டெல்லி : வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இணையதள பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. என்று இந்த ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் மக்களிடையே காலடி பதிக்க தொடங்கியதோ அன்றே இணையதளமும் தொற்று நோய் போல தொற்றிக் கொண்டது.
அண்மையில் படித்த ஒரு செய்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ நிறுவனத்தையோ அல்லது இணையதள சேவையை ஊக்குவிக்கவில்லை, அதற்கு மாறாக மக்களிடம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டையே அதிகரிக்க நினைக்கிறது என்று படித்திருந்தேன்.
அதை நினைக்கும் போது ஸ்மார்ட்போனுக்காக இணையதளமா? இணையதளத்துக்காக ஸ்மார்ட்போனா? என்று சந்தேகம் தான் எழுகிறது. இந்த நிலையில் எங்கு பார்த்திலும் ஸ்மார்ட்போனின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது.
இலவச சேவை வேண்டாம்
இவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்கள் இலவசமாக கிடைக்கும் இணைய சேவைகளை பயன்படுத்த நினைக்கின்றன. இதன் மூலம் இலவசமாக கிடைக்கிறது என்றும் நாமும் நமது சுய விவரங்கள் அனைத்தையும் கண்னை மூடிக் கொண்டு கொடுத்து விடுகிறோம்.
பாதிப்புகளை பற்றி யோசியுங்கள்
ஆனால் அவ்வாறு கொடுக்கப்படும் தரவுகளினால் என்ன பாதிப்புகள் என் று யோசிப்பதே இல்லை. அவ்வாறு இணையத்தில் அளிக்கப்படும் தகவல்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள், அதைப் பற்றி கவலைப்படுகிறார்களா இல்லையா?
ஆய்வு
இந்த நிலையில் அப்படிப்பட்ட சுயவிவரங்களை கொடுத்து விட்டு பின்னர் கவலைப்படும் லிஸ்டில் எத்தனை பேர் என்பது குறித்து அண்மையில் சர்வதேச அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
25,000 பேர்கிட்ட ஆய்வு
இந்த ஆய்வு கிட்டதட்ட 25,000 பேர் கிட்ட கடந்த 2019 பிப்ரவரி மாதத்தில் தங்களோடா தரவுகள் தவறா பயன்படுத்தப்படுதா? இல்லை அத பத்தி என்ன நினைக்கிறாங்க அப்படின்னு ஜெர்மனி "டிஜிட்டல் எகானமி காம்பஸ் 2019" பேர்ல ஆய்வு செஞ்சிருக்கு.
38%பேர் மட்டுமே கவலை
அதில் இந்தியாவைப் பொறுத்தவரை அவ்வாறு கொடுக்கப்படும் தகவல்களில் 38% பேர் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற கவலையில் இருக்கின்றனராம். அட ஆமாங்க மீதி பேர் இத வெச்சு என்ன பன்ன போறாங்கன்னு நினைக்கிறாங்களாம்.
பக்குவம்
இந்த 38%பேர் தான் இந்த இணையதளத்துல தரப்படுற தகவல்கள் தவறா பயன்படுத்தக் கூடாதுன்னும் ரெம்ப பக்குவமாவும் நடந்துக்குறாங்களாம்.
ஸ்பெயின் 63%
இதே ஸ்பெயின் நாட்டில் 63% பேர் இப்படி அளிக்கப்படுற தகவல்கள் தவறா பயன்படுத்த படுமோங்கிற கவலையில் இருக்காங்களாம். நாம தான் எதிலயுமே அசால்ட்டா தானே இருப்போம்.
Digital Economy Compass 2019
இவ்வாறு நடத்தப்பட்ட "Digital Economy Compass 2019" இந்த ஆய்வில் ஸ்பெயினுக்கு அடுத்தபடியா மெக்ஸிகோ 59% பேர் இத பத்தி கவலை படுறாங்களாம். இப்படி கொடுக்கப்பட்ட தகவல்கள இந்தியாதான் கடைசின்னா பாருங்க்களேன். இந்தியர்கள் எந்த அளவுக்கு தங்களோட தரவுகள் பற்றி எந்த அளவுக்கு கேர் எடுத்துகிறாங்கன்னு.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெரிமனி 40%
இதே அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் 40% பேரும், இதுவே சீனால 39% பேரும் தான இந்த தரவுகள பத்தி கவலை படுறாங்களாம்.
சமூக வலைதளங்கள் மூலம் திருட்டு
அதுவும் பேஸ்புக், மற்றும் கூகுள் சேவைகளில் நம்மோட தரவுகளை சேகரிக்கவே பல தனியார் நிறுவனங்கள் இருக்காம். இவ்வாறு நம்மிடையே சேகரிக்கப்படும் தகவல்களை விளம்பர நிறுவனங்களிடம் விற்று காசு பார்க்கின்றனவாம். அதிலும் பேஸ்புக், கூகுள் வாடிக்கைளார்களிடம் இருந்து அதிகம் இந்த தகவல்கள் திருடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
பாதுகாப்பு அம்சங்கள் உண்டு
ஏன் இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனம் ஒரு போதும் வாடிக்கையாளர்களின் தகவல்களை தெரிவிக்காது என்று கூறினார். அதோடு மக்கள் அதெற்ககென கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த வேண்டும். ஆனால் பலர் அதை பயன்படுத்துவதே இல்லை.
தகவல்களை பாதுகாப்பாக வையுங்கள்
ஆனால் வாடிக்கையாளர்கள் தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்த சேவைகளை பயன்படுத்தாவிட்டால் அது தகவல்கள் திருடப்பட மிக ஏதுவாக அமைகின்றன. யார் எப்படி இருந்தாலும் சரி நம்மோட பாதுக்காப்பு குறித்த தகவல்கள மொதல்ல நாம பாதுகாப்ப வைத்திருக்க வேண்டியது நம்மோட கடமை.