கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோயமுத்தூர்: என்ன எழுத என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது, அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மெசேஜ் கிரெடிட் கார்டு வேண்டுமா? என்று. இப்படிதான் இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் கடனாளியாக மாறுவது இப்படித்தான் என்று தோனியது. அப்போது தான் தோன்றியது. ஏன் கிரெடிட் கார்டு கடனை பற்றி எழுதக் கூடாது என்று.
நம் நாடே கடன் பட்டு தான் இருக்கிறது. ஆக நாமும் கடனாளியாக தான் இருக்கிறோம். ஏன் உலகில் எல்லோருமே ஒரு வகையில் கடனாளியாகத்தானே இருக்கிறோம். எனினும் நாடு கடன் பட்டால் அரசாங்கத்துக்கு கடன் கிடைக்கும், நாம் கடன் பட்டால் என்ன செய்வது?

எனக்கு தெரிந்த தோழர் ஒருவர் ஹீண்டாய் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் பெயர் ராஜீ, அவனுக்கு 35 வயது, மாதம் ரூ.50,000 சம்பளம். இன்னும் திருமணம் ஆகவில்லை. எனினும் பல கடன்களில் சிக்கித் தவித்து வருகிறார். இருப்பதோ வாடகை வீடு. வயதான அப்பா அம்மா, தங்கைக்கு திருமணமாகி விட்டது.

ஆனால் எப்படி இவ்வளவு கடன் தொகை வந்தது என்றால் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களும் வாங்கினாராம். கையில் கார்டு இருக்கு என்ன செய்யலாம்? எதை வேண்மானாலும் செய்யலாம் என்ற எண்ணம். வெறும் 1 லட்சம் கடனை கட்ட முடியாமல் இன்று இரு மடங்காகி உள்ளது.

10/9 பேருக்கு கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு

10/9 பேருக்கு கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு

நாட்டில் 2.7 கோடி கிரெடிட் கார்டுகள் வழகப்பட்டிருக்காம், ஆனால் இதுல 92% பேர் வாங்கிய கடனுக்கு மேல வட்டி கொடுத்து அதிகமாகதா தான் கட்டி இருக்காங்களாம். இதானாலேயே 10ல் 9 பேர் அவங்களோட கிரெடிட் ஸ்கோர் மதிப்ப இழங்கறாங்களாம் என்று கூறியுள்ளது ஒரு ஆய்வு. நாட்டில் கடன் வாங்கும் பலருக்கு, கடன் கட்ட முடியாமல் போனால் பின்னாளில் உங்களின் கிரெடிட் ஸ்கோர் என்னாவாகும் என்பது பற்றி தெரிவதே இல்லை. வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்தாவிட்டால் மீண்டும் வேறு கடன் வாங்கும்போது பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிவரும் இல்லையா. அது உங்களின் கிரெடிட் மதிப்பை பாதிக்காதா? கொஞ்சம் யோசியுங்கள்.

மச்சி செலவு அதிகம்

மச்சி செலவு அதிகம்

இதை பற்றி ராஜியிடம் கேட்டபோது, என்னோட மாத வருமானம் ரூ.50,000 மச்சி, நான் சென்னைல தான் வேலை செய்யுறேன். வாடகை ரூ.8000 போக வண்டிக்கான இ.எம்.ஐ, வீட்டு செலவுதான். கடந்த ஆண்டில் வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் என இ.எம்.ஐயில் வாங்கினேன். எனது சூழ் நிலை அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே. கையில் இருந்தவற்றை வைத்து சமாளித்ததாகவும் கூறுகிறான். அதோடு கிரெடிட் கார்டு பில்லும் கட்டவில்லையாம்.

ராஜி சேமித்திருப்பான்

ராஜி சேமித்திருப்பான்

ராஜி சேமித்திருப்பான் என்று நினைத்தால் கடன் அல்லவா பட்டிருக்கிறான்? ஆனால், சேமிப்பதற்கு பதிலாக, வங்கி மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்களில் கடனைத்தான் வாங்கி இருக்கிறார் என்றால், எதற்காக வாங்கியிருப்பான்? என்ற போது தான் தெரிந்தது. அவன் கிரெடிட் கார்டு கடனில் இருப்பது. இந்த நிலையில் அவனால் புதியதாய் வங்கியில் கடனும் அப்ளை செய்ய முடியவில்லை.

பிராண்டட் துணிமணிகள் வாங்க வேண்டும்

பிராண்டட் துணிமணிகள் வாங்க வேண்டும்

இன்றைய இளைஞர்கள் பலரும் இப்படி தான் இருக்கிறார்கள். ஒருவர் படித்து முடித்து வேலைக்குச் சேர்கிறார். அதனிடையே முதல் மாத சம்பளம் வருவதற்கு முன்பே அட்டகாசமான ஒரு ஐபோன், அலுவலகத்துக்கு வந்துபோக சூப்பரான பைக், எப்போதும் பிராண்டட் துணிமணிகள் வாங்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அப்படித்தான் ராஜீவும் செய்திருக்கிறார்.

கடனுக்கு காரணம் ஆடம்பரம்

கடனுக்கு காரணம் ஆடம்பரம்

இப்படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விஷயத்துக்கு சம்பாதிக்கிற பணம் செலவாகிவிடுகிறது. சேமிப்பு என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போகிறது. அதிலும் சில பேர் ராஜீ போல அனாவசிய கடனாளியாகின்றார். முக்கியமாக இளைஞர்கள் இன்று கடனாளிகளாக ஆவதற்கு மிக முக்கிய காரணமே இந்த ஆடம்பரம்தான். அதுவும் கிரெடிட் கார்டில் கணக்கு இல்லாமல் வாங்கி குவிப்பது. அப்புறம் பணத்தை திருப்பிக் கட்டும்போது கஷ்டப்படுவது.

இதுதான் கௌரவம்

இதுதான் கௌரவம்

இன்றைய நவீன வாழ்க்கை முறையும் நுகர்வோர் கலாச்சாரமும் ஆடம்பரத்தை கெளரவக் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. இதனால் கடன் வாங்கியேனும் தனது ஆடம்பர செலவுகளை செய்துவிட்டு, பின்னர் நெருக்கடி சூழ்நிலை வரும்போது, மேலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படும், இதனால் கடனுக்கு மேல் கடன் வாங்குவதும் அதிகமாகிறது. அதிலும் கிரெடிட் கார்டு போன்ற கடன்கள் வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க முக்கிய காரணமே இதுபோன்ற ஆடம்பரம் தான்.

கடனுக்கு காரணம் அதிகப்படியான செலவு

கடனுக்கு காரணம் அதிகப்படியான செலவு

இப்படி அதிகப்படியான செலவுக்கும் கிரெடிட் கடனுக்கும் மிக முக்கிய காரணமே நம்முடைய பழக்க வழக்கம்தான். அதில் சிறு சிறு விஷயங்களை மாற்றினாலே நம்மால் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும். என்று தெரிந்துக் கொள்ள ராஜி அடுத்தடுத்து என்ன தான் செய்தான். என்று படித்து பாருங்கள் புரியும்.

கெளரவ செலவு இனி இல்லை?

கெளரவ செலவு இனி இல்லை?

ஆமாம் மச்சி இனி யாருக்கு தனக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ அதுக்காக எதையும் அனாவசியமாக எதையும் வாங்க போறதில்லை. இதை வைத்திருந்தால்தான் நான் அந்தஸ்தானவன் என்கிற தோற்றத்துக்காகவே எதையும் வாங்க மாட்டேன். இது ஒரு மிக மோசமாக பழக்கமுன்னு இப்பதான் மச்சி தெரியுது. அவன் ஐபோன் வைத்திருக்கிறான், அவன் ராயல் பைக் வைத்திருக்கிறான், என்பதற்காகவே முடிகிறதோ, இல்லையோ இதையெல்லாம் கடன் வாங்கியாவது செய்யனும் நினைச்சது தப்பு தானே. இதை தவிர்த்தாலே எனக்கு அனாவசிய கடன் வாங்க வேண்டிய நிலைமை வராது மச்சி என்றான்.

சம்பள உயர்வு கிடைத்திருக்கும்

சம்பள உயர்வு கிடைத்திருக்கும்

அதோடு இந்த கடன் பிரச்சனையால் வேலையிலும் சரியாக கவனம் செலுத்த முடிவதில்லை. அதோடு நல்ல வேலை செய்தால் சம்பள உயர்வும் கிடைத்திருக்கும். இன்சென்டிவ்வும் கிடைத்திருக்கும். ஆனால் பலவற்றையும் கெடுத்ததொடு, இது என்னோட அடுத்தடுத்த புரோமோஷனையும் கெடுத்துவிட்டது. அதோடு என்னால் எதிர்பாராத பல செலவுகளால் எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. சம்பாதிப்பது எதற்கு? செலவு செய்யத்தானே என்று எண்ணி இருந்தேன். ஆனால் அது ரெம்ப தவறு என்று ரெம்ப தாமதமா புரிஞ்சுகிட்டேன் என்கிறார்.

இது ரெம்ப தவறு மச்சி?

இது ரெம்ப தவறு மச்சி?

இது ரெம்ப தவறு மச்சி? செலவு செய்யும்போது மனதில் கொஞ்சம் பயம் இருக்கனும். இன்று இப்படி செலவு செய்தால், நாளை திடீரென்று வேலை போய்விட்டால் என்கிற பயம் இதுவரைக்கும் இல்ல மச்சி ஆனா இனைக்கு காலையில் பேப்பர்ல பார்த்தேன். ஒரு நிறுவனத்தில் 15000 பேர் வேலையை விட்டு தூகிட்டாங்கலாம். அதான் மனசு ரெம்ப பாராம இருதுச்சு. அதானால தான் உன்ன பார்க்க வந்தேன் என்றான்.

இப்ப தான் எனக்கு புரியுது மச்சி

இப்ப தான் எனக்கு புரியுது மச்சி

இப்ப தான் எனக்கு புரியுது மச்சி, மாதம் ரூ.50,000 மாத சம்பளம் வாங்கும் எனக்கு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 60,000 ரூபாய் மதிப்புள்ள ஐபோன் வாங்க நினைச்சதும், தேவையில்லாத ஆடம்பர பொருட்கள வாங்க நினச்சதும், அதுவும் கிரெடிட் கார்டுல வாங்குனது ரெம்ப தவறுதான்.

சிக்கனம் வேண்டும்

சிக்கனம் வேண்டும்

சுருக்கமாக சொன்னால் அதிகம் செலவு செய்து இன்றைக்கு சந்தோஷமாக இருக்கும் வாழ்க்கையை விட சிக்கனமாக வாழ்வதன் மூலம் நிம்மதியான எதிர்காலத்தினை பெற முடியும் என்பதையும் இன்றைய இளைஞர்கள் சொல்ல முடிவு செய்தே, அவர்களுக்கு மட்டும் அல்ல எனது நண்பர் ராஜீவுக்கும், எனக்கும், உங்களுக்காகவும் தான் இந்த கட்டுரை.

கேள்விக்குறியாகும் எதிர்காலம்.

கேள்விக்குறியாகும் எதிர்காலம்.

அதிக செலவும், கடனும் நம் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும். அதுவும் கிரெடிட் கார்டு கடன்கள் சீக்கிரம் கடனாளியாக்கிவிடும். ஆக சிக்கனமே நம்மைக் காப்பாற்றும் என்பதை நான் ராஜீ மூலம் தெரிந்து கொள்வோம். கடன் வேண்டாம். நிம்மதி போதுமோ!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Don't make this mistake with your credit card

The credit cards comes in various brand and names, “BUT THEY ALL HAVE ONE COMMON THING” its TRAP YOU IN DEBTS.
Story first published: Monday, May 20, 2019, 22:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X