இது அமேசானோ பிளிப்கார்டோ அல்ல.. நம்ம ஊரு ஈ-காமர்ஸ் வர்த்தகம்.. கலக்கும் சேலத்து இளைஞர்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேலம் : நாளுக்கு நாள் ஆன்லைன் மோகம் மக்களிடையே அதிகரித்து வரும் இந்த நிலையில், இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சோமசுந்தரம் ஆர்கானிக் பொருட்களையும் ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்.

 

ஆமாங்க.. 29 வயதான பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன சோமசுந்தரம், தான் படித்தது மெக்கானிக்கல் ஆயினும், தனது மனதுக்கு பிடித்தாற்போல் செய்யும் இந்த சிறுதொழிலே தனக்கு நிம்மதியை தருவதாக கூறுகிறார்.

ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த இந்த இளைஞருக்கு, இந்த வர்த்தகத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல முடியாமல், தற்போது தான் சிறிது சிறிதாக மேம்படுத்திக் கொண்டிருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நம்ம ஊர் விவாசயிகள் தான் சப்ளையர். குடிசைத் தொழிலாளர்கள் தான் பெரும் சப்ளையர்ஸ் என்றும் கூறுகிறார்.

நாம் பத்தோடு பதினொன்னாக இருக்க கூடாது?

நாம் பத்தோடு பதினொன்னாக இருக்க கூடாது?

நாம் பத்தோடு பதினொன்னாக இருக்க கூடாது என்றும், எல்லோரையும் போல இயற்கை பொருட்களை விற்கிறேன். கடை வைத்திருகிறேன் என்று இல்லாமல் அமேசான் பிளிப்கார்ட் போல உலக அளவில் இல்லாவிட்டாலும், இந்திய அளவில் இதை கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் சோமசுந்தரம். எனினும் பொருளாதார பிரச்சனை காரணமாக தற்போது தமிழகத்தில் மட்டுமே தனது சேவையை hcorganic.com என்ற இணையத்தின் மூலம் செய்து வரும் தோழருக்கு வாழ்த்துகள் சொல்லியே ஆக வேண்டும்.

உற்பத்தியாளர்களே டெலிவரி செய்வார்கள்?

உற்பத்தியாளர்களே டெலிவரி செய்வார்கள்?

ஆமாங்க.. இவரின் வர்த்தகத்திற்கு என்று தனியாக கடையோ, குடோனோ கிடையாதாம். ஆமாங்க.. அதற்கு தனியாக வாடகை கொடுத்து அதிகம் செலவும் செய்வதற்கு, அதை விவசாயிகளுக்கோ அதிகம் கொடுத்து, வாடிக்கையாளருக்கு குறைத்துக் கொடுக்க உதவும் என்கிறார். உதாரணத்திற்கு. ஒரு கிலோ பருப்பு விவாசயிடம் கிலோ 60 ரூபாய்க்கு வாங்குகிறோம் என்றால், அதை கடைக்கோ குடவுனுக்கோ எடுத்துக் செல்லும் டிரான்ஸ்போர்ட் சார்ஜ், வாடகை, கடைக்கான மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும், பொருட்களின் விலையை தான் அதிகமாகும். ஆக இதை சமன் செய்ய ஒன்று நாம் விவசாயிகளிடம் இருந்து பொருட்களை குறைந்த விலைக்கு வாங்க வேண்டும், இல்லையேல் வாடிக்கையாளருக்கு கொடுக்கும் பொருளை அதிக விலைக்கு விற்க வேண்டும். ஆனால் தற்போது உற்பத்தியாளர்களிடம் இருந்து அந்த பொருள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது விலையும் குறையும், விவசாயிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அதிக விலை கொடுக்க முடிகிறது என்கிறார்.

அதிகளவு விற்பனையாகும் பொருட்கள்?
 

அதிகளவு விற்பனையாகும் பொருட்கள்?

குறிப்பாக செக்கு எண்ணெய், மூலிகை சோப்புகள், தலைக்கு உபயோகப்படுத்தும் ஹேர் ஆயில்கள், தேன் மற்றும் டிரை நட்ஸ் எனப்படும் முந்திரி, பாதாம், கருப்பட்டி, சத்துமாவு, தேன் கலந்த டிரை புரூட்ஸ் என பல பொருட்களுக்கு நல்ல தேவை இருப்பதாகவும், இந்த மாதிரியான பொருட்கள் தான் அதிகளவில் விற்பனையாகின்றனவாம். அதிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதிலிருந்து பாக்குமட்டை தட்டுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் கூறுகிறார் சோமசுந்தரம்.

டெலிவரி எப்படி? எவ்வளவு நாள்?

டெலிவரி எப்படி? எவ்வளவு நாள்?

தனக்கென ரெகுலர் வாடிக்கையாளர்களை வைத்திருக்கும், hcorganic.com , வாடிக்கையாளர் உள்ளூர் என்றால் ஆர்டர் செய்த அடுத்த நாளும், இதே வெளி மாவட்டங்கள என்றால் ஆர்டர் செய்த மூன்று நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். தற்போதைக்கு ஆன்லைன் பேமென்ட் வசதியை மட்டுமே செய்திருக்கும், இவர் இனி தான் கேஸ் ஆன் டெலிரி திட்டத்தினையும் கொண்டு வர உள்ளதாக திட்டமிட்டுள்ளராம். தற்போதைக்கு 1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவருக்கு, டெலிவரி கட்டணம் ஏதும் கிடையாதாம்.

விவசாயிகளுக்கு உதவி?

விவசாயிகளுக்கு உதவி?

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கு, நேரடியாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதால் அவர்களின் பொருளாதாரமும் மேம்படும், ரசாயனம் இல்லாத உணவு பொருட்களை உற்பத்தி செய்வதால், அவர்களின் நில வளமும் காக்கப்படும். இவ்வாறு ஒரு விவசாயி அவர்களின் பொருட்களை ஒரு தரகர் மூலம் விற்பனை செய்வதால், அவருக்கு கிடைக்க வேண்டிய லாபம் தரகர்களூக்கே சென்று விடுகிறது. இதே எங்களது இணையத்தின் மூலமாக விற்கும் போது அவர்களுக்கு 20% - 30% வரை இலாபம் அதிகம் கிடைக்கிறது. இதனால் விவசாயிகளும் அதிக லாபத்தில் பொருளை விற்க முடியும், மக்களும் குறைந்த விலையில் இயற்கை பொருட்களை வாங்க முடியும் என்கிறார்.

பொருட்களை எங்கு வாங்குவீர்கள்?

பொருட்களை எங்கு வாங்குவீர்கள்?

குடிசை தொழிலாக செய்து வரும் அனைத்து மக்களும் எங்களது சப்ளையர்கள் ஆகலாம். இதன் மூலம் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தாற்போல் இருக்கும். அதோடு மிகத் தரமான பொருட்களை இவர்களை போன்ற குடிசைத் தொழில் செய்பவர்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியும் என்கிறார் சோமசுந்தரம்.

மற்றவர்களை விட விலை எப்படி?

மற்றவர்களை விட விலை எப்படி?

தேன் என்றால் அதற்காக கொல்லி மலையிலும் இன்னும் பல இடங்களிலும் தேன் எடுப்பவர்களிடமும் தொடர்பில் இருக்கிறோம். இதுவே பண்ணை தேனா? மலைத் தேனா ? என வாடிக்கையாளர்களிடம் இருந்து, ஆர்டரை பெற்றவுடன், நேரடியாக முகவரியை அவர்களிடம் அனுப்பி, பொருளை அந்த முகவரிக்கு அனுப்ப சொல்லிவிடுவார்களாம். இதனால் நேரடியாக உற்பத்தியாளறிடமிருந்தே அனுப்ப படுவதால் மற்ற கடைகளை விட விலை 10 - 20 ரூபாய் குறைவாக தான் இருக்கும்.

சில பொருட்கள் மீது விழிப்புணர்வு இல்லை?

சில பொருட்கள் மீது விழிப்புணர்வு இல்லை?

என்னதான் ஆர்கானிக் பொருட்கள் மீது விழிப்புணர்வு இருந்து வந்தாலும் இன்னும் சில பருப்பு வகைகள், தானிய வகைகள் மீது அதிகளவு ஆர்வம் இல்லாமல் தான் இருக்கிறது. எனினும் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த பொருட்களுக்கு மவுசு அதிகமாகும், அன்று இந்த தொழிலில் நாங்கள் தான் முதலில் இருப்போம் என்கிறார்.

தொழிலை தேர்தெடுங்கள்?

தொழிலை தேர்தெடுங்கள்?

இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் சோமசுந்தரம், ஆரம்பத்தில் சில தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாலும், அந்த வேலை தனக்கு நிம்மதியை கொடுக்கவில்லை என்கிறார். அதோடு பயந்து கொண்டு வேலை செய்யும் நிலை வேண்டாம். இந்த வேலை இல்லை எனில் அடுத்த வேலை இதைவிட நல்லதாக நல்ல சம்பளத்தில் கிடைக்க வேண்டும் என்கிற பயம் இருக்கும். ஆனால் சுயதொழிலை பொறுத்தவரை ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், பின்னர் இது மனதளவில் நிம்மதியை கொடுக்கும் தொழிலாக மாறும். நான் அதிகளவு வாங்கிய சம்பளத்துக்கு ஈடாக இல்லை என்றாலும், என்னால் இன்னும் சில வருடங்களில் தனித்து ஒருவனாக நிற்க முடியும். ஆக இன்றைய இளைஞர்கள் முடிந்தவரை தொழிலை தொடங்க வேண்டும். இது நாட்டுகும், வீட்டுக்கும் நல்லது என்று கூறுகிறார்.

இழக்க தயாராக இருக்க வேண்டும்?

இழக்க தயாராக இருக்க வேண்டும்?

தொழிலை ஆரம்பிக்கும் சிலர், ஆரம்பத்தில் சிறிய இழப்பைக் கண்டதும் விலகி விடுகிறார்கள். இதனாலேயே காலம் முழுக்க பயந்து கொண்டே வாழ்கின்றனர். ஆனால் தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் அனைத்தையும் இழக்க தயாராகிக் கொண்டு களத்தில் இறங்க வேண்டும். என்ன நடந்தாலும் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருந்தால் தான் தெளிவான ஒரு பாதை கிடைக்கும் என்கிறார் சோமசுந்தரம்.

குறிப்பு : இந்த இணைய தளம் விரைவில் புதுப்பொலிவுடன் வர இருப்பதால் சில, தொழில் நுட்பம் சார்ந்த அப்டேஷன்கள் நடந்து கொண்டிருப்பதால் செயல்படாது. வாடிக்கையாளர்கள் சோமசுந்தரம் : 9025528607 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hcorganic makes online organic grocery shopping and delivery fast and easy

Hcorganic makes online organic grocery shopping and delivery fast and easy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X