Privatization : பொதுத்துறை நிறுவனங்கள் என்ற “பதவியை” இழக்கப் போகும் அரசு நிறுவனங்கள்..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடும் "NITI Aayog" கமிஷன் தற்போது 42 நிறுவனங்கள் மூடப்படும் அல்லது தனியார் மையமாக்கப்படும் என்றும் ஏற்கனவே கூறி வருகிறது.

இந்த நிலையில் அரசின் சில நடவடிக்கைகளும், இதை ஊர்ஜிதப்படுத்துவது போலவே இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு 51 சதவிகிதம், 49 தனியாரின் பங்கும் இருக்கும். ஆனால் இவற்றினை அரசு குறைக்கும் போது, இந்த நிறுவனங்கள் " பொதுத்துறை நிறுவனங்கள்" என்ற பதவியை இழக்கின்றன.

இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நவரத்னா, மஹாரத்னா, மினிரத்னா என பிரிக்கப்பட்டுள்ளன.

மஹா நவரத்னா நிறுவனங்கள் என்றால் என்ன?

மஹா நவரத்னா நிறுவனங்கள் என்றால் என்ன?

இந்திய அரசு நிறுவனங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் வகையான நவரத்னா பிரிவில் நிகர சொத்து, நிகர மதிப்பும், நிகர வருமானம், உற்பத்தி செலவு உள்ளிட்ட ஆறு பிரிவுகள் மூலம் இந்த நிறுவனங்கள் பிரிக்கப்படுகின்றன. இதில் 100க்கு 60 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிறுவனங்கள் நவரத்னா நிறுவனங்கள் என்று அழைக்கப்படும். இந்த பிரிவில் 17 அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக ஹிந்துஸ்தான் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், நெய்வேலி லிக்னைட், பாரத் பெட் ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த பிரிவை சேரும் நிறுவனங்களாகும்.

அதென்ன மஹாரத்னா நிறுவனங்கள்?

அதென்ன மஹாரத்னா நிறுவனங்கள்?

தொடர்ந்து மூன்று வருடத்துக்கும் மேல் 25,000 கோடி ரூபாய்க்கும் மேல் பண பரிவர்த்தனை செய்திருந்தால், அத்தகைய நிறுவனங்கள் மஹா நவரத்னா நிறுவனங்கள் என்றும் அழைக்கப்படும். அதோடு மூன்று வருடத்திற்கும் மேலாக வரி நீங்கலாக லாபம் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்க வேண்டும் என்றும், இந்த நிறுவனங்கள் பங்கு சந்தை பட்டியியலில் இருக்க வேண்டும் எனவும், ஆக மொத்தம் இந்த பிரிவில் இதுவரை 7 நிறுவனங்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பதவியை இழக்கும் “பொதுத்துறை நிறுவனங்கள்”

பதவியை இழக்கும் “பொதுத்துறை நிறுவனங்கள்”

ஒ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி, கெயில், என்.டி.பி.சி, உள்ளிட்ட மஹாரத்னா மற்றும் நவரத்னா வகையைச் சேர்ந்த அரசு பொதுத் துறை நிறுவனங்களின், 51 சதவிகித பங்கிலிருந்து மேலும் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதன் மூலம், இந்த நிறுவனங்கள் "பொதுத்துறை நிறுவனங்கள்" என்ற பதவியை இழக்க கூடும். அதோடு அந்த நிறுவனங்கள் தனியாரின் ஆதிக்கத்திற்கு சென்று விடும் என்றும் கருதப்படுகிறது.

தனியார் நிறுவனங்களாக மாறக் கூடும்?

தனியார் நிறுவனங்களாக மாறக் கூடும்?

இவ்வாறு உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் 51 சதவிகித பங்கினை தனியாருக்கு தாரை வார்க்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், 51 சதவிகிதம் உள்ள பங்கினை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பட்டியல் தயாராகி வருவதாகவும் கருதப்படுகிறது. இதன் மூலம் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் சுயதீனமாக இயங்கக் கூடிய தனியார் நிறுவனங்களாக மாறக் கூடும். அதோடு இவை தனியார் நிறுவனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

அரசு பொதுத்துறை நிறுவனம்

அரசு பொதுத்துறை நிறுவனம்

அரசு பொதுத்துறையை சேர்ந்த நிறுவனம் என்றால், மொத்த பங்கில் 51 சதவிகித பங்கினை மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள 49 சதவிகித பங்கிலே தனியார் நீறுவனமோ அல்லது தனியார் மறைமுக பங்கீட்டாளராகவோ இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தனியார் பங்குகள் தனியார் நிதி நிறுவனங்களாக கூட இருக்கலாம் என்றும், இவை நேரடி பங்கீட்டாளாராகவோ, மறைமுகமாகவொ இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

முழுமையான சுதந்திரத்தை கொடுக்க அரசு விரும்புகிறது?

முழுமையான சுதந்திரத்தை கொடுக்க அரசு விரும்புகிறது?

தொழில் ரீதியாக இயங்கும் மஹாரத்னா மற்றும் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்கள் சில தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன என்றும், இதனால் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை முழுமையாக இயக்க, இந்த நிறுவனங்களுக்கு முழு சுதத்திரத்தையும் கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு டசன் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்!

இரண்டு டசன் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்!

தற்போது இரண்டு டசனுக்கும் அதிகமான பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. அவைகள் 60 அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அரங்சாங்க பங்குகளூடன், பொதுமக்கள் வைத்துள்னர் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் மஹாரத்னா மற்றும் நவரத்னா நிறுவனங்களும் சேர்த்தே என்றும் கூறப்பட்டுள்ளது.

எந்த நிறுவனத்தின் எவ்வளவு பங்கு?

எந்த நிறுவனத்தின் எவ்வளவு பங்கு?

இதில் Engineers India Ltd நிறுவனத்தில் 52 சதவிகித பங்குகளும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 52.18 சதவிகித பங்குகளும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனில் 53.29 சதவிகித பங்குகளும், கெயில் இந்தியாவில் 52.64 சதவிகிதமும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக, 64.25 சதவிகித பங்கும், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் 59.05 சதவிகித பங்கும், பவர் கிரிட் கார்ப்பரேஷனில் 55.37 சதவிகித பங்குகளும், என்.டி.பி.சி (இந்திய கப்பல் கழகத்தில் 63.75 சதவிகித பங்கும், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்ஸில் 63.17 சதவிகித பங்கும், என்.பி.சி.சி 68.18 சதவிகித பங்கும், Container Corporation நிறுவனத்தில் 54.80 சதவிகித பங்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ONGC, IOC, GAIL, NTPC may lose Public sector unit tag after run private board

ONGC, IOC, GAIL, NTPC may lose Public sector unit tag after run private board
Story first published: Friday, July 12, 2019, 17:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X