Amazon divorce settlement: என்னய்யா இது விவாகரத்துலயும் வேர்ல்ட் ரெக்கார்டா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சியாட்டில், அமெரிக்கா: இன்றைய தேதிக்கு உலகின் நம்பர் 1 பணக்காரர் யார் எனக் கேட்டால் Amazon நிறுவனத்தின் தலைவராக இருக்கும் (Jeff Bezos) ஜெஃப் பிசாஸ் என குழந்தைகள் கூடச் சொல்லும்.

 

அந்த அளவுக்கு Amazon என்கிற பெயரை, உலகம் முழுக்க பொருட்களை விற்று பிரபலமாகிவிட்டார் ஜெஃப் பிசாஸ். ஜெஃப் பிசாஸ் அமேஸான் பிசினஸைத் தொடங்கிய போது எல்லாவற்றிலுமே தன் மனைவி மெகென்ஸி பிசாஸையும் (MacKenzie Bezos)சேர்த்துக் கொண்டு தான் தொழில் தொடங்கினார்.

பிசினஸ், சொத்துக்கள், பங்குகள் என அனைத்திலுமே கணவன் மனைவி இருவருமே சேர்ந்து இருந்தார்கள். இப்போது மெகென்ஸி பிசாஸ், ஜெஃப் பிசாஸை விட்டுப் பிரியப் போகிறார். அதாங்க விவாகரத்து வாங்கப் போறாய்ங்களாம்.

விட்டுக் கொடு

விட்டுக் கொடு

இந்த விவாகரத்தின் போது Amazon நிறுவனர் ஜெஃப் பிசாஸ்-க்கு சில பிசினஸ்களை மெகென்ஸி விட்டுக் கொடுத்திருக்கிறாராம். மெகென்ஸி வைத்திருக்கும் வாசிங்டன் போஸ்ட் நிறுவன பங்குகளை முழுவதுமாக ஜெஃப் பிசாசிடம் கொடுத்துவிடப் போகிறாராம். அதே போல ஜெஃப் பிசாஸின் கனவுத் திட்டங்களில் ஒன்றான விண்வெளிப் பயணத்தை செயல்படுத்தும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனப் பங்குகளையும் கணவரிடமே கொடுத்துவிடப் போகிறாராம்.

வாக்குரிமைகள்

வாக்குரிமைகள்

அமெரிக்காவில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும், முதலீட்டாளர்களுக்கு கொழுத்த லாபம் கொடுத்துக் கொண்டிருக்கும் Amazon நிறுவனப் பங்குகளையும் வைத்திருக்கிறார் மெகென்ஸி. தன் பெயரில் இருக்கும் Amazon பங்குகளுக்கான வாக்களிக்கும் உரிமைகளை கணவர் ஜெஃப் பிசாஸுக்கு கொடுத்துவிடப் போகிறாராம். ஆனால் அமேஸான் நிறுவனத்தில் மெகென்ஸி பிசாஸ் வைத்திருக்கும் பங்குகளை விட்டுக் கொடுக்கவில்லை. அதை அவரே வைத்துக் கொள்ளப் போகிறாராம்.

கல்யாணம்
 

கல்யாணம்

மெகென்ஸி ஒரு புதின எழுத்தாளர். 1993-ம் ஆண்டில் ஜெஃப் பிசாஸை திருமணம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துவிட்டார். மெகென்ஸியை திருமணம் செய்து கொண்ட பின் தான் 1994-ல் அமேஸான் நிறுவனத்தைத் தொடங்கினார் ஜெஃப் பிசாஸ். மெகென்ஸி பிசாஸ் வந்த நேரமோ என்னவோ ரைஸ் புல்லிங் செய்யும் கலசம் கைக்கு வந்தது போல அமேஸான் நிறுவனம் மேலே மேலே மேலே என பறக்கத் தொடங்கி இப்போது உலகையே ஆண்டு கொண்டிருக்கிறது.

4% Amazon பங்குகள்

4% Amazon பங்குகள்

மெகென்ஸி அமேஸான் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 4% பங்குகளை வைத்திருக்கிறார். இன்றைய தேதிக்கு அமேஸான் நிறுவனத்தின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 945 பில்லியன் அமெரிக்க டாலர். மெகென்ஸி வைத்திருக்கும் Amazon நிறுவனத்தின் 4% பங்குகளுக்கான சந்தை மதிப்பு மட்டும் சுமார் 38 பில்லியன் டாலர். இந்த 38 பில்லியன் டாலரால் தான் நம் மெகென்ஸி தற்போது உலகப் பணக்காரிகள் பட்டியலில் டாப் ஐந்து இடங்களில் ஒரு இடத்தை அசால்டாக பிடித்திருக்கிறார்.

இதிலும் சாதனையா

இதிலும் சாதனையா

26 வருடமாக Amazon ஜோடியாக இருந்த ஜெஃப் பிசாசும், மெகன்ஸியையும் சட்ட ரீதியாக பிரிய, ஒரு நீதிபதி இந்த வாரத்துக்குள், உலக வரலாற்றில் இல்லாத காஸ்ட்லியான விவாகரத்துக்கு ஒப்புதல் கொடுக்கப் போகிறார். இதற்கு முன் ரஷ்ய பில்லியனர் டிமிட்ரி ரிபொலொவ்லெவ் (Dimitry Rybolovlev) தன் மனைவிக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் வழியாக 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்தது தான் உலகின் காஸ்ட்லியான விவாகரத்தாக இருந்தது. இப்போது இதிலும் 38 பில்லியன் டாலர் மனைவிக்கு கொடுத்து சாதனை படைத்திருக்கிறார் Amazon நிறுவனர் ஜெஃப் பிசாஸ்.

தான தர்மம்

தான தர்மம்

இன்னும் சொத்து பிரிந்து கைக்கு வந்த பாடில்லை, விவாகரத்துக்கு கூட சட்டம் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை... அதற்குள் "எனக்கு வரும் சொத்தில் பாதியைதான் தர்மம் செய்வேன்" என வலை தளத்தில் சத்தியமே செய்துவிட்டார் மெகன்ஸி பிசாஸ். மன்னிக்கவும் மெகன்ஸி. முன்னாள் மனைவியில் தான தர்ம காரியங்களை ஜெஃப் பிசாசும் ட்விட்டரில் பாராட்டி, பெருமைப் படுவதாகச் சொல்லி ஊக்குவித்திருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon couple Jeff bezos Mackenzie bezoz divorce settlement $38 billion world record

Amazon couple Jeff bezos and Mackenzie bezos divorce settlement hits the world record by agreeing to pay $38 billion
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X