ஆர்டர்கள் குவிந்தாலும் ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் சிவகாசி ஆலைகள்.. பட்டாசு விலை உயர்வு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவகாசி: சிவகாசியில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக பட்டாசுகளின் விலை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் சுமார் 850-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

ஆர்டர்கள் குவிந்தாலும் ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் சிவகாசி ஆலைகள்.. பட்டாசு விலை உயர்வு

 

பட்டாசு உற்பத்தி சார்ந்த தொழில்களான அச்சு அட்டை பெட்டி தயாரித்தல், குழாய் டியூப், கெமிக்கல் பேக்கேஜிங், கட்டிங் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் நிறைய வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு துவக்கத்தில் பட்டாசு ஆலைகள் 3 மாதங்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்தன.

இதனால் பட்டாசு ஆலைகளை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான நேரடி தொழிலாளர்கள் பலர் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் பட்டாசு ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆர்டர்கள் குவிந்தாலும் ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் சிவகாசி ஆலைகள்.. பட்டாசு விலை உயர்வு

ஆனால் வெளியூருக்கு சென்ற ஏராளமான தொழிலாளர்கள் சிவகாசி திரும்பாமல் அங்கேயே தங்கி விட்டனர். இதன் காரணமாக பட்டாசு ஆலைகளில் தற்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட வட மாநிலங்களில் இருந்து அதிகளவில் ஆர்டர்களும் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆர்டர்கள் அதிகரித்துள்ள நிலையில், போதுமான தொழிலாளர்கள் இல்லாததால் பட்டாசு ஆலைகள் திணறி வருகின்றன. இதனையடுத்து பட்டாசு ஆலைகள் பட்டாசுகளின் விலையை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. வடமாநில ஆட்கள் சிவகாசியில் மாதக்கணக்கில் அறை எடுத்து தங்கி பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

இது தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, வேலூர், திருச்சி, சேலம், கோவை உள்ளிட்டவற்றிலிருந்தும் வியாபாரிகள் பட்டாசுகளை வாங்க படையெடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள், கடந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி அதிகமாக நடைபெற்ற போது உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக வடமாநிலங்களில் இருந்து போதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை.

இதனால் தொழிலாளர்களுக்கு ஊதியம் கூட சரிவர வழங்க இயலாமல் தவித்தோம். தற்போது ஆர்டர்கள் அதிகம் இருந்தாலும் வெளியூர் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் திரும்பாத காரணத்தால், அதிகளவில் பட்டாசுகளை உற்பத்தி செய்ய இயலவில்லை. என்ன தான் பட்டாசு விலையை நாங்கள் உயர்த்தினாலும் உற்பத்தி குறைந்துள்ளதால் நஷ்டம் ஏற்படவே வாய்ப்பு அதிகம் என குறிப்பிட்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Shortage of workers .. production of fireworks affected by Sivakasi .. 20% increase in price

The work of producing crackers has been severely affected by the shortage of workers in Sivakasi. Due to the shortage, the price of crackers has been increased by about 20%.
Story first published: Thursday, July 18, 2019, 17:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more