Economic Survey 2019 : வாராக்கடனை குறி வைக்கும் மத்திய அரசு.. அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி :, "Economic survey"யில் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாராக்கடன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், வாராக்கடன் கடந்த மார்ச் 2018வுடன் ஒப்பிடும் போது, டிசம்பர் 2018ல் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தன்னுடைய முதல் Economic Survey-யை தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். இதில் வாராக்கடன் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.

Economic Survey 2019 : வாராக்கடனை குறி வைக்கும் மத்திய அரசு.. அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறது?

அதில் வாராக்கடன் களின் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் 11.5 சதவிகிதமாக இருந்த வாரக்கடன், டிசம்பரில் 10.1 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

எனினும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒர் அறிக்கையில், கடந்த மார்ச் 2019ம் வங்கிகளின் வாராக்கடன் 12.2 சதவிகிதமாக அதிகரிக்கலாம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. . இந்த நிலையில் நாளுக்கு நாள் வங்கிகளின் வாராக்கடன் என்பது அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது என்பதை இதிலிருந்தே அறிய முடிகிறது.

இதனால் இதுபோன்ற வாராக்கடன்களை அதிகரிக்க இன்னும் விதிகள் கடுமையாக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

ஒரு நாட்டின் வாராக்கடன் அதிகரிக்கும் நிலையில், அந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தைவரை வாரக்கடன், தள்ளுபடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதிலும் நிறுவனங்களின் வாராக்கடன் தான் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக இதனால் பாதிக்கப்படுவது அதிகம் பொதுத்துறை வங்கிகளே.

அதிலும் கடந்த சில ஆண்டுகளில், பெரிய பெரிய தொழில் அதிபர்கள் கடனை வாங்கிக் விட்டு, நாட்டை விட்டு ஒடிப்போவதும், பின்னர் அரசு அவர்களை தேடி அலைவதும் தான் நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக சாராயா வியாபாரி விஜய் மல்லையா கிட்டதட்ட 9000 கோடி ரூபாயை வாங்கி விட்டு லண்டனில் சுற்றி திரிவதும், பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி 13,000 கோடி ரூபாயும், இப்படி நீண்டு கொண்டே செல்லும் லிஸ்டினால் வாராக்கடன் எப்படி குறையும்.

 

இதை தடுக்க கடந்த மத்திய அரசு, கடன்களை வாங்கி திரும்ப கட்டாமல் வங்கிகளை அலையவிடும் நிறுவனங்களுக்கெல்லாம் ஆப்பு வைக்க ரெடியாகிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

கடன்களை வாங்கி விட்டு கட்டாமல் இருந்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இனி யாரும் எங்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்கிறது மத்திய அரசு. இவ்வாறு நிறுவனங்கள் கடனை வாங்கிவிட்டு ஏமாற்றும் நிலை அதிகரித்து வரும், இந்த நிலையில் இதனை கண்கானிக்க ஒரு சிறப்புக்குழு நியமிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.

இந்த வகையில் இவர்கள் வணிக ரீதியாக கடன் வாங்குபவர்களை தொடர்ந்து கண்கானித்து வருவார்கள் எனவும் கருதப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இதன் மூலம் வாராக்கடனை குறைக்க முடியும் என்றும் அரசு நம்புகிறது போலும். எப்படியோ நல்லது நடந்தால் சரிதானே?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economic Survey 2019 : NPAs as a percentage of SCBs decreased from 11.5%

Krishnamurthy V Subramanian says NPAs as a percentage of SCBs decreased from 11.5% to 10.1% b/w Mar 2018 & Dec 2018
Story first published: Thursday, July 4, 2019, 15:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X