

கார்ப்பெட் ஏரியா

கார்ப்பெட் ஏரியா

ஒரு மொத்த நிலப்பரப்பில் வீடு கட்டப்பட்டிருக்கும் நிலத்தை Built up area என்போம். அதாவது வீட்டின் மொத்த நிலம். ஒரு வீட்டில் நம்மால் தரையில் எவ்வளவு நிலத்தை புழக்கத்துக்கு எடுத்துக் கொள்ள முடியுமோ அதை Carpet Area என்போம். பொதுவாக செங்கல் வீட்டில், வீட்டுச் சுவர்களின் தடிமன் 9 - 13 இன்ச் வரை இருக்கும். ஆனால் GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் வீடுகளில் வீட்டுச் சுவர்களின் தடிமன் 5 இன்ச்களைத் தாண்டாது. எனவே வீட்டில் புழக்கத்துக்கான நிலம் கூடுதலாக இருக்கும்.

உதாரணம்

உதாரணம்

ஒரு 1,100 சதுர அடி நிலத்தில் செங்கல் வீடு கட்டினால் சுமார் 770 சதுர அடிக்குத் தான் நாம் பயன்படுத்த முடியும். பாக்கி 320 சதுர அடி நிலத்தை சுவர்களே அடைத்துக் கொள்ளும். அதே 1,100 சதுர அடி நிலத்தில் GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்களைப் பயன்படுத்தி வீடு கட்டினால் சுமார் 900 சதுர அடி வரை நாம் பயன்படுத்த முடியும். GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் சுவர்கள் வெறும் 200 சதுர அடியைத் தான் பிடித்துக் கொள்ளுமாம்.

ஆல்ரெடி டன்

ஆல்ரெடி டன்

இது ஏதோ இன்னும் தமிழகத்துக்கு வரவில்லை என நினைக்காதீர்கள், நம் சென்னையில் இந்த ரக வீடுகளைக் கட்டி, கிரகப் பிரவேசம் செய்து, பால் காய்ச்சி குடித்தனமே நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். கட்டி முடித்த வீட்டை வாடகைக்கு கேட்டு குடியேறவே தொடங்கிவிட்டார்களாம். ஒரு பள்ளிக் கூடத்தின் முழு மேற்கூரையைக் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனலில் கட்டி முடித்திருக்கிறார்களாம். அவ்வளவு ஏன் ஒரு கல்லூரியின் ஒரு பகுதியையேக் கட்டி முடிக்கப் போகிறார்களாம்.

மேல் சுவர்

மேல் சுவர்

பொதுவாக வீட்டுக்கான அடித்தளம் போடுவது எல்லாம் வழக்கம் போலத் தான் போடுவார்களாம். அடித்தளத்தின் மேல், வீட்டுக்கான சுவர்களை எழுப்பும் போது தான் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்களைப் பயன்படுத்துவார்கள். இது ஏதோ செங்கல் அல்லது கான்க்ரிட் கற்களை போல, ஒவ்வொன்றாக அடுக்கி வைத்து கட்ட வேண்டியது இல்லை. நம் வீட்டின் திட்டப்படி நீள, அகலத்துக்கு தகுந்தாற் போல ஒரே பேனலாக வாங்கி வைத்து விடலாம். அதன் பிறகு நமக்கு தேவையான அறைகளை எல்லாமும் இதே போல நீள அகலம் கணக்கிட்டு ஒரே பேனலாக வெட்டி எடுத்துக் கொள்கிறார்கள். இதை சாதாரணமாக முனுசாமிக் கொத்தனாரோ, முக்குக் கடை மாடசாமி மேஸ்திரியோ, சித்தாள் விஸ்வாதய்யரோ கட்டி விட முடியாது. GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்களில் கை தேர்ந்த பொறியாளர்கள் தான் GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்களைக் கச்சிதமாகக் கையாள முடியும் என்கிறார்கள்.

பில்லர்

பில்லர்

இதில் கவர்ச்சிகரமான அம்சமே இது தான். நாம் ஏற்கனவே சொன்னது போல இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்களுக்கு மத்தியில் சீரான இடைவெளியில், வெற்றிடங்கள் இருக்கும். அந்த வெற்றிடத்தில் மூன்று வெற்றிடத்துக்கு ஒரு வெற்றிடம் அல்லது நான்கு வெற்றிடத்துக்கு ஒரு வெற்றிடம் பில்லர் போல கம்பிகளால் அடித்தளத்தோடு இணைக்கிறார்கள். எனவே வீட்டின் பேனல்கள் அடித்தளத்தோடு வலுவாக உட்காருவதோடு, வீட்டின் மேற்கூரை மற்றும் மேல் மாடியையும் வலுவாகத் தாங்க முடிகிறது. சரி இன் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் வீட்டில் செலவு குறைவைப் பார்ப்போம்.

ஸ்டீல் & செங்கல்

ஸ்டீல் & செங்கல்

சாதாரண கல் வீட்டில் தேவைப்படும் ஸ்டீல் கம்பிகளை விட GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் பயன்படுத்தும் வீட்டில் ஸ்டீலின் தேவை ஒரு 10 - 20% குறையுமாம். அடித் தளம் தவிர, மேல் கட்டடத்துக்கு செங்கல் பயன்பாடு மிக மிகக் குறைவு என்பதால் சுமாராக கல் வீட்டுக்கு தேவையான செங்கற்களில் பாதிக்குக் குறைவாகத் தான் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் வீடுகளில் செங்கல் பயன்படுமாம்.

சிமெண்ட்

சிமெண்ட்

GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் வீடுகளில் செங்கலே சுவர்களுக்கு கிடையாது. ஆனால் பேனல்களுக்கு மத்தியில் இருக்கும் சீரான இடைவெளிகளில் சிமெண்டை வைத்துத் தான் நிரப்ப வேண்டி இருக்குமாம். ஆனால் சுவரின் மேல் பூச்சுக்கு சிமெண்ட் தேவை இல்லை. இதனால் சுமார் 20% சிமெண்ட் குறைவாகத் தான் பயன்படுமாம்.

லேபர் கூலி

லேபர் கூலி

ஒரு ஆண் சித்தாளுக்கு நாள் ஒன்றுக்கு தோராயமாக 550 ரூபாய், பெண் சித்தாளுக்கு நாள் ஒன்றுக்கு சுமாராக 450 ரூபாய், கொத்தனார் மேஸ்திரிகளுக்கு நாள் ஒன்றுக்கு 800 ரூபாய், பெயிண்டர், பிளம்பர்களுக்கு நாள் ஒன்றுக்கு 750 ரூபாய், கார்பெண்டர்களுக்கு நாள் ஒன்றுக்கு 750 ரூபாய். இது தான் இந்திய பில்டர்கள் சங்கம், சொல்லி இருக்கும் கூலி விவரம். இவர்களை 6 மாதம் பணி அமர்த்தி செலவழிப்பதற்கும், 2 மாதங்கள் மட்டும் நிதானமாகப் பயன்படுத்தி அனைத்து வேலைகளை முடித்துக் கொள்வதற்கும் நிறைய பண வித்தியாசம் இருக்கிறது தானே. ஆக லேபர் கூலியும் சுமார் 50% மிச்சமாகுமாம்.

ஜல தோசம்

ஜல தோசம்

நம் சாதாரண செங்கல் சிமெண்ட் வீடுகளுக்கு, சில வருடங்களுக்கு ஒரு முறையாவது பட்டி, வாட்டர் ப்ரூஃப் பட்டி என எதையாவது அடித்து வைக்க வேண்டும் இல்லை என்றால் வீட்டுச் சுவர்கள் தண்ணீர் ஊறத் தொடங்கி விடும். அப்படியே வீட்டுச் சுவர்களில் வெடிப்பு வரத் தொடங்கி விடும். ஆனால் GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்களில் கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்ஸம் இருப்பதால் அதிகம் தண்ணீரால் பாதிக்கப்படாது.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

அதோடு தொழிற்சாலைகளில் இந்த GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்களுக்கு ஒரு வாட்டர் ப்ரூஃப் ட்ரீட்மெண்ட் கோட்டிங் கொடுத்தே அனுப்பவதால் அதிகம் பாதிக்கப்படுவதில்லையாம். ஆக செங்கல் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாட்டர் ப்ரூஃப் பட்டி போட வேண்டும் என்றால், நம் GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு கோட் வாட்டர் ப்ரூஃப் பட்டி போட்டால் போதுமாம். ஆக இந்த பராமரிப்புச் செலவுகளும் மிகக் குறைவே என்கிறார்கள் பில்டர்கள்.

பெயிண்ட் தேவை இல்லை

பெயிண்ட் தேவை இல்லை

பொதுவாக செங்கல் சிமெண்ட் வீடுகளில் சில ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது டிஸ்டம்பர், பெயிண்ட் அல்லது சுண்ணாம்பு அடிக்க வேண்டும். அப்போது தான் சுவரை புழுதி, தண்ணீர், கரையான் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க முடியும். ஆனால் நம் GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கத் தேவையே இல்லை. உங்களிடம் காசு அதிகமாக இருந்தால், ஒரு கோட்டிங் பெயிண்ட் அடித்துக் கொள்ளுங்கள், நீங்களும் எங்களைப் போன்ற மாதம் சம்பள ஏழைகளா..? அப்படியே விடுங்கள் அடுத்த 80 வருடங்களுக்கு சுவரில் இருந்து மண் கொட்டுவது, கரையான் அரிப்பது என தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். வாழ்க இந்திய மிடில் க்ளாஸ், வளர்க GFRG - Glass Fibre Reinforced Gypsum பேனல் வீடுகள்.

குறிப்பு: மக்களே மேலே சொன்னது அனைத்து வீடு கட்டுவதற்கான செலவுகள் மட்டுமே, நிலத்துக்கான விலை தனி என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you want a 508 square feet home for only 6 lakh rupees

Do you want a 508 square feet home for only 6 lakh rupees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more