H1B Visa: ஒர் இந்தியனுக்காக ட்ரம்பை எதிர்க்கும் ஐடி நிறுவனம்! உன்ன நசுக்குறேண்டா கடுப்பில் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடன் அவர் முதலில் கை வைத்தது இந்திய ஐடி இளைஞர்களின் கனவான தகவல் தொழில்நுட்பத்துறை வேலைக்கான எச்-1பி விசா நடைமுறையில் தான். எச் 1 விசா நிராகரித்த காரணத்த

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: H1B Visa கேட்டு விண்ணப்பித்திருந்த ஐடி துறையைச் சேர்ந்தவரின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த வேலை பற்றிய விவரங்கள் எச்-1பி விசாவுக்கான தகுதிப் பட்டியலில் உள்ள வேலைகளோடு பொருந்தாத காரணத்தினால் விசா அதிகாரிகள் விண்ணப்பத்தை நிராகரித்தனர். இதையடுத்து அமெரிக்க அரசின் மீது ஐடி நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

 

எக்ஸ்டெரா சொல்யூசன் நிறுவனம் வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுத்த ஐடி இளைஞரின் எச்-1பி விசா (H1B Visa) விண்ணப்பத்தை எந்தவித காரணமும் இல்லாமல் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (US Citizenship and Immigration Services-USCIS) நிராகரித்துள்ளது. இதில் முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகமும் தனிச்சையான வெறுப்பும் நிறைந்துள்ளது என்று அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்தவுடன் அவர் முதலில் கை வைத்தது இந்திய ஐடி இளைஞர்களின் கனவான தகவல் தொழில்நுட்பத்துறை வேலைக்கான எச்-1பி விசா நடைமுறையில் தான். அதற்கு ஒரு காரணமும் இருப்பதாக அவர் நம்பினார்.

என்னாது ரூ.6099 கோடி லாபமா.. இந்தியன் ஆயில் நிறுவனத்திலா.. அப்படின்னா விலை குறையுமா?? என்னாது ரூ.6099 கோடி லாபமா.. இந்தியன் ஆயில் நிறுவனத்திலா.. அப்படின்னா விலை குறையுமா??

எச் 1 விசாவிற்கு கட்டுப்பாடு

எச் 1 விசாவிற்கு கட்டுப்பாடு

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான எச்-1பி விசாக்கள் வந்தபோதும் ஆண்டுக்கு 65ஆயிரம் எச்-1பி விசாக்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது .

டொனால்ட் ட்ரம்ப்

டொனால்ட் ட்ரம்ப்

கணக்கு வழக்கில்லாமல் எச்-1பி விசாக்களை வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, குறிப்பாக இந்திய ஐடி இளைஞர்களுக்கு வழங்குவதால் தான் அமெரிக்காவில் படித்த அமெரிக்க ஐடி இளைஞர்களுக்கு ஐடி நிறுவனங்களில் வேலை கிடைப்பதில்லை என்பது டொனால்ட் ட்ரம்பின் எண்ணம்.

எச் 1 விசா விதிமுறையில் மாற்றம்
 

எச் 1 விசா விதிமுறையில் மாற்றம்

இந்தப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டுமானால் முதலில் எச்-1பி விசா வழங்குவதில் தற்போது இருக்கும் விதிமுறைகளில் மாற்றம் செய்து விதிகளை கடுமையாக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி செயல்பட ஆரம்பித்துவிட்டார். இதன்மூலம் இந்தியாவிலிருந்து எச்-1பி விசாவில் வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்றும் அமெரிக்க ஐடி இளைஞர்களுக்கு அதிக அளவில் கிடைக்கும் என்றும் நம்பினார்.

95 ஆயிரம் டாலர்கள்

95 ஆயிரம் டாலர்கள்

அன்றிலிருந்து எச்-1பி விசா நடைமுறையில் தொடர்ந்து ஏதாவது ஒரு புதுசு புதுசாக விதிமுறையை அடுக்கிக்கொண்டே போகிறார். முதலில் எச்-1பி விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் சம்பளம் குறைந்தது 95 ஆயிரம் டாலர்களாக இருக்கவேண்டியது கட்டாயம் என்று உத்தரவிட்டார்.

எச் 1 பி விண்ணப்பக்கட்டணம் உயர்வு

எச் 1 பி விண்ணப்பக்கட்டணம் உயர்வு

எச்-1பி விசாவில் அமெரிக்கா வந்தவர்கள் வேறு வேலைக்கு மாறவேண்டுமானல், அந்த வேலை எச்-1பி விசாவில் குறிப்பிட்டுள்ள தகுதிப் பட்டியலில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதோடு எச்-1பி விசாவுக்கான விண்ணப்பக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினார்.

 தகுதிப்பட்டியல்

தகுதிப்பட்டியல்

இதற்கடுத்ததாக எச்-1பி விசா கேட்டு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்டுள்ள வேலை எச்-1பி விசா விதிமுறைகளில் இடம்பெற்றுள்ள தகுதிப் பட்டியலில் இருந்தால் மட்டுமே விசா கிடைக்கும் என்றும் அடுத்த குண்டைப் போட்டார்.

65000 பேருக்கு மட்டுமே

65000 பேருக்கு மட்டுமே

ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் எச்-1பி விசாக்களின் எண்ணிக்கையையும் 65ஆயிரமாக குறைத்து விட்டார். இதனால் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு எச்-1பி விசாவில் செல்பவர்களின் எண்ணிக்கை தடாலடியாக சரிந்தது. இப்படித்தான் இந்திய ஐடி இளைஞரின் எச்-1பி விசாவை நிராகரித்தால், அந்த ஐடி இளைஞரை வேலைக்கு அழைத்திருந்த அமெரிக்க நிறுவனம் அமெரிக்க அரசின் மீது வழக்கு தொடுத்துள்ளது.

 விண்ணப்பம் நிராகரிப்பு

விண்ணப்பம் நிராகரிப்பு

அமெரிக்காவின் எக்ஸ்டெரா சொல்யூசன் (Xterra Solutions) நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த பிரஹாஷ் சந்த்ர சாய் வெங்கட்ட அனிஷெட்டி (Praharsh Chandra Sai Venkata Anisetty) என்ற ஐடி இளைஞரை கூடுதல் தொழில்முறை தகுதியின் அடிப்படையில் வேலைக்கு தேர்ந்தெடுத்தது. அனிஷெட்டியும் எச்-1பி விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரின் விண்ணப்பத்தை அமெரிக்க தூதரகம், எச்-1பி விசா விதிமுறையில் குறிப்பிட்டுள்ள தகுதிப் பட்டியலில் அவர் குறிப்பிட்டுள்ள வேலை இடம்பெறவில்லை என்ற காரணத்தை சொல்லி நிராகரித்து விட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு

நீதிமன்றத்தில் வழக்கு

இப்பொழுது எக்ஸ்டெரா சொல்யூசன் நிறுவனம் வடக்கு கலஃபோர்னியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுத்த ஐடி இளைஞரின் எச்-1பி விசா விண்ணப்பத்தை எந்தவித காரணமும் இல்லாமல் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (US Citizenship and Immigration Services-USCIS) நிராகரித்துள்ளது. இதில் முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகமும் தனிச்சையான வெறுப்பும் நிறைந்துள்ளது என்று அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளது.

 ஆவணம் இல்லை

ஆவணம் இல்லை

எச்-1பி விசாவை நிராகரித்ததற்கான எந்த ஒரு ஆவணத்தையும் குடியுரிமை அதிகாரிகள் தாக்கல் செய்யவில்லை. அத்தோடு இது குடியுரிமை அதிகாரிகளின் தெளிவற்ற மனநிலையை காட்டுகிறது என்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டு குடியுரிமை அதிகாரிகளின் உத்தரவை ஒதுக்கிவைத்துவிட்டு எச்-1பி விசா வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் அந்நிறுவனம் வழக்கில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

H1B Visa IT company lawsuit filed against US Government for H-1B Visa

A Silicon Valley based IT Company Xterra Solutions has filed a lawsuit against the US Government for denying the most sought after H-1B visa.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X