டெல்லி : தேர்தல் அறிக்கை வந்தலிந்திருந்தே பல வராங்களாக பெட்ரோல் விலை அதிக ஏற்றம் இல்லாமல் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் என்று தேர்தல் முடிந்ததோ அன்றிலிருந்தே பெட்ரோல் டீசல் விலை மீண்டும் எகிற ஆரம்பித்து விட்டது.
அதிலும் கடந்த மே 19 லிருந்து, மே 28 வரையிலான காலத்தில் சிறுக சிறுக ஏற்றி சுமார் பெட்ரோல் விலை 82 பைசாவும், டீசல் 73 பைசாவும் ஏற்றப்பட்டுள்ளது.
அட ஆமாப்பு உங்ககிட்ட இருந்து மொத்தமா புடுங்கினா தானா தப்பு, கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக்கிட்ட தப்பு இல்லையே என்று, விலை சிறிது சிறதாகவே ஏற்றப்பட்டுள்ளது.
அதிலும் அரசுக்கு சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிசி) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிஎல்) ஆகியவை கடந்த காலங்களில் (தேர்தல் காலத்தில்) முடக்கப்பட்ட விகிதங்களில் இருந்தன.
இந்தியாவை கழட்டி விட்ட அமெரிக்கா.. இனி மானிட்டரி லிஸ்டில் இந்தியா இல்லை.. கவலையில் மோடி
ஆனால் அதற்காக தான் இப்போது வட்டியும் முதலுமாக ஏற்றிக் கொண்டிருக்கின்றனவோ எண்ணவோ? என்று கூட தோன்றுகிறது. ஆமாப்பு நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் நுகர்வோருக்கு தேவையான அனைத்து விலை உயர்வுகளையும் கொண்டு வரவில்லை இருப்பினும், தற்போது இதை ஒரே அடியாக மக்களின் தலையில் சுமத்துகின்றனர் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் கர்நாடகா தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல், டீசல் விலை சுமார் 19 நாட்கள் வரை முடக்கப்பட்டது. எனினும் அதே சமயத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 5 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் தேர்தலுக்கு பின் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3.8 ரூபாயும், டீசல் விலை 3.38 ரூபாயும் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இதே போல தமிழகத்திலும் விலையேற்றம் கண்டு வருகிறது எனவும், இந்த விலையேற்றம் இன்னும் கூட அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது
குறிப்பாக 10 நாட்களில் 83 பைசா என்றால் மாதத்திற்கு எவ்வளோ என்று கணக்கு பாருங்கப்பு, கணக்கு சரியா வரும்.