100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்!

By G P Subramanian
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

100 வயசுல பில்லியனர் ஆன தாத்தா.. சிலருக்கு தண்ணில கண்டம்.. இவருக்கு தண்ணில தான் வருமானம்!

சிலருக்கு தண்ணில கண்டம் ஆனா Chang Yun Chung தண்ணிலதான் வருமானம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஷிப்பிங் துறையில் அசைக்க முடியாத PIL என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்தான் Chang Yun Chung.

மோடிஜி வெற்றிக்கு இது தான் காரணமாம்.. காங்கிரஸ் கோட்டையை உடைத்த மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்

 ரகசியம் இதுதான்
 

ரகசியம் இதுதான்

ஷிப்பிங் சக்கரவர்த்தியான Chang Yun Chung-ஐ பற்றி நாம தெரிந்து கொள்வதற்கு முன் அவரை பற்றி அவர் கூறும் ஒரு சின்ன Intro பாருங்க. 49 வயசுல பிசினஸ் செய்ய ஆரம்பித்தேன். 100 வயசுல தான் பில்லியனர் ஆனேன். எனக்கு 14 குழந்தைகள். இப்பவும் கம்பெனி பொறுப்பை மகன்தான் பார்க்கிறான். ஆனாலும் என்னால வீட்டில் சும்மா இருக்கா முடியாது. இப்பவும் நான் டெய்லி ஆபிசுக்கு போய்ட்டு வருவேன். கடுமையாக உழைப்பேன். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் என்ன வாக்குறுதி கொடுத்தேனா கடைசி வரை அதனை காப்பாற்றுவேன் அதுதான் என் வெற்றியின் ரகசியம் என்று சொல்கிறார் Chang Yun Chung.

வாழ்க்கையை புரட்டி போட்ட நிகழ்வு

உலக வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத நிகழ்வுகளான முதலாம் மற்றும் இரண்டாம் உலக போருக்கும் நம்ம மெகா கோடீஸ்வர தாத்தா Chang Yun Chung-க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்த 1918ம் ஆண்டு தான் fujian மாகாணத்தில் kinmem நகரத்தில் பூமிக்கு புதிய வரவாக Chang Yun Chun வந்தார். Xiamen Datung கல்லூரியில் படிப்பு என Chang Yun Chun-ன் இளமை காலம் மகிழ்ச்சிகரமாகவே சென்றது. இந்த நிலையில் 1939ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. Chang Yun Chun-ன் வாழக்கையை மாற்றி போடப்போகும் நிகழ்வும் அப்போதுதான் ஆரம்பம் ஆகப்போகிறது என்பது அவருக்கும் தெரியாது.

ரகசிய போலீஸ்

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பலம் வாய்ந்த ஜப்பான் படைகள் சீனாவின் பல பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வந்தன. அதனை எதிர்த்து போராடியவர்களை ஜப்பானின் ரகசிய போலீஸ் அமைப்பான kempeitai ஈவு இரக்கம் இல்லாமல் போட்டு தள்ளியது. அப்படித்தான் Chang Yun Chun அப்பாவையும் kempeitai படையினர் கொலை செய்தனர். மேலும், Chang Yun Chun-யையும் கொன்று விட முடிவு செய்தனர். ஆனால் மயிரிழையில் உயிர் தப்பினார். Chang Yun Chun அம்மா ஜப்பான் போலீசாருக்கு தனது நகைகள் மற்றும் காரை லஞ்சமாக கொடுத்து தனது மகனின் உயிரை காப்பாற்றி விட்டார்.

 சிறை வாசம்
 

சிறை வாசம்

இருப்பினும், தடைவிதிக்கப்பட்ட வீரர்களுக்கு உணவு மற்றும் மருந்து சப்ளை செய்ததாக குற்றம் சாட்டி Chang Yun Chun ஒரு வருடம் மலையா சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வாசத்தை முடித்து வெளியே வந்த Chang Yun Chun இனியும் இங்கு இருந்தால் சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து சிங்கப்பூருக்கு அகதியாக சென்றார். அங்கு தனது நண்பரின் ஆலோசனைப்படி ஷிப்பிங் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த hin guan brothers company என்ற நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். சுமார் 18 வருடம் அந்த நிறுவனத்தில் மாடாக உழைத்தார்.

வேலைக்கு குட்பை

1967ம் ஆண்டில் தனது 49 வயதில் Chang Yun Chung-க்கு திடீரென நாமளே ஏன் பிசினஸ் செய்ய கூடாது என்ற எண்ணம் மனதில் பிறந்தது. அதேநேரத்தில் மகாலெட்சுமியும் அவர் வீட்டில் வாசம் செய்ய முடிவு செய்துவிட்டாள். உடனே 18 வருடமாக பார்த்து வந்த வேலைக்கு குட் பை சொல்லி விட்டார். பிசினஸ் செய்வோம்னு முடிவு பண்ணியாச்சு ஆனா முதலுக்கு எங்கே போறது? Chang Yun Chung ரொம்ப மண்டையை போட்டு குழப்பவில்லை. தனது 2 சகோதரர்கள் உள்பட 10 முதலீட்டாளர்களிடம் தனது திட்டத்தை கூறி முதலீடு செய்ய வைத்தார்.

container ships

அதன் விளைவாக, 1989ம் ஆண்டில் ஷாங்காயில் sigamas என்ற container ships கட்டும் பிசினஸை மங்களகரமாக ஆரம்பித்தார். container ships-க்கான தேவை அதிகரித்தால் கூடுதலாக container ships தயாரிக்க முடிவு செய்தார். அதற்கு தேவையான முதலீட்டை திரட்ட 1993ல் sigamas நிறுவனத்தை ஹாங்காங் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு தேவையான பணத்தை திரட்டி கொண்டார். தொழிலும் சிறப்பாக ஒடியது. pil நிறுவனத்துக்கு தற்போது சொந்தமாக 150க்கும் மேற்பட்ட ஷிப்பிங் கப்பல்கள் உள்ளன. pil நிறுவனம் இன்று உலகின் டாப் 20 ஷிப்பிங் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சிவப்பு கம்பள வரவேற்பு

Pacific International Lines என்ற நிறுவனத்தை ஆரம்பித்து முதலில் 2 பழைய ஷிப்பிங் கப்பல்களை விலைக்கு வாங்கி சின்னதாக தனது பிசினஸை தொடங்கினார். பிசினசும் நல்லா ஓடி காசை கொட்டியது. அந்த நேரத்தில் சீனா வளர்ந்து வரும் நாடாக இருந்ததால் ஷிப்பிங் நிறுவனங்களுக்கு அது சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து வரவேற்றது. மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல் இது போன்ற வாய்ப்புக்காக காத்திருந்த Chang Yun Chung அதை கப்புன்னு பயன்படுத்திகிட்டார். பிசினசும் பல நாடுகளுக்கு விரிவடைந்தது. Chang Yun Chung அடுத்து சொந்தமாக container ships கட்டுவது தொடர்பாக யோசிக்க ஆரம்பித்தார்.

வயதான பில்லியனர்

உலகின் வயதான பில்லியனர் என்ற பெருமையை தன் வசம் வைத்திருந்த அமெரிக்க கச்சா எண்ணெய் வர்த்தகர் John D. Rockefeller, 2017ல் தனது 101 வயதில் மரணம் அடைந்தார். இதனையடுத்து உலகின் வயதான பில்லியனர் என்ற பெருமையை 98 வயதில் Chang Yun Chung அடைந்தார். அவருடைய சொத்து மதிப்பு ரொம்ப இல்லீங்க 210 கோடி டாலர்தானாம்.

தினமும் அலுவலகம்

வயதில் சதத்தை அடித்து விட்ட Chang Yun Chung, pil நிர்வாகத்தை சில ஆண்டுகளுக்கு முன் தனது மகன் Teo Siong Seng-யிடம் கொடுத்து விட்டார். ஆனாலும் தற்போதும் தினமும் அலுவலகத்துக்கு போய் வந்து கொண்டு இருக்கிறார். மேலும் நிறுவனத்தின் அனைத்து துறைகளின் கோப்புகளும் அவரது அறைக்கு போய் விட்டுதான் வரும். மேலும் Teo Siong Seng தினமும் 2 முறை தனது தந்தையை சந்தித்து ஆலோசனைகளை பெற்று வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: billionaire
English summary

oldest billionaire at the age of 100

oldest billionaire at the age of 100
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more