குடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை : டாஸ்மாக் எலைட் கடைகளில் புது சரக்கு வந்து இறங்கப் போகிறதாம். அதாவது 19 வகையான வெளிநாட்டு மது வகைகளை டாஸ்மாக் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாம். பாவம் ஒரே சரக்கையே அடித்துக் கொண்டுள்ள குடிமக்களுக்கு இது நிச்சயம் ஒரு சியர்ஸான செய்தியாகவே இருக்கும்.

 

இதுமட்டுமல்ல புதிதாக அறிமுகப் படுத்தப்போகும் 19 சரக்கு வகைகளையும் சேர்த்தால், எலைட் கடைகளில் உள்ள சரக்கு வகைகளின் எண்ணிக்கை 200 ஆக உயர போகிறதாம்.

இந்த புதிய சரக்குகளின் விற்பனை வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரலாம் என்றும் தெரிகிறது. அதிலும் சிங்கிள் மால்ட், ஸ்காட்ச், விஸ்கி, ரம், வோட்கா மற்றும் பிராண்டி வகைகள் இனி தற்போது உள்ள பிராண்டுகளுடன் கூடுதலாக இந்த புதிய பிராண்டுகளும் இனி கிடைக்குமாம்.

ஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா ஸ்டீல்

இன்னும் சில புதிய பிராண்டுகள்

இன்னும் சில புதிய பிராண்டுகள்

புதிய மது வகைகளில் குறிப்பிடத்தக்க சில ஐட்டங்கள் - கிளன்லிவெட் சிங்கிள் மால்ட் ஸ்காட்ச், விஸ்கி, ராயல் சல்யூட் பிளன்டட் ஸ்காட்ச் விஸ்கி, டிபான் காக்னாக் மற்றும் யுலுக்வா வோட்கா ஆகும்.

இறக்குமதி ஐயிட்டம் எவ்வளோ?

இறக்குமதி ஐயிட்டம் எவ்வளோ?

தற்போது எலைட் கடைகளில் 178 வகை வெளிநாட்டு மது வகைகள் விற்பனையாகி வருகின்றன. இதில் 75 ஓயின் வகைகளும், 33 பீர் வகைகளும், 70 ஐ.எ.ஃப்.எல் அதாவது மிக தரமான இறக்குமதி சரக்குகளும் உள்ளன. இதோடு புதிய 19 வகைகளும் சேரும் போது வாடிக்கையாளர்கள் மிக சதோஷமடைவார்களாம்.

எலைட் கடைகளில் வெளிநாட்டு மதுபானம்
 

எலைட் கடைகளில் வெளிநாட்டு மதுபானம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், தற்போது எலைட் கடைகளில் விற்பனையாகும் மது வகைகளில் 40 சதவிகிதம் வெளிநாட்டு மது ரகங்கள் தானாம். வெறும் 60 சதவிகிதம் மட்டுமே உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளாகும்.

அதிக பிராண்டுகளை உயர்த்த வேண்டும்

அதிக பிராண்டுகளை உயர்த்த வேண்டும்

இதில் வருத்தப்படதக்க செய்தி என்னவென்றால், புதுச்சேரி, பெங்களூரு நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் சரக்கு வகைகள் சற்று கம்மிதானாம். எனவே புதுச்சேரி, பெங்களுக்கு இணையாக சென்னை மது ரகங்களையும் உயர்த்த வேண்டும். விலையையும் குறைக்க வேண்டும் என்பதே குடிமக்களின் தலையாய கோரிக்கையாக உள்ளதாம்.

சென்னையில் தான் அதிக எலைட் கடைகள்

சென்னையில் தான் அதிக எலைட் கடைகள்

அதைவிட நம் குடிமக்களின் அடுத்த கவலையே தமிழகத்தில் தற்போது வெறும் 65 எலைட் கடைகள் தான் உள்ளது என்பது தானாம். அதிலும் 21 எலைட் கடைகள் சென்னையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் தான் உள்ளதாம். இதனால் மற்ற மாவட்டங்களில் இல்லை என்பது பெரும் கவலையாகவே உள்ளதாம்.

வருமானம் ரூ.418 கோடி தான்

வருமானம் ரூ.418 கோடி தான்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? கடந்த 2018 - 2019ல் மட்டும் இந்த எலைட் கடைகளின் வருமானம் 418 கோடி ரூபாயாம். இந்த வருமானம் பத்தலயாம், அதனால அரசு இந்த மாதத்துல இன்னும் 9 எலைட் கடைகளை திறக்க உள்ளதாம்.

வருமானத்தை அதிகரிக்க திட்டம்

வருமானத்தை அதிகரிக்க திட்டம்

அதுவும் சென்னையில் 7ம், மற்ற சில பகுதிகளிலும் 2ம் செயல்பட இருக்காம். இந்த எலைட் கடைகள் பெரும்பாலும் ஷாப்பிங் மால்களில் திறக்கப்படவுள்ளதாம். எப்படியோ அரசு வருமானத்தை அதிகரிக்க திட்டம் தீட்டியிருச்சு போல.

நாளைக்கு லீவு –சரக்கு தீர்ந்து போயிடும்

நாளைக்கு லீவு –சரக்கு தீர்ந்து போயிடும்

அத விட மக்களே நாளை வேற வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் நாளை காலை 10 மணி முதல் 24ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கடைகள் மூடபட்டிருக்குமாம். ஆக சரக்குப் பிரியர்கள் உடனே ஓடிப் போய் ஸ்டாக் வாங்கி வைங்க ஓடுங்க ஓடுங்க. அப்புறம் சரக்கு தீர்ந்து போயிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New imported liquor brands to hit Tasmac premium shops in June

globally popular liquor brands particularly Nineteen new brands will hit elite tasmac
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X