நல்ல மனுசன்யா.. விவசாயிகளின் கடனை தீர்த்த கர்நாடகா முதல்வர்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு: கர்நாடக மாநில விவசாயிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன் மொத்த தொகையான ரூ.6,589 கோடியை ஒரே தவணையாக வங்கிகளுக்கு செலுத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டபோது, விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தன.

நல்ல மனுசன்யா.. விவசாயிகளின் கடனை தீர்த்த கர்நாடகா முதல்வர்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்!

அதை செயல்படுத்த வசதியாக வங்கிகளில் விவசாயிகள் எவ்வளவு கடன் பெற்றுள்ளார்கள் என்ற விவரம் கேட்டபோது ரூ.46,000 கோடி வரை விவசாயிகள் பயிர் கடன் பெற்றுள்ளதாக வங்கிகள் மூலம் அரசுக்கு தெரிய[ப்படுத்தப்பட்டது.

விவசாய கடன் தொகை அதிகமாக இருந்த போதிலும் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளாராம். அதன் முதல் படியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனில் ஒரு பகுதியான ரூ.3,929 கோடியை மாநில அரசே வழங்கியுள்ளது.

அதோடு கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட ரூ.4,830 கோடி விவசாய கடன்களையும் அரசே செலுத்தியுள்ளது. இதன் மூலம் முறையே தேசியமையாக்கப்பட்ட வங்கிகளில் 7.49 லட்சம் விவசாயிகளும் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 11.20 லட்சம் விவசாயிகளும் பயனடைந்துள்ளனராம்.

என்னோட 13.5 கோடி ரூபாய் எங்கய்யா..? வழக்கு தொடுத்த Sachin Tendulkar..!

இந்த தொகையை ஒரே தவணையாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு செலுத்தும் அரசாணையை நேற்று முன்தினம் இரவு கர்நாடகா அரசு வெளியிட்டது. இதன் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடாகவில் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் கமட்டள்ளி, பி.சி.பட்டீல் உள்ளிட்டோரை சமாதானப் படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டுள்ளனராம்.

அதோடு மூத்த தலைவரான ராமலிங்க ரெட்டிக்கு மந்திரி பதவி வழங்காததால், அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து, மந்திரி சபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மந்திரிசபையை மாற்றி அமைப்பதா? என்ற குழப்பமே நீடித்து வருகிறது.

 

இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் அதைத்தொடர்ந்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மந்திரிசபை விரிவாக்கம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnataka govt order banks to release money for farm loan waivers

Karnataka government has ordered the release of money for farm loan waivers of restructured loans of Rs 2,812 crore, overdue loans of Rs 3,057 crore and incentive for regular loans of Rs 720 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X