ரூ.6581 கோடி கடனாம்.. வாராக்கடனால் தள்ளாடும் கார்ப்பரேஷன் வங்கி.. கவலையில் பங்குதாரர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கி கடந்த மார்ச் 31 ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதன் இழப்பு ரூ. 6,581.49 கோடியாக அதிகரித்துள்ளது.

இதே 2017 -2018 ஆண்டின் இதே காலாண்டில் இவ்வங்கி 1,838.39 கோடி இழப்பை சந்திருந்தது கவனிக்கதக்கது.

ரூ.6581 கோடி கடனாம்.. வாராக்கடனால் தள்ளாடும் கார்ப்பரேஷன் வங்கி.. கவலையில் பங்குதாரர்கள்

அதோடு கடந்த மார்ச் காலாண்டில் வருவாய் 4,187 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 4,642 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிலையில் இந்த வங்கியின் செயல்படாத சொத்துகளின் மதிப்பு 15.35% சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது(NPAs). இதே 2017 - 2018 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 17.35% ஆக இருந்தது கவனிக்கதக்கது.

ஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு ஊழியர்களுக்கு ரூ.5 கோடி பங்கா.. அதுவும் ஊக்கத்தொகையாவா.. இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவிப்பு

இந்த வங்கி கிட்டத்தட்ட கடந்த மார்ச் காலாண்டில் இதன் வாரக்கடன் NPA கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்து ரூ. 8,505.87 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 4,441.29 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் பங்கு சந்தை முடிந்த பின்பே வெளியிடப்பட்டதால் இதன் எதிரொலி பங்கு சந்தையில் இல்லை. இருப்பினும் வரும் திங்கட்கிழமை இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்தும் வரும் வாராக்கடன் பிரச்சனையால் சில வங்கிகள் முடங்கும் அபாயம் நிலவி வருகிறது. ஏன் சில வங்கிகள் மற்ற வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதும் வாடிக்கையான ஒரு விஷயாமாக இருந்து வருகிறது.

குறிப்பாக பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

கடந்த 2017 - 2018ம் நிதியாண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.9.61 லட்சம் கோடி என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவ்வாறு உள்ள வாராக்கடனில் விவசாயத்திற்காக அளிக்கப்பட்ட வாராக்கடனின் மதிப்பு வெறும் ரூ.85,344 கோடியாம், இதே எஞ்சிய சுமார் ரூ.7 லட்சம் கோடி தொழில் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.

இதுவே 2018 - 2019ஆம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 23,860 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது எனவும், பொதுத்துறை வங்கிகள் ரூ.60,726 கோடி வாராக்கடனை வசூலித்துள்ளன எனவும் முன்னர் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் கார்ப்பரேஷன் வங்கி போல் சில வங்கிகளின் வாராக்கடன் மீண்டும் அதிகரித்திருப்பது கவனிக்கதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corporation Bank Q4 net loss increases to Rs.6,581 crore

Corporation Bank Friday said its loss widened to Rs.6,581.49 crore during the fourth quarter ended March 2019, its due to higher provisioning for bad loans.
Story first published: Saturday, May 18, 2019, 11:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X