12,000 விவசாயிகளை காவு வாங்கிய கடன் பிரச்சனை.. ரூ.19,000 கோடி தள்ளுபடி... இருந்தும் தற்கொலை ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், இது மஹாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 12,021 விவசாயிகள் மூன்று ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆமாங்க.. கடந்த 2015 - 2018 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 12,021 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளது.

எனினும் அதே நேரம் ரூ.19,000 விவசாயக் கடனும் தள்ளுபடி செய்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் தேவேந்திரா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

3 மாதங்களில் 610 பேர் தற்கொலை
 

3 மாதங்களில் 610 பேர் தற்கொலை

அம்மாநிலத்தில் பாஜாக தலைமையிலான தேவேந்திரா பட்நாவிஸ் முதல்வராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அங்கு நடந்து வரும் கூட்டத்தொடரில் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் சுபாஸ் தேஸ்முக் அளித்த அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 12,021 விவாசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிலும் நடப்பு ஆண்டின் தொடக்க 3 மாதங்களில் மட்டும் 610 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் அறிக்கையை சமர்பித்துள்ளாராம்.

இறந்தவர்கள் இழப்பீடு பெற்றவர்களும் உண்டு

இறந்தவர்கள் இழப்பீடு பெற்றவர்களும் உண்டு

மொத்தம் தற்கொலை செய்து கொண்டுள்ளவர்களின் 12021 பேரில் 6888 பேர் விவசாய இழப்பீடு பெற தகுதியானவர்கள். ஆமாங்க.. இதில் கிட்டத்தட்ட பாதிபேர் இழப்பீடு பெற தகுதியானவர்களாம். இதில் 6845 விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாம். அதிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இறந்த 610 பேரில் 192 பேர் இழப்பீடு பெற தகுதியானவர்களாம். இதில் சுமார் 92 விவசாயிகள் இல்லை எனவும், மீதம் இருக்கும் 323 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

43.32 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்

43.32 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்

இதற்கு பதில் கூறிய முதல்வர் தேவேந்திரா பட்நாவிஸ், விவசாயிகளுக்கு சுமார் ரூ.24,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் விவாசயிகள் கடன் தள்ளுபடி பெறுவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதோடு இதில் மொத்த எண்ணிக்கையில் இதுவரை 43.32 லட்சம் விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இதுவரை 19,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் விவசாயிகளா?
 

இறந்தவர்கள் விவசாயிகளா?

ஒரு மாநிலத்தில் ஒருவர் இறந்தால் உடனே அவர் விவசாயி என்று அர்த்தம் அல்ல. அவர் உண்மையிலேயே விவசாயியா என்று சட்டம் தான் முடிவு செய்யும். அவ்வாறு ஒரு வேலை தற்கொலை செய்து கொண்டவர் உண்மையிலேயே விவசாயி என்றால் அவருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

பெயர் இருந்தால் போதும்?

பெயர் இருந்தால் போதும்?

அதோடு குடும்பத்தில் எந்தவொரு நபருக்கும் விவசாய ஆவணங்களில் பெயர் இருந்தால் கூட இறந்த நபராக இருந்தாலும் சரி, அல்லது குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரும் தேசியமயமாக்கப்பட்ட அல்லது கூட்டுறவு வங்கிகளிலோ, கூட்டுறவு கடன் சங்கங்கள், அல்லது உரிமம் பெற்ற பணக் கடன் வழங்குனர்களிடமிருந்து கடன் பெற்றிருந்தால் இழப்பீடு பெற தகுதியுடையவராக கருதப்படுகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Around 12,000 farmers died of suicide in 3 years in Maharashtra

Maharashtra government spending over Rs.19,000 crore on farm loan, at that same time total no 12,021 farmers died in the state due to suicide between 2015 – 2018. The government said in assembly meeting on Friday.
Story first published: Sunday, June 23, 2019, 15:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X