அடுத்த ஆப்பு ரெடி.. கல்வித்துறைக்கும் சவாலா.. முகேஷ் அம்பானியின் "jio institute"!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : எந்தவொரு வர்த்தகத்தை ஆரம்பித்தாலும், அதில் கொடி கட்டி பறப்பதோடு பலரின் திட்டையும் கடுப்பையும் வாங்கிக் கொள்வதே ரிலையன்ஸ் இண்டஸ்‌ரீஸின் வழக்கம். அந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் "jio institute" கல்வி நிறுவனத்திற்காக 1500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

ஆனால் முகேஷ் அம்பானியின் இந்த பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பே பலரின் திட்டை வாங்கியதோடு கடுப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இல்லாத ஒரு பல்கலைக்கழகத்திற்கு, மத்திய மனிதவளத்துறை அறிவிக்கப்பட்ட மதிப்பு மிகுந்த ஆறு கல்வி நிறுவனங்களில், ஜியோ இன்ஸ்டிட்யூட்டையும் சேர்த்து அறிவித்தது, இது மற்ற கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கடுப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. .

உலக தரம் வாய்ந்த பல்கலைக் கழகம்!
 

உலக தரம் வாய்ந்த பல்கலைக் கழகம்!

அட ஆமாங்க.. அந்த அளவுக்கு பேமஸ் ஆன ஒரு கல்வி நிறுவனம் தான் இந்த ஜியோ இன்ஸ்டிட்யூட். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது முன்மொழியப்பட்ட பல்கலைகழகமான ஜியோ இன்ஸ்டிட்யூட்டில் சுமார் 1500 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. அதோடு இது மும்பைக்கு அருகில் உள்ள கர்ஜாட்டில் கிட்டதட்ட 800 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழமாக உருவாக்க முயன்று வருவதாகவும் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

உலக நாடுகளில் உள்ள பல்கலைகழகங்களுடன் பேச்சுவார்த்தை!

உலக நாடுகளில் உள்ள பல்கலைகழகங்களுடன் பேச்சுவார்த்தை!

முகேஷ் அம்பானி தலைமையிலான ஒரு குழு, அமெரிக்காவின் ஸ்டோன்போர்ட் பல்கழைக்கழகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள நன்யாங்க் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல கல்வி நீறுவனங்களுடனும், நிறுவன வல்லுனர்களுடனும் இந்த வசதியை அமைப்பதற்காக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அரச்சாங்கத்திற்கு தகவல் கொடுத்துள்ளது.

ஜியோ இன்ஸ்டிட்யூட் தாமதம் ஏன்?

ஜியோ இன்ஸ்டிட்யூட் தாமதம் ஏன்?

கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸின் கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஜியோ இன்ஸ்டிட்யூட்டை திறப்பதில் ஏன் தாமதம் என்பது குறித்து ஜியோ குழுவின் மீது அதிருப்தி தெரிவித்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையிலேயே இந்த வளர்ச்சி, இந்த முதலீடு செய்வது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதறும் நிறுவனங்கள்?
 

பதறும் நிறுவனங்கள்?

முகேஷ் அம்பானி எந்த துறையில் காலாடி எடுத்து வைதாலும், அந்த துறையில் உள்ள அனைவரையும் பின்னுக்கு தள்ளி, முன்னிலை வகிப்பது தான் முகேஷின் பாணி. இந்த வகையிலும் இந்த பல்கலைக் கழகமும் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் இந்த பல்கலைக் கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பே சிறந்த பல்கலைக் கழகம் என்று சர்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL plans to invest Rs 1,500 crore in Jio Institute in next two years

RIL plans to invest Rs 1,500 crore in Jio Institute in next two years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X