அடித்துக் கொள்ளும் அமெரிக்கா - சீனா.. இந்தியாவில் களை கட்டும் ஏற்றுமதி.. குஷியில் உற்பத்தியாளர்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஒரு புறம் அமெரிக்கா சீனா பிரச்சனை வலுப்பெற்றுக் கொண்டே போனாலும், மறுபுறம் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக ஐ.எம்.எஃப் கூறி வருகிறது.

 

ஆனால் என்னே அதிசயம் பாருங்க.. இந்தியாவுக்கு இது அதிர்ஷ்டமாக மாறியுள்ளது. அமெரிக்க, சீன சண்டையால் இந்தியாவில் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாம். குறிப்பாக இந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பிரச்சனை அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக கெமிக்கல்ஸ் மற்றும் கிரானைட் பொருட்கள் உள்ளிட்ட 350 பொருட்களுக்கு இந்த இரு நாடுகளும் ஏற்றுமதி வாய்ப்புகளை அளித்துள்ளதாக வர்த்தக அமைச்சகத்தின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்பு

இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்பு

அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனை இன்றளவிலும் ஒரு முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. குறிப்பாக அமெரிக்கா சீனா பொருட்களுக்கும், சீனா - அமெரிக்கா பொருட்களுக்கு மாறி மாறி வரியை விதித்துக் கொள்கின்றன. இந்த நிலையில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே, மேலும் மேலும் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் இந்த பிரச்சனை ஒரு புறம் இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆமாங்க... இந்த நிலையில்தான் இந்த இரு நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்திருக்கின்றனவாம்.

அதிகரிக்கும் வர்த்தக பிரச்சனை

அதிகரிக்கும் வர்த்தக பிரச்சனை

அமெரிக்கா - சீனா ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதி வரிகளை அதிகரித்துக் கொள்வதால், இந்த இரு நாடுகளின் வர்த்தக பிரச்சனைகள் நாளுக்கு நாள் இன்னும் அதிகமாகி கொண்டே தான் போகிறது. மேலும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்னும் 300 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனா பொருட்களுக்கு வரியை மீண்டும் அதிகரிக்க போவதாகவும் கூறியிருக்கிறார். இதனால் இந்த இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக போர் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்தியாவில் இருந்து என்ன பொருட்கள் ஏற்றுமதி?
 

இந்தியாவில் இருந்து என்ன பொருட்கள் ஏற்றுமதி?

வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், டீசல், மற்றும் இரசாயனங்கள், எக்ஸ்ரே டியூப்ஸ் உள்ளிட்ட 151 பொருட்களை அமெரிக்கா சீனாவிற்கு முக்கியமாக ஏற்றுமதி செய்து வந்ததாகவும், இதே 203 பொருட்களை சீனா அமெரிக்காவுக்கு ரப்பர், கிராபைட் மின் முனைகள் உள்ளிட்ட பல பொருட்களின் ஏற்றுமதி இந்தியாவுக்கு கைமாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் சந்தை வாய்ப்பை அணுகி வருகிறது?

சீனாவின் சந்தை வாய்ப்பை அணுகி வருகிறது?

இந்தியாவின் சந்தை பலத்தை அதிகரிக்க இது முக்கிய தருணமாகும். குறிப்பாக இந்தியாவில் இருக்கும் சில பொருட்களுக்கு உடனடியாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய குறிப்பிட்ட பொருட்கள் உள்ளன. இந்த நிலையில் சீனாவின் சந்தை அணுகலை பெறவும் இந்திய ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் சீனாவுக்கு தேவையான பொருட்கள்

இந்தியாவில் சீனாவுக்கு தேவையான பொருட்கள்

குறிப்பாக சீனாவின் சந்தையை தக்கவைத்துக் கொள்ள கூடிய அளவில் இந்தியா பல பொருட்களை கொண்டுள்ளது. அதில் காப்பர் தாதுக்கள், ரப்பர், காகித அட்டை, கம்பி வலை அமைப்பில் குரல், தரவை அனுப்பும் நெட்வொர்க்கள், தாளங்கள் மற்றும் பைப்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

அமெரிக்காவுக்கான பொருட்கள்

அமெரிக்காவுக்கான பொருட்கள்

குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா சந்தையின் ஏற்றுமதி வாய்ப்புகளை அடைய உள் நாட்டுப் பொருட்கள் பல உள்ளன. குறிப்பாக தொழிற்துறை வால்வுகள், வல்கனைஸ்டு ரப்பர், கார்பன் கிராஃபைட், இயற்கை தேன் மற்றும் கிராபைட் எலக்ட்ரோபைட்ஸ் உள்ளிட்ட பல பொருட்களுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க உதவும்

இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க உதவும்

குறிப்பாக இந்த இரு நாடுகளின் ஏற்றுமதி ஆர்டர்களால், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை. இது கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் - முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் வரையில் 50.12 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக போரால் இந்தியாவுக்கு நன்மை

வர்த்தக போரால் இந்தியாவுக்கு நன்மை

ஃபெடரேஷன் ஆப் இண்டியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேசன் தலைவர் கணேஷ் குமார் கூறுகையில், அமெரிக்கா சீனா வர்த்தக யுத்தம் ஒரு புறம் வேதனையளிப்பதாக இருந்தாலும், இந்தியாவுக்கு இது நன்மையே அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 11.2 சதவிகிதமாகவும், சீனாவின் ஏற்றுமதி 31.4 சதவிகிதமாகவும் இருந்து வந்தது.

பொறியியல் துறையில் ஏற்றுமதி வாய்ப்பு

பொறியியல் துறையில் ஏற்றுமதி வாய்ப்பு

லூதியானாவை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுமதியாளரும், முன்னாள் தலைவர்

ஃபெடரேஷன் ஆப் இண்டியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேசனின் முன்னாள் தலைவரும் எஸ்.சி. ரால்ஹான் பொறியியல் மற்றும் இயந்திரத் துறையில் மகத்தான வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறியுள்ளராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India can boost exports of over 350 products to US and China amid trade war

The ongoing trade war between the US and China offers an opportunity to India for boosting exports around 350 products such as chemicals and granite to these countries.
Story first published: Sunday, June 16, 2019, 16:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X