Bike Bot - மூலம் ரூ.1500 கோடி அபேஸ்.. 2.25 லட்சம் பேரை ஏமாற்றிய பலே கில்லாடிகள்.. கதறும் மக்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நொய்டா : நம்ம ஊரு ஈமு கோழி மாதிரி நொய்டாவில் பைக்கை வைத்து, Bike Bot scheme மூலம் ஏமாற்றிய பலே கில்லாடிகள் 1500 கோடி ரூபாயை ஏப்பம் விட்டுள்ளனராம்.

அட ஆமாங்க.. நொய்டாவை சேர்ந்த Gravit Innovative Promoters Pvt Ltd. நிறுவனம் இந்த பலே வேலையை செய்துள்ளது. எபப்டியெல்லாம் யோசிச்சு மக்கள் ஏமாத்துறாங்க பாருங்க..

எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருகிறோம் என கூறி முதலீடு செய்ய வைத்திருக்கிறார்கள். அதோடு இருமடங்கு லாபம் தருகிறோம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

மக்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை?
 

மக்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை?

முன்னதாக சஞ்சய் பதி என்பவர் தான் இந்த Gravit Innovative Promoters Pvt Ltd.நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதில் கொடுமை என்னவெனில் மக்களிடம் இவ்வாறு முதலீட்டு நோக்கத்தில் வாங்கிய பணத்தில் அண்ணன் ஆர்டி கார், ரோஞ்ச் ரோவர், ஜாகுவார், உள்ளிட்ட பல சொகுசு கார்களை வாங்கிக் குவித்துள்ளார். அடுத்தவன் காச ஆட்டைய போட்டு வாழ்துறல்ல அப்படி ஒரு சுகம் அண்ணனுக்கு, அதான் இப்ப ஜெயில்ல உக்கார்ந்து கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.

முதலீடு எப்படி பெறப்பட்டது?

முதலீடு எப்படி பெறப்பட்டது?

இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் என்று கூறி, நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இரு சக்கர வாகனங்களில் முதலீடு செய்கிறோம் என்று கூறி கலக்சனில் இறங்கியுள்ளது. அவ்வாறு முதலீடாக வாங்கப்பட்ட முதலீட்டின் அளவு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.1500 கோடி என்றும் தெரிய வந்துள்ளது. சுமார் 2.25 லட்சம் முதலீட்டாளர் இவ்வாறு முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த ஊரில் ஆரம்பித்தது

சொந்த ஊரில் ஆரம்பித்தது

டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்கும் சஞ்சய் பதி 42 வயதான, இந்த கில்லாடி தான் இந்த நிறுவனத்தின் நிறுவனர். கடந்த 2010ல் இந்த கில்லாடியின் சொந்த ஊரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர், நொய்டா, அலிகார், காஸியாபாத், டெல்லி, ஜெய்ப்பூர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விரிவு படுத்தப்பட்டதாம்.

பைக் வாங்கனும் முதலீடு செய்யுங்க?
 

பைக் வாங்கனும் முதலீடு செய்யுங்க?

இதற்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பைக்குகளை வாங்கிக் குவித்திருக்கிறது இந்த நிறுவனம். அதோடு இவ்வாறு பைக் வாங்க முதலீடாக மக்களிடம் இருந்து 62,000 முதலீடாகவும் பெறப்பட்டுள்ளது. இதற்காக முதலீட்டாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9,765 ரூபாய் வருமானமும் கொடுப்பாதாகவும் கூறியுள்ளது,. ஆமாங்க.. அதிலும் 4590 ரூபாயை பைக்கிற்கு மாத வாடகையாகவும், மீதமுள்ள 5175 முதலீடு செய்யப்பட்டதற்காக இலாபம் எனவும் கூறியுள்ளது இந்த நிறுவனம். அதோடு இதன் மூலம் 1,17,180 ரூபாய் வருடத்திற்கு கிடைக்கும் என்றும் கூறியதை அடுத்து முதலீடு குவிய தொடங்கியுள்ளது. நம்ம அப்பாவி மக்களும் லாபம்ன்னு சொன்னதும் கொண்டு வந்து குவிச்சிட்டாங்களாம்.

கிளைக்களுக்கு 10,000 பைக்குகள்

கிளைக்களுக்கு 10,000 பைக்குகள்

உத்திரபிரதேசம் மாநிலம், கவுதம் புத்தா நகரை சேர்ந்த சித்தி அருகிலுள்ள Dankaur என்னுக் கிராமத்தை சேர்ந்தவர் தான் சஞ்சய் பதி, வியாபாரம் களை கட்ட தொடங்கிய பின்னர் இந்த நிறுவனத்தின் புரோமோட்டர்கள் நீறுவனங்களாக நொய்டா, அலிகார், காஸியாபாத், சஹரன்பூர், முசாபர்பூர், டெல்லி, ஜெய்ப்பூர் ஹரியானா உள்ளிட்ட இடங்களில் புதிய அலுவகைகளை தொடங்கியுள்ளனர். இதற்கு சுமார் 10,000 பெட்ரோல் பைக்குகளையும் வாங்கியுள்ளார். அதோடு சில இ- பைக்குகளையும் வாங்கியுள்ளார் இந்த புண்ணியவான்.

51 பைக் தாரேம்.

51 பைக் தாரேம்.

இந்த நிறுவனத்தின் நிறுவனரான சஞ்சய் பதி மற்றும் அவரது கூட்டாளிகளான ராஜேஷ் பரத்வாஜ், சுனில் குமார், பிரஜாபதி, திப்தி பெஹ்ல், சச்சின் பதி, கரண் பால் சிங் கடந்த 2018ல் ஜெய்ப்பூரில் பைக் டாக்ஸியின் உரிமையை பெறுவதற்காக மீனா பதியுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆமாங்க ஜெய்ப்பூர் கிளைக்கு 51 பைக்குகள் வாங்குவதாகவும், Gravit Innovative Promoters Pvt Ltd லிமிடெட் நீறுவனம் இதன் மூலம் 34 லட்சம் ரூபாய் முதலீட்டையும் பெற்றுள்ளனர். இதையடுத்து மாதம் மாதம் 6.45 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

கலைந்து போன கனவு?

கலைந்து போன கனவு?

இந்த நிலையில் மீனா அடுத்த மாதம் தன் கணக்கில் 6 லட்சம் ரூபாய் வரும் என்று கனவில் மிதக்க, மறுபுறம் வெறும் 66,000 ரூபாய் தான் வந்திருக்கிறது. இது குறித்து விசாரிக்க போகவே சரியான பதில் கிடைக்காத காரணத்தால், அடுத்தடுத்து இரண்டு மாதங்களுக்கு வெயிட் பன்னி பார்க்கவே, வங்கிக் கணக்கிற்கு எதுவும் வராமல் போகவே மீனாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. அப்போது தான் தெரிந்திருக்கிறது இவருக்கு தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று. பின்னர் தான் இவர் போலிசாரின் உதவியை நாடியுள்ளார்.

முதலீடுதான் முக்கியம்?

முதலீடுதான் முக்கியம்?

இந்த நிலையில் பல மாதங்கள் கடந்த பின்னர் தான் கடந்த பிப்ரவரி மாத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார் மீனா. இது குறித்து அந்த பதிவில் இந்த பைக்குகள் வெறும் ஷோ - க்காக மட்டும் தான். நாங்கள் மல்டி லெவல் மார்கெட்டிங் வர்த்தகத்தில் தான் முதலீடுகளை செய்கிறோம் என்றும் அந்த நிறுவன அதிகாரிகள் கூறியதாகவும், இதில் முதலீடு செய்வதன் மூலம் அடுத்தடுத்து ஆட்களை சேர்த்தால் நீங்கள் லாபம் பெறலாம் என்று கூறினர். நாங்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறோம் நீங்களும் சம்பதிக்க நினைத்தால் முதலீடு செய்யலாம் என்றும் கூறியுள்ளனர்.

26 பைக் தான் மிச்சம்?

26 பைக் தான் மிச்சம்?

ஆனால் இதுவரை அவருக்கு 26 பைக்குகள் மட்டும் அனுப்பட்டுள்ளதாகவும், முதலீடு செய்யும் போது 34 லட்சம் ரூபாய்க்கு 75 லட்சம் ரூபாயாக திரும்ப கிடைக்கும் என்றும் கூறியும் பணத்தை முதலீடு செய்ய வைத்துள்ளனர். ஆனால் இதுவரைக்கும் அவருக்கு எந்த வித பணமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

வேறு கணக்கில் ரூ.650 கோடி முதலீடு

வேறு கணக்கில் ரூ.650 கோடி முதலீடு

இந்த நிலையில் தேடுபட்டு வந்த சஞ்சய் பதி கடந்த ஜீன் 7ம் தேதியே போலிசாரிடம் ஆஜாராகி இருப்பதாகவும், அதோடு சஞ்சய்யின் 102 பைக்குகளும், ரேஞ்ச் ரோவர், டொயொட்டா, மாருதி மஹேந்திரா ஸ்கார்ப்பியோ, 3 டாட்டா நெக்ஷான்ஸ் உள்ளிட்ட பல கார்களையும், பல டாக்குமென்ட்களையும் கைபற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு 650 கோடி ரூபாய் வேறு வங்கிக் கணக்குகள் மூலமாகவும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் மீனா பதி. இந்த நிலையில் இந்தனீறுவனத்தின் மீது இதுவரை 37 எஃப்.ஐ.ஆர் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bike Bot scheme duped 2.25 lakhs investors of around Rs.1,500 crore

Bike Bot scheme duped 2.25 lakh investors of around Rs.1,500 crore. The accused bought luxury cars, including Jaguar, Audi and Range Rover, from the money, police said, adding that five directors of the company are on the run in different cities.
Story first published: Sunday, June 23, 2019, 18:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more