டாப் 45ல் இந்தியாவுக்கு 38வது இடம்..சிறந்த விமான நிலையங்களில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : சர்வதேச அளவில் வணிக பயணிகளுக்கான சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை, ஆன்லைன் பயண நிறுவனமான குளோப் ஹண்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் 45 விமான நிலையங்களை இந்த நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்தியாவை சேர்ந்த இரண்டு விமான நிலையங்கள் உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 

ஆமாங்க.. டோக்கியோவில் உள்ள ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையம் வணிக பயணிகளுக்கான முதலிடத்திலும், அமெரிக்காவின் விமான நிலையங்கள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளது.

 
டாப் 45ல் இந்தியாவுக்கு 38வது இடம்..சிறந்த விமான நிலையங்களில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம்!

இந்த விதத்தில் இந்தியாவைச் சேர்ந்த இரு விமான நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 38 வது இடத்திலும், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் 43 இடத்திலும் உள்ளது.

வணிக பயணிகளுக்கான உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலை, 81.1 சதவிகிதம் சரியான நேரத்தில் விமான வருகையை பதிவு செய்த ஜப்பானின் நரிட்டா விமான நிலையம் உலகின் தலை சிறந்த வணிக விமான நிறுவனமான முடிசூடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பாக 19 பயணிகள் ஓய்வறைகளை கொண்டுள்ளதாம்.

இதுமட்டும் அல்லாமல் சரியான நேரத்தில் வருகை செயல்திறன், விமானங்களின் எண்ணிக்கை மற்றும் சேவை செய்யப்பட்ட இடங்கள், ஓய்வறைகளின் எண்ணிக்கை, ஒரு நாளைக்கு விமான நிலைய பார்கிங் விலை போன்ற பல காரணிகளை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதாகவும் குளோப் ஹண்டர்ஸ் குழு கூறியுள்ளது.

இதற்கு அடுத்தாற்போல தான் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் உள்ளதாம். எனினும் முதல் 10 இடங்களில் அமெரிக்காவே அதிக இடங்களில் உள்ளதாம்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் சரியான நேரத்தில் வருகைக்காக ஜப்பானின் டோக்கியோ ஹனெடா விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளதாம்.

ஆனால் இதுவே தாமதமாக வரும் விமான நிலையமாக மும்பை மதிப்பிடப்பட்டுள்ளதாம். எனினும் மற்ற சர்வதேச விமான நிலையங்களுடன் ஓப்பிடும்போது டெல்லி விமான நிலையம் பரவாயில்லையாம்.

ஸ்கைராக்ஸ் வழங்கிய அறிக்கையின் படி, சான்றளிக்கப்பட்ட விமான நிலைய மதிப்பீட்டுத் திட்டம், விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறதாம் இந்த நிறுவனம்.

இந்த வகையில் டெல்லி விமான நிலையத்துக்கு 5 நட்சத்திரங்களில் 4 கிடைத்திருக்கிறதாம். மும்பை விமான நிலையத்துக்கு 3 தான் கிடைத்திருக்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: indian airport
English summary

Two Indian airports figure in the list of world's best airports

Two Indian airports figure in the list of world's best airports for business travellers
Story first published: Tuesday, July 16, 2019, 17:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X