வரும் ஜூலை 05, 2019 அன்று Budget 2019 வாசிக்க இருக்கிறார் நிர்மலா சீதாராமன். பொதுவாக பட்ஜெட்டில் ஒருவரின் வாழ்கைக் கதையைச் சொல்வது, ஒருவர் புகழைப் பாடுவது, ஒருவரை அளவுக்கு அதிகமாக, பத்தி பத்தியாக புகழ்வது எல்லாம் எல்லாம் பெரும்பாலும் இந்திய பட்ஜெட்டில் நடந்ததில்லை.
அதிகபட்சம் ஒருவரைப் பற்றி ஒரு வரி அல்லது அவர் சொன்ன புகழ் பெற்ற வாக்கியங்கள் போன்றவைகள் தான் இடம் பெறும். அதன் பின் ஆங்காங்கே சின்ன சின்ன ட்ரோல்கள் இருக்கும். அவ்வளவு தான்.
ஆனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்கையைப் பற்றி, பட்ஜெட்டில் பெரிதாக பேசப்பட்டது கிடையாது. அதையும் மீறி பேசிய, பேசப்பட்ட ஒருவரை பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
Deutsche Bank lay off: 20,000 பேரை வீட்டுக்கு அனுப்பப் போகும் டாயிஷ் வங்கி..!

எல் பி ஜி அறிமுகம்
அவர் தான் உலகின் தலையாய பொருளாதார வல்லுநர் மற்றும் நம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். 1991-ம் ஆண்டு இந்தியாவுக்கு LPG - Liberalisation, Privatisation Globalisation என மூன்று முத்துக்களை கொண்டு வரும் பட்ஜெட்டில், தன் சொந்தக் கதையைப் பேசி இருக்கிறார். இந்த தாராளமயம் வந்த பிறகு இறக்குமதிகள் எளிதாயின. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வது எளிதானது, அதுவரை தன் பொருளாதாரக் கதவை இறுக்கி மூடிய நிலையில் வைத்திருந்த இந்தியா தன் பொருளாதாரக் கதவுகலை வெளி உலகுக்கும், வாய்ப்புகளுக்கும் திறந்து விடப்பட்டது. சரி அவர் பேச்சுக்கு வருவோம்.

உணர்வு
தன் பட்ஜெட் உரையில் நேரு தன் மகள் இந்திரா காந்தியிடம் நாட்டு நடப்புகள் மற்றும் நாடு குரித்த விஷயங்களை கையாளும் போது உணர்வுப் பூர்வமாக இருக்க வேண்டும், ஆனால் உணர்ச்சிவசப்படக் கூடாது எனச் சொன்னார். ஆனால் இது போன்ற ஒரு சூழ்நிலையில் என்னால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை, அப்படி உணர்ச்சிவசப்பட்டதற்கு என்னை இந்த எவை மன்னிக்க வேண்டும் எனச் சொன்னார் மன்மோகன் சிங்.

மானியம் தான்
மேலும் தன் பட்ஜெட் உரையில் "நான் ஒரு ஏழைக் குடும்பத்தில், வறட்சியான கிராமத்தில் பிறந்தேன். நான் பிறந்த கிராமம் இன்று பாகிஸ்தானில் இருக்கிறது. பல்கலைக்கழக உதவித் தொகைகளாலும் மானியங்களாலும் தான் என்னால் கல்லூரி செல்ல முடிந்தது. இந்தியாவின் மிக முக்கியமான பதவியில் என்னை அமர வைத்து, இந்த நாடு என்னை கெளரவித்திருக்கிறது. இந்த கடனை என்றுமே என்னால் முழுமையாக திருப்பிச் செலுத்த முடியாது" எனச் சொல்லி இருக்கிறார் நம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

சத்தியம்
மேலும் "என்னையே இந்த நாட்டுக்கு கொடுத்து, முழு நேர்மையோடும், முழு அர்பணிப்போடும் இந்தியாவுக்கு சேவை செய்வது தான் நான் செய்யக் கூடிய கைமாறாக இருக்கும். இதை நான் அவைக்கு சத்தியம் செய்து கொடுக்கிறேன். ஒரு நிதி அமைச்சர் உணர்ச்சி வயப்படாத எதார்த்தவாதியாக இருக்க வேண்டும். நான் நிச்சயம் என் வேலையில் அப்படித் தான் இருப்பேன். ஆனால் என் நாட்டு மக்களை கையாளும் போது நிச்சயம் கணிந்த இதயத்துடன் நடந்து கொள்வேன்" எனவும் சொல்லி இருக்கிறார்.
இப்படி, இந்தியா பட்ஜெட்டில் சொந்த விஷயங்களைப் பேசிய, பேசப்பட்ட முதல் மற்றும் கடைசி நிதி அமைச்சராக வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் நம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். ஒருவேளை இனி வரும் காலங்களில் பாஜக தங்கள் தலைவர்களைப் பற்றிப் பேசலாம். அவர்களும் வரலாற்றில் இடம் பெறலாம்.