மோடிஜி ஒயின்ஷாப்புடன் ஆதார் எண்னை இணையுங்கள்.. மானியமும் கொடுங்கள்.. கேரள பெண் பலே கோரிக்கை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்த நிலையில் அவருக்கு அந்த மாலத்தீவு அளிக்கும் மிக உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளதாம் நல்ல விஷயம் தானே.

 

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஒரு பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதாக ஒரு தகவல் பரப்பரப்பாக பேசப்பட்டும் வருகிறது. அது இணையதளத்தில் வேகமாக பரவியும் வருகிறது.

அது நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் மது பழக்கத்தோடு அவர்களின் உடல் நலம் மட்டும் அல்ல, பொருளாதாரமும் சீர் கெடுகிறது. இது நாட்டிற்கு வருமானமாக இருந்தாலும் கூட அடித்தட்டு மக்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் அனுதினமும் கண்கூடாக பார்க்க முடிகிறது. சரி எப்படியோ குடிக்கிறத விட போறது இல்ல. சரி இப்படியாவது ஒரு வருமானம் வரட்டுமே என்கிறது இந்த கேரள சேச்சியின் கோரிக்கை. நியாமான கோரிக்கை தானே.

மதுபான விற்பனையை ஆதாருடன் இணையுங்கள்

மதுபான விற்பனையை ஆதாருடன் இணையுங்கள்

அப்படி என்ன கோரிக்கை என்று கேட்கிறீர்களா? அது நம்ம ஆதார் கார்டு எண்ணையும் ஒயின்ஷாப்பையும் பற்றிதாங்க? ஆமாங்க.. இப்படியெல்லாம் கூட செய்யலாமோ என்று யோசிக்கும் அளவுக்கு ஒரு செய்தி. மதுபான விலையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும், அதோடு மதுபான விற்பனையை ஆதார் எண்ணுடன் இணையுங்கள். மாதத்திற்கு மதுபான விற்பனை இவ்வளவு தான் விற்பனை என்று இலக்கு நிர்ணயம் செய்யுங்கள். இதனால் அவர்கள் குடிக்கும் அளவு எவ்வல என அவர்களுக்கும் தெரியும், மனைவிமார்களுக்கும் தெரியும்.

மதுபானம் வாங்கும் காசில் மானியம் கொடுங்கள்

மதுபானம் வாங்கும் காசில் மானியம் கொடுங்கள்

அதன் பின் ஒருவர் எவ்வளவு ரூபாய்க்கு மதுபானம் வாங்கியிருக்கிறாரோ அதில் பாதி பணத்தை அவரின் பாதிப் பணத்தை அவன் மனைவியின் பேங்க் அக்கவுண்டில் மானியமாக செலுத்துங்கள். இதனால் ஒரு புறம் மக்கள் குடித்தாலும் குடும்பத்திற்கு வருமானமும் அதிகரிக்கும் என்று ஆதங்கப்பட்டுள்ளாராம்.

எவ்வளவு குடிக்கிறாங்கன்னு தெரிய வரும்?
 

எவ்வளவு குடிக்கிறாங்கன்னு தெரிய வரும்?

பின்பு தான் பெண்களுக்கும் சரி, நாட்டுக்கும் சரி ஒருவன் எவ்வளவு தான் குடிக்கிறான் என்று தெரிய வரும். இதையும் மீறி ஒருவர் அதிகமாக குடிக்கும்போது மனைவி மார்களுக்கு அதிகளவு வருமானமும் வரும்.

டேக்ஸ் கட்டுற நிலைமை கூட வரலாம்!!

டேக்ஸ் கட்டுற நிலைமை கூட வரலாம்!!

அதோடு மட்டும் அல்ல மனைவிமார்களும் அதிகமாக வங்கிகளில் பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்வார்கள். இதனால் அரசுக்கு வருமான வரி கட்டுற நிலைமை கூட வரலாம. ஆக இதை விரைவில் செயல்படுத்துங்க என்று ஒரு பெண் கடிதம் எழுதியுள்ளதாகவும், இது சமூக வலைதளங்களில் மிகப் பரப்பரப்பாக பேசப்பட்டும் வருகிறது.

55% அதிகரிப்பு

55% அதிகரிப்பு

உண்மையிலேயே நியாமான கோரிக்கைதான். இப்படியொரு சாத்தியப்பட்டால் உண்மையில் பெண்கள் வரி செலுத்தும் நிலை வந்தாலும் வரலாம். இதில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்தியாவில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் மது குடிப்பழக்கம் 55% அதிகரிச்சிருக்காம். ஆமாங்க.. இது என்ன கொடுமைன்னா? சராசரியா ஒரு மனிதன் எடுத்துக் கொள்ளும் ஆல்காஹின் அளவு சீனாவில் 7 லிட்டர் தானாம், ஆனா இந்தியாவுல 10 லிட்டராம். எப்புடி?

மதுவுக்கு அடிமையாகிறார்கள்?

மதுவுக்கு அடிமையாகிறார்கள்?

இது மட்டும் இல்லங்க? உலக சுகாதார நிறுவனம் மற்றொரு ஆய்வில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் 30% ரெகுலராக குடிப்பவர்கள் இருக்கிறார்களாம். இதில் என்ன கொடுமைன்னா? நல்ல பணக்காராங்களாக இருப்பவர்கள் 25.3% தான் குடிக்கிறாங்களாம். இதே ஏழ்மையில் இருப்பவர்கள் 30.2% குடிக்கிறாங்களாம். ஆனா கூலி வேலை செய்து அன்றாடம் கஷ்டபடுற மிக ஏழ்மையான குடும்பத்த சேர்ந்தவங்க தான் 35.8 சதவிகிதம் குடிக்கிறாங்களாம்.

இறக்குமதி சரக்கு விலை அதிகம்

இறக்குமதி சரக்கு விலை அதிகம்

இந்தியாவில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்ட பின்னர், அதிகப்படியான வரியின் காரணமாக இறக்குமதி சரக்குகள் விற்பனை விலை அதிகரிச்சிருக்காம். குறிப்பா பீர், விலையுயர்ந்த ஓயின்கள், சரக்குகள் விற்பனை இதுனாலேயே 0.8% குறைஞ்சிருக்காம். ஆமாங்க..

மது விற்பனை CAGR அதிகரிக்கும்

மது விற்பனை CAGR அதிகரிக்கும்

இந்தியாவில் மது விற்பனை CAGR 2022ல் 8.8% அதிகரிக்குமாம். ஆமாப்பு.. சுமார் 16.8 பில்லியன் லிட்டர் விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஓட்கா என்றும் சொல்லப்படும் மதிவிற்பனை 21.8% சதவிகிதத்தில் இருந்து 22.8% அதிகரிக்குமாம்.

குடிமக்களுக்கு உதவி

குடிமக்களுக்கு உதவி

அதிலும் இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, சிக்கிம், ஹரியானா மற்றும் இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மது நுகர்வோர் அதிகம் உள்ள மாநிலங்களாம். இதில் அதிகளவு மதுபானம் விற்பனை மதுபான கடைகள் தானாம். இதை இன்னும் நம் குடிமக்களுக்கு எளிதாக்க ஷாப்பிங் மால்களிலும், அதுவும் டயர்1 மற்றும் டயர்2 நகரங்களில் நிறுவி வருகிறதாம் அரசு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kerala lady writes a letter to PM Narendra modi to help Indian ladies

India is one of the fastest growing alcohol markets in the world. But Rapid increase in urban population, sizable middle class population with rising spending power.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X