Swiggy, zomato-க்கு சங்கு ஊதும் Google! கூகுளில் உணவு ஆர்டர் செய்வது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பசிக்கிறதா... அல்லது பசி எடுப்பது போல் இருக்கிறதா..?

எட்ரா ஃபோன,

திறடா அப்ளிகேஷன (Swiggy, zomato, Uber eats, Food Panda, Dunzo...)

போடு ஆர்டர...

ஒரு பிரியாணி, எரா ஃப்ரை, நண்டு வருவல் எதை வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம்.

இன்று 25,000 ரூபாய் கொடுத்து Luwak coffee, Civet coffee குடிக்கும் பென்ஸ் ஓனர்கள் தொடங்கி, இஸ்திரி கடை ராஜம்மா வரை அனைவரிடமும் ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது. அந்த ஸ்மார்ட்ஃபோன்களில் தங்கள் பயனர் அனுபவத்துக்கு ஏற்ப Swiggy, zomato, Uber eats, Food Panda, Dunzo... என அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறார்கள்.

மார்கரிட்டா வித் எக்ஸ்ட்ரா சீஸ் எக்ஸ்ட்ரா லார்ஜ் பீட்ஸாவை 100 பேருக்கு பங்கு போடுவது போல, இன்னும் இந்தியாவின் உணவு டெலிவரிச் சந்தையை பங்கு போட Ola cafe போன்ற புதிய நிறுவனங்களும் தங்கள் வலது காலை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்தப் பட்டியலில் உலகின் இணைய அசுரன் (Internet Monster) கூகுளும் (Google) தன் வலது காலை அமெரிக்காவில் மட்டும் எடுத்து வைத்திருக்கிறது.

 

அடி மேல் அடி வாங்கும் அனில் அம்பானி.. RCom 4வது காலாண்டில் ரூ.7767 கோடி நஷ்டம்.. கடுப்பில் ரிலையன்ஸ்

செயல்படுவது எப்படி

செயல்படுவது எப்படி

நமக்கு, சென்னை புகழ் சார்மினார் பிரியாணி சாப்பிடத் தோன்றுகிறது.

1. இணையத்தில் யார் டெலிவரி செய்வார்கள் எனத் தேடுகிறீர்கள்.

2.Order online என ஒரு லிங்க் தெரிகிறது.

3. அதன் கீழ் zomato டெலிவரி செய்வதாகச் சொல்கிறடு கூகுள்.

4. இப்போது அந்த order online-ஐ க்ளிக் செய்து உள்ளே போகிறீர்கள்.

5. வந்ததும் Delivey or Pick up என இரண்டு வசதிகள்

அதில் டெலிவரியைத் தேர்வு செய்கிறீர்கள்.

6. அதன் கீழ் இந்தியாவில் இருக்கும் Swiggy, zomato, Uber eats, Food Panda, Dunzo என் யார் எல்லாம் நம் சார்மினார் பிரியாணியை டெலிவரி செய்வார்களோ அவர்கள் பெயர்.

7. இவர்களில் யாராவது ஒருவரை தேர்வு செய்கிறீர்கள்.

8. அதன் பின் ஒரு மட்டன் பிரியாணி full 200, ஒரு சிக்கன் பிரியாணி full 110 ஆர்டர் செய்கிறீர்கள்.

9. அதன் பிறகு கூகுள் பே மூலம் 310 ரூபாய் பணத்தைச் செலுத்தி விடுகிறீர்கள்.

10. நாம் தேர்வு செய்த உணவு டெலிவரி நிறுவனம் நமக்கு உணவை டெலிவரி செய்து விடும்.

இனி நான் தான்

இனி நான் தான்

மேலே சொன்னது கூகுள் ப்ரவுசர் (Google Browser)வழியாக எப்படி ஆர்டர் செய்வது என்றே விளக்கி இருக்கிறோம். ஆனால் இதே முறையில் தான் மற்ற கூகுள் சேவைகளான கூகுள் அசிஸ்டென்ட் (Google Assistant),கூகுள் மேப்ஸ் (Google Maps) வழியாகவும் ஆர்டர் செய்யலாமாம். ஆக எப்படிச் சுற்றினாலும் கூகுளிடம் தஞ்சம் அடைந்திருக்கும் இந்த ஐந்து உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு தான் அதிக ஆர்டர்கள் கிடைக்கும்.

வந்துவிட்டதா..?
 

வந்துவிட்டதா..?

இப்படி உணவு டெலிவரி சேவையில் தலையிடும் வேலையை, அமெரிக்காவில் மட்டுமே அறிமுகப்படுத்தி இருக்கிறது கூகுள். அமெரிக்காவின் டோர்டேஷ் (DoorDash), போஸ்ட்மேட்ஸ் (Postmates), டெலிவரி.காம் (Delivery.com) ஸ்லைஸ் (Slice), சவ் நப் (ChowNow), என ஐந்து உணவு டெலிவரி சேவை நிறுவனங்களின் துணையோடு களத்தில் இறங்கி இருக்கிறது கூகுள்.

பிரம்மை

பிரம்மை

மற்ற அனைத்து உணவு டெலிவரி நிறுவனங்களும் வாயடைத்துப் போய் இருக்கிறார்களாம். இப்படி ஆர்டரைத் தருவது மற்றும் தங்களுக்கு பதிலாக பேமெண்ட்களைப் பெறுவது என எல்லாமே கூகுள் செய்து விடுவதால் தங்களால் அடுத்த 2020 வரையாவது தாக்கு பிடிக்க முடியுமா..? என நெஞ்சு வலிக்கு தைலம் தடவிக் கொண்டே வருத்தத்தில் இயக்குநர் குழுவைக் கூட்டி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

விரைவில் இந்திய சந்தை

விரைவில் இந்திய சந்தை

இந்தியா போன்ற, நுகர்வோர்களிடம் அபரீவிதமாக பணம் புழங்கும் ஒரு நாட்டில் உணவுத் துறை மட்டும் மந்தமாக இருக்குமா என்ன..? உலகப் புகழ் பெற்ற செஃப் ஹேம்ஸ் ஆலிவர் (James Oliver)உலகம் முழுக்க Jamie's Italian, Jamie's Pizzeria and Jamie's Deli என்கிற பெயரில் பல உணவகங்களை நடத்தி வருகிறார். இவர் இந்தியாவில் தொடர்ந்து கடைகளை விரிவாக்குவோம், பிரம்மாண்டமாக நடத்துவோம் என்கிறார். காரணம் இந்திய உணவுத் துறைச் சந்தை சுமார் 4.25 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அதையே காரணம் காட்டி, விரைவில் இந்தியாவிலும் உணவு டெலிவரி பிசினஸில் முழுமையாக கை வைக்க கூகுள் ஸ்கெட்ச் போட்டு வருகிறார்களாம்.

உணவகங்கள்

உணவகங்கள்

இந்தியாவின் உணவுச் சந்தையை, உணவகங்கள் மட்டும் இன்றி, உணவு டெலிவரி செய்யும் Swiggy, zomato, Uber eats, Food Panda, Dunzo ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் சேர்ந்து வளர்த்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்த செய்தியைக் கேட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டதாம். ஆக தாங்களும் கூகுளிடம் நல்ல பிள்ளைகளாக அடைக்களம் தேட வேண்டும் அல்லது கூகுளை எதிர்த்து காணாமல் போக வேண்டிய சூழலில் இருப்பதை வெளிப்படையாக கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்கிறார்களம்.

பணம்

பணம்

இப்படி A - Z எல்லாவற்றையும் கூகுளே செய்துவிடுவதால், இனி உணவு டெலிவரி நிறுவனங்கள் வெறும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமாகத் தான் செயல்பட வேண்டி இருக்கும் என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்திய உணவு டெலிவரி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். காரணம் ஆர்டரை கூகுள் கொடுக்கும், பேமெண்டை கூகுள் கொடுக்கும், ஒரு எடு பிடி போல கூகுள் கொடுத்த ஆர்டரை வாங்கிக் கொண்டு உணவை டெலிவரி செய்ய வேண்டும் என்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

how to order food in google food delivery

how to order food in google food delivery
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more