வருமானவரி ரிட்டன் படிவங்கள் எளிமை... ஒரே நாளில் ரீபண்ட் - நிர்மலா சீதாராமன்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு வருமான வரி ரீஃபண்ட் பெறுவதற்கான நடைமுறையை மேம்படுத்தியதை அடுத்து, நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் கடந்த 18ஆம் தேதி வரை சுமார் 64 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரையிலும் வருமான வரி ரீஃபண்ட் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வருமான வரி வசூலை நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய வருமான ஆணையம் தொடர்ந்து வருமான வரி ரிட்டன் படிவங்களை மேலும் எளிமையாக மாற்றியமைத்து வருகிறது.

 

கடந்த 2017ஆம் ஆண்டு வரையிலும் வருமான வரி செலுத்துவோரின் ரீஃபண்ட் தொகையை பெறுவதில் ஆறு மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையிலும் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. ஆனால் வருமான வரித்துறை எடுத்த தொடர் முயற்சியால் ரீஃபண்ட் பெறும் நடைமுறையும் மிக எளிமையாக ஆக்கப்பட்டது.

கடந்த 2018-19ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி ரீஃபண்ட் தொகையாக சுமார் 1.61 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் ரிட்டன் தாக்கல் செய்துள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையிலும் கடந்த 2018-19ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத சுமார் 26.90 கோடி பேர்களுக்கு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

எல்லாரும் வாங்க

எல்லாரும் வாங்க

மத்திய வருமான வரித்துறை ஆணையம் (Central Board of Direct Taxes) நாட்டின் வரி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, நாட்டிலுள்ள வரி செலுத்தும் வரம்பிற்குள் வரும் அனைவரையும் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கும் வரி செலுத்துவதற்கு ஊக்கமளிக்கும் வகையிலும் தொடர் முயற்சி எடுத்து வருகிறது. இதன் காரணமாகவே அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வருமான வரி ரிட்டன் படிவங்களை தொடரந்து எளிமைப்படுத்தி வருகிறது.

12 லட்சம் கோடி இலக்கு

12 லட்சம் கோடி இலக்கு

வருமானவரித் துறை எடுத்து வரும் தொடர் சீரிய முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சீராக அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதோடு வரி வருவாயும் ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டுக்கான வருமான வரி வசூல் எதிர்பார்த்த இலக்கான 12 லட்சம் கோடியை எட்டி விட்டதாகவும் மத்திய வருமான வரித்துறை கடந்த ஏப்ரலில் தெரிவித்திருந்தது.

யாரும் தேவையில்லை
 

யாரும் தேவையில்லை

வருமான வரி வசூலை நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய வருமான ஆணையம் தொடர்ந்து வருமான வரி ரிட்டன் படிவங்களை மேலும் எளிமையாக மாற்றியமைத்து வருகிறது. இதனால் தனி நபர்களும் வருமான வரி செலுத்தும் வட்டத்திற்குள் வரும் மாதச் சம்பளதாரர்களும் வரி ஆலோசகர்களின் துணையின்றி எளிதில் தங்களின் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்து வருகின்றனர்.

எளிமையான ரீஃபண்ட் நடைமுறை

எளிமையான ரீஃபண்ட் நடைமுறை

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதையும், வருமான வரி வசூல் அதிகரிப்பிலும் அதிக முனைப்பு காட்டி வரும் அதே வேளையில், வருமான வரி ரீஃபண்ட் வழங்குவதையும் மிக எளிமையானதாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதுவும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வோரின் ரீஃபண்ட் தொகையையும் மிக விரைவாக செலுத்துவதற்கு ஏற்ற வகையில் நாளுக்கு நாள் எளிமைப் படுத்தி வருகிறது.

ஒரே மாதத்தில் ரீஃபண்ட்

ஒரே மாதத்தில் ரீஃபண்ட்

கடந்த 2017ஆம் ஆண்டு வரையிலும் வருமான வரி செலுத்துவோரின் ரீஃபண்ட் தொகையை பெறுவதில் ஆறு மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையிலும் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. ஆனால் வருமான வரித்துறை எடுத்த தொடர் முயற்சியால் ரீஃபண்ட் பெறும் நடைமுறையும் மிக எளிமையாக ஆக்கப்பட்டது. இதனால் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் வருமான வரி செலுத்தியோரின் ரீஃபண்ட் தொகையானது ரிட்டன் தாக்கல் செய்த 15 நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டன.

அடுத்தது ஒரே நாளில் ரீஃபண்ட்

அடுத்தது ஒரே நாளில் ரீஃபண்ட்

வருமான வரித்துறையின் இந்த சீரிய முயற்சியின் மற்றொரு மைல்கல்லாக, நடப்பு ஆண்டில் வருமான வரி செலுத்துவோரின் ரீஃபண்ட் தொகையானது ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டன என்றும் வருமான வரித்துறை உறுதியளித்துள்ளது.

இதுவரை ரூ.64,700 கோடி ரீஃபண்ட்

இதுவரை ரூ.64,700 கோடி ரீஃபண்ட்

இந்நிலையில் நேற்று லோக்சபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த நடப்பு ஆண்டில் கடந்த 18ஆம் தேதி வரையிலும் சுமார் 64 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரையிலும ரீஃபண்ட் தொகை திரும்ப செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2018-19ஆம் ஆண்டில் சுமார் 1.61 லட்சம் கோடி ரூபாய் ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

54,70 கோடி ரிட்டன்

54,70 கோடி ரிட்டன்

கடந்த 2017-18ஆம் நிதியாண்டுக்காக சுமார் 64.50 கோடி மின்னணு வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது அதற்கு முந்தைய ஆண்டான 2016-17ஆம் ஆண்டைக்காட்டிலும் சுமார் 18.65 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 2016-17ஆம் நிதியாண்டுக்காக 54.70 கோடி வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

29.90 கோடி எஸ்எம்எஸ்

29.90 கோடி எஸ்எம்எஸ்

கடந்த 2017-18ஆம் ஆண்டுக்கான ரிட்டன் தாக்கல் செய்யாத சுமார் 29.90 கோடி பேர்களுக்கு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், வருமான வரி செலுத்துவோரின் ரீஃபண்ட் தொகையை மிக விரைவாக செலுத்துவதற்கு மத்திய அரசு உயரிய முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துவோரில் சுமார் 0.5 சதவிகிதம் பேர்களின் ரிட்டன்கள் மட்டுமே கண்காணிப்பிற்கும் தணிக்கைக்கும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

காலஅளவு குறைப்பு

காலஅளவு குறைப்பு

பெரும்பாலும் அதிகப்படியான வருமான வரி ரிட்டன்களின் ரீஃபண்ட்கள் மிக விரைவாகவே அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகின்றன. தற்போது தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருவதாலும் அதன் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் வருமான வரி ரிட்டன்களின் ரீஃபண்ட் செலுத்துவதற்கான நடைமுறை மற்றும் கால அளவும் பெருமளவு குறைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய அரசு ஒப்புதல்

மத்திய அரசு ஒப்புதல்

கடந்த ஜனவரி மாதத்தில், வருமான வரி ரிட்டன், முன்கூட்டி செலுத்திய வருமான வரி மற்றும் வருமான வரி ரீஃபண்ட் ஆகிய மூன்றையும் ஒன்றினைத்து செயல்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி ரிட்டன்கள் விரைவாக ஆய்வு செய்யப்பட்டு ரீஃபண்ட் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax Refund Rs.64,700 Crore - Nirmala Sitharaman

Finance Minister Nirmala Sitharaman said that the Central Government has improved the procedure for obtaining income tax refund and the amount of income tax refund amounting to about Rs 64,700 Crores has been paid up to June 18th of the current fiscal year 2019-20.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X