நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டால் பயனடைந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் - எப்படி தெரியுமா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பட்ஜெட் தாக்கலில் மற்றவர்களைக் காட்டிலும் கார்பரேட் எனப்படும் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக அளவில் பயன் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு வருமான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 

பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெருநிறுவனங்கள் அனைத்துமே தங்களுக்கு விதிக்கப்பட்ட நிறுவன வரியை குறைக்கவேண்டும் என்று 39 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அந்நிறுவனங்களின் வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக குறைத்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரு நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பை அறிவித்த நிர்மலா சீதாராமன் இந்த வரிக்குறைப்பானது நாட்டிலுள்ள மொத்த வர்த்தக நிறுவனங்களில் கிட்டத்தட்ட 99.3 சதவிகித நிறுவனங்களுக்கும் பொருந்துவதாக இருக்கும் என்று நம்பிக்கையளித்தார். அதோடு, இந்த வரிவிகிதத்தில் இருந்து வெறும் 0.7 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே தள்ளி இருக்கும் என்றும் தெரிவித்தார்.


வழக்கம்போல் அல்வாதான்

வழக்கம்போல் அல்வாதான்

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாதச் சம்பளதாரர்களுக்கு இந்த ஆண்டு வரிச்சலுகை அதிக அளவில் இருக்கும், நிச்சயமாக அதிக அளவில் இருக்கும் திரும்பத் திரும்பு ஆசை வார்த்தை காட்டி கற்பனையில் மிதக்கவிட்டு, பட்ஜெட்டில் வழக்கம் போலேவே மாதச்சம்பளதாரர்களுக்கு பெரிய அளவில் எந்தவித சலுகையையும் அளிக்காமல் விட்டுவிடுவது வழக்கம். அதற்கு மாறாக, எப்போதும் போலவே கார்பரேட் எனப்படும் பெரு நிறுவனங்களுக்கு அதிக அளவில் வரிச்சலுகை அளித்து அவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதும் தொடர்கதையாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

உங்களுக்கு தான லாபம்

உங்களுக்கு தான லாபம்

மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை குறித்து தங்களின் மனக்குமுறலை அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் கொட்டித்தீர்த்தனர். ஆனால் அவரோ, நீங்கள் சொல்வது வாஸ்தவமோ வாஸ்தவம்தான். மாதச் சம்பளதாரர்களான உங்களால் தான் மத்திய அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. ஆனால் அதே சமயத்தில் பெரு நிறுவனங்களால் தான் நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கிறது. கூடவே உங்களைப் போன்றவர்களுக்கும் அதிக அளவில் வேலை வாய்ப்பும் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. எனவேதான் அவர்களுக்கு அதிக வரிச்சலுகை அளித்துவருகிறோம் என்று கூலாக பதிலளித்ததார்.

நிறுவனங்களுக்கு கொடைவள்ளல்
 

நிறுவனங்களுக்கு கொடைவள்ளல்

இப்படி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் கஜனாவை நிரப்புவதில் பெரும்பங்கு வகிக்கும் தனிநபர் மற்றும் மாதச்சம்பளதாரர்களுக்கு வருமான வரி வரம்பில் சொற்பமாக கிள்ளிக்கொடுத்துவிட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் கொடைவள்ளலாக மாறி அதிக அளவில் வரிச்சலுகை அளிப்பது நடப்பு ஆண்டிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வரியை குறைக்கவேண்டும்

வரியை குறைக்கவேண்டும்

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பதிலளித்த பெருநிறுவனங்களில் 39 சதவிகிதம் பேர் ரூ.250 கோடி முதல் ரூ.500 கோடி வரை விற்றுமுதல் (Turnover) உள்ள பெருநிறுவனங்கள் தற்போது செலுத்தும் 30 சதவிகித வரியை 25 சதவிகிதமாக குறைக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி விதிப்பு என்பது கடந்த 2014-15ஆம் ஆண்டு முதல் 30 சதவிகிதமாக இருந்துவந்தது. கடந்த 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரூ,250 கோடி வரை விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கான நிறுவன வரியை 25 சதவிகிதமாக குறைத்து அறிவித்தார். அதே போல் நடப்பு நிதியாண்டிலும் 500 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள நிறுவனங்களும் வரிக்குறைப்பை எதிர்பார்த்திருந்தனர்.

25 சதவிகிதமாக வரி குறைப்பு

25 சதவிகிதமாக வரி குறைப்பு

இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வழக்கம்போலவே நிறுவனங்களுக்கும் வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது. அதில் 400 கோடி ரூபாய் வரையிலும் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு ஏற்கனவே விதித்திருந்த 30 சதவிகித வருமானவரியை நடப்பு நிதியாண்டில் 25 சதவிகிதமாக குறைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

99.3 சதவிகித நிறுவனங்கள் பயன்பெறும்

99.3 சதவிகித நிறுவனங்கள் பயன்பெறும்

பெரு நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பை அறிவித்த நிர்மலா சீதாராமன் இந்த வரிக்குறைப்பானது நாட்டிலுள்ள மொத்த வர்த்தக நிறுவனங்களில் கிட்டத்தட்ட 99.3 சதவிகித நிறுவனங்களுக்கும் பொருந்துவதாக இருக்கும் என்று நம்பிக்கையளித்தார். அதோடு, இந்த வரிவிகிதத்தில் இருந்து வெறும் 0.7 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே தள்ளி இருக்கும் என்றும் தெரிவித்தார்.

வரி குறைப்புக்கு சரியான தருணம்

வரி குறைப்புக்கு சரியான தருணம்

நிறுவன வரி குறைப்பு குறித்து விளக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி குறைப்புக்கு இது தான் சரியான தருணம் என்பதோடு, சிறிய நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி பெறவும் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யவும் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2019 : Corporate Tax reduced for Rs.400 Crore Turnover

Corporate companies have benefited far more than others in the eagerly awaited budget. The income tax for companies with turnover of up to Rs 400 crore per year has been reduced by 25%.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X