அட நிஜந்தாங்க.. 14 மாசத்துல ரூ.35,000 கோடி கட்டியிருக்கேன்.. பயப்படவேண்டாம்.. அனில் அம்பானி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ரிலையன்ஸ் குழுமத்தின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியதன் விளைவாக ரிலையன்ஸ் குழும பங்குகளின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிய தொடங்கியுள்ளனவாம், இதனால் பயந்து போன அனில் அம்பானி, யாரும் பயப்பட வேண்டாம் என்றும், கடந்த 14 மாத்தில் மட்டும் ரூ.35,000 கோடி கடன் மதிப்பை திருப்பி அளித்துள்ளதாகவும் அறிவித்துள்ளாராம் அனில் அம்பானி.

 

இன்று பத்திரிக்கையாளர் கூட்டத்தில் பேசிய அனில் அம்பானி, நிதி நிறுவனங்களில் இருந்து நிதி வழங்கும் நிலை மிக மோசமாக இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் குழுமம் இதுவரை அசல் தொகையில் ரூ.24,800 கோடியும், வட்டியாக 10,600 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளதாம்.

அட நிஜந்தாங்க.. 14 மாசத்துல ரூ.35,000 கோடி கட்டியிருக்கேன்.. பயப்படவேண்டாம்.. அனில் அம்பானி

கடந்த சில வாராங்களாக ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் பங்குகள் பற்றிய தேவையில்லாத வதந்திகள் பரவி வருவதாகவும், அதோடு மோசமான யூகங்களும் நிலவி வருவதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார்.

பட்ஜெட் 2019-20: ஐடியா கொடுக்க வாங்க... ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைக்கும் நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில் ரிலையன்ஸ் குழும பங்கு தாரர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ஃப்ரா இதோடு சம்பந்த துறைகளின் கடன் தொகை ரூ.35,000 கோடியாம்.

இது குறித்து கூறிய அனில் அம்பானி எதிர்கால கடமைகளை நிறைவேற்றுவதற்காக, கடனை கட்டுவதற்காக பல திட்டங்கள் தீட்டியுள்ளதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

அதோடு இந்த விவகாரங்களை ஒருங்கினைக்கும் வகையில் ஒழுங்கு முறை ஆணையமோ நீதிமன்றங்களோ எந்த ஒரு இறுதி தீர்ப்பையும் வழங்கவில்லை.

இந்த நிலையில் எந்தவொரு மோசமான நிதி நெருக்கடியிலும், மிகவும் சவாலான சூழ்நிலையிலும் கூட ரிலையன்ஸ் குழுமம் ரூ,35,000 பணத்தை செலுத்தியுள்ளது. அதுவும் வங்கிகளிலோ, பரஸ்பர நிதி நிறுவனங்களிலோ, வங்கிகளோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலோ கடனை வழங்காத நிலையிலும் இந்த கடனை திரும்ப கட்டியுள்ளது.

 

இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமம் தனித்து நின்று இதனை செய்துள்ளது. எனக்கு நம்பிக்கை உள்ளது இந்த கடன் பிரச்சனையை முடித்து, பங்கு தாரர்களுக்கு லாபகரமான உயர்ந்த வருமானம் உடைய பங்குகளாக ரிலையன்ஸ் மாறும் என்றும் அனில் நம்பிக்கை தெரிவித்துள்ளராம். நம்பிக்கை பலிக்கட்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil ambani got Rs.35,000 crores debt in past 14 months

Anil ambani was repaid the principal of Rs.24,800 crores and made interest payments of Rs.10,600 crores between April 1, 2018, and May 31, 2019. But same time Unwarranted rumour mongering, speculation, and bear hammering of all Reliance Group companies shares over the last few weeks, has caused grave damage to all our stakeholders.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X