பினாமி மூலம் பண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் இனி தப்ப முடியாது.. வலை வீசும் வருமான வரி துறை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : பினாமி மூலம் வருமானத்தை அதிகரித்து அதன் மூலம் வரி ஏய்ப்பவர்கள், இதன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறை கடந்த திங்கட்கிழமை முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறையில் கொள்கை முடிவுகளை எடுக்கும் முக்கிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் குற்றங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை திங்கட்கிழமை வெளியிட்டது.

பினாமி மூலம் பண மோசடி, ஊழலில் ஈடுபட்டவர்கள் இனி தப்ப முடியாது.. வலை வீசும் வருமான வரி துறை!

 

இதன் மூலம் வருமான வரி ஏய்ப்பு குற்றம் செய்தவர்கள், உரிய வரியை செலுத்துவதோடு, தண்டனைக்குரிய கூடுதல் வரியையும் செலுத்தினால், அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படாது என்றும். இந்த வகையில், அவர்கள் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற்று வருகிறார்கள்.

ஆனால், இனி மத்திய நேரடி வரிகள் வாரியம் திங்கட்கிழமை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி, கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து இனிமேல் நிவாரணம் பெற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக தேசவிரோதம், பயங்கரவாத ஆதரவு, பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டவர்கள், சட்டவிரோத பண பரிமாற்றம் போன்ற குற்றங்களுக்காக அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படுபவர்கள், ஊழலுக்காக சி.பி.ஐ., லோக் பால், லோக்ஆயுக்தா, போலீஸ் உள்ளிட்ட விசாரணை அமைப்புகளால் விசாரிக் கப்படுபவர்கள் என்றும், இவர்கள் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு நேரடி வரிகள் சட்டத்தின் படி, நீதிமன்றத்தால் தண்டிக் கப்பட்டவர்கள், மற்றவர்களை வரி ஏய்ப்பு செய்ய தூண்டியவர்கள், வெளிநாட்டு சொத்துகளையும், வெளிநாட்டு வங்கிக்கணக்கையும் மறைத்தவர்கள், பினாமி சொத்து தடுப்பு சட்டம், கருப்பு பண தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றங்களை செய்தவர்கள் ஆகியோரும் வரி ஏய்ப்பு குற்றத்தில் இருந்து நிவாரணம் பெற முடியாது எனவும் அறிவித்துள்ளது.

அதோடு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்களும் நிவாரணம் பெற முடியாது. ஒருவரின் நடத்தை, இயல்பு, குற்றத்தின் தன்மை ஆகியவற்றை பொறுத்தும் நிவாரண சலுகை மறுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தகுதியான நபர்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தளர்த்துவதற்கு மத்திய நிதி மந்திரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New guidelines for IT Department, Be aware of this

Indulgence in serious criminal cases of money laundering, terror financing, corruption, possession of benami properties and undisclosed foreign assets will virtually shut a person's chances of getting relief in an income tax evasion offence beginning Monday, but latest directive issued by the CBDT. The policy-making body for the tax department has issued new I-T Act.
Story first published: Tuesday, June 18, 2019, 9:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more