கதிகலங்கி நிற்கும் அமேசான் வணிகர்கள்.. அமெரிக்கா தான் காரணம்.. கடுப்பில் நிறுவனங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்தே அதிரடியான நடவடிக்களை தொடர்ந்து எடுத்து வருகிறார். இதனால் பல நாடுகளுடன் இருந்த நட்புறவு போய் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் கூட நிலவி வருகிறது.

 

அப்படி ஒன்று தான் அமெரிக்கா சீனா வர்த்தக போரும். ஒரு புறம் அமெரிக்கா வரி விதிக்க, மறுபுறம் சீனா அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிக்க, நீண்டு கொண்டே செல்கிறது இந்த பிரச்சனை.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் சீனா பொருட்களுக்கு ஏற்கனவே வரி விதிப்பை அதிகரித்த அமெரிக்கா, மீண்டும் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு மீண்டும் வரியை அதிகரிக்க போவதாகவும் மிரட்டியுள்ளார்.

டிரம்பிடம் மரண அடி வாங்கிய இந்தியா.. டல்லடிக்கும் நகைத்தொழில் ஏற்றுமதி.. இனி என்ன செய்யப்போகிறதோ?

பாதிக்கப்பட்ட அமேசான் வணிகர்கள்

பாதிக்கப்பட்ட அமேசான் வணிகர்கள்

ஒரு புறம் இந்த இரு நாடுகளின் பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் இருக்க, இந்த இரு நாடுகளும் மாறி வரி கொள்கையை மாற்றியதில் இந்த இரு நாடுகளை நம்பி வர்த்தகம் செய்து வந்த நிறுவனங்கள் மிக பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமேசான் இன்க் நிறுவனத்திற்கு பொருட்களை சப்ளை செய்து வந்த சீனா நிறுவனங்கள் மிக பாதிக்கப்பட்டுள்ளன.

அமேசான் வணிகர்களுக்கு பாதிப்பு

அமேசான் வணிகர்களுக்கு பாதிப்பு

ஒரு புறம் இந்த இரு நாடுகளும் சின்ன பிள்ளைகளை போல் சண்டை போட்டுக் கொண்டாலும், அமெரிக்காவின் அமேசானை நம்பி இருந்த பல சீனா நிறுவனங்கள் இதனால் மிக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஷாங்காய் தொழில் முனைவோர்கள், ஸ்க்ரூடிரைவர்கள் மற்றும் பல கருவிகளை சப்ளை செய்து வந்தனர். ஆனால் தற்போது அதிகப்படியான வரியால் பொருட்களின் விலை கூடியுள்ளது. இதனால் சீனாவை தவிர்த்து தானே உற்பத்தியில் குதித்துள்ளது.

சீனாவுக்கு பொருட்களை விற்க ஆள் தேவை
 

சீனாவுக்கு பொருட்களை விற்க ஆள் தேவை

ஒரு புறம் வரி அதிகரிப்பால் அமெரிக்கா தனது உற்பத்தியை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவையே நம்பி உற்பத்தி செய்த பொருட்களை மார்கெட்டிங் செய்ய வேறு நாடுகளை தேட வேண்டியுள்ளது சீனாவுக்கு. இதனால் சீனா நிறுவனங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியும் உள்ளன.

டிரம்ப் உத்தரவுக்காக Mom and pop –நிறுவனம் காத்திருக்க முடியாது

டிரம்ப் உத்தரவுக்காக Mom and pop –நிறுவனம் காத்திருக்க முடியாது

சீனாவின் Mom and pop நிறுவனம் இனியும் டிரம்பின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது. ஏனெனில் கிறிஸ்துமஸ் நேரத்திற்கான நிறுவன ஆர்டர்களையும், இலாபகரமான கிறிஸ்துமஸ் விற்பனையையும் வீணடிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. அதோடு அவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு ஈட்டும் வருமானத்தில் பாதியையாவது ஈட்ட வேண்டும் எனில் அவர்களுக்கு விலையை அதிகரிகக் வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், அதோடு அமெரிக்கா நிறுவனங்களை விடுத்து புது நிறுவனங்களை தேட வேண்டிய அவசியத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது. அதோடு உற்பத்தியை பிற நாடுகளுக்கு மாற்றுவது, சரக்குகளை சேமித்து வைப்பது போன்ற சில செலவுகள் அதிகரிக்கும் நிலையில் உள்ளதாகவும், இவற்றை ஈடுகட்ட வேண்டுமெனில் சரியான பருவத்தில் பொருட்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

 விலை அதிகரிப்பு உண்மைதான்?

விலை அதிகரிப்பு உண்மைதான்?

இது குறித்து அமேசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வரி அதிகரிப்பால் குறிப்பிட்ட சில பொருட்கள் 10 சதவிகிதம் வரை வரி அதிகரித்துள்ளது. இது நீண்ட சங்கிலி தொடராக உள்ளது. இந்த விலை அதிகரிப்பால் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது, விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பை விற்பனையாளர்களுடன் முடிந்தவரை மென்மையாக்க நாங்கள் விற்பனையாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும், இது குறித்து உற்பத்தியாளர்களுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

 ஜப்பானிலாவது விடிவு காலம் பிறக்குமா?

ஜப்பானிலாவது விடிவு காலம் பிறக்குமா?

இந்த நிலையில் ஜப்பானில் நடக்கவிருக்கும் உச்சி மாநாட்டிலாவது இந்த பிரச்சனைக்கு ஒரு விடிவு காலம் பிறக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இது சீனாவுக்கு மட்டும் அல்ல. இந்தியா ஏற்றுமதியாளர்களும் இதே எதிர்பார்ப்பில் தான் உள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon’s merchants are feel the pain of a trade war

Over the past some years, Shanghai entrepreneurs has built a decent business selling wrenches, screwdrivers and other tools on Amazon. . Its all totally affected the Trumps high Tariffs on thousands of goods made in China.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X