சைவப்பிரியர்களின் மனதை படித்த சரவணபவன் அண்ணாச்சி - தனது கடைசி அத்தியாயத்தை தானே எழுதிய சோகம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சுத்த சைவப் பிரியர்களும், வட மாநிலத்தவர்களும் தாங்கள் விரும்பும் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட நினைத்தால் அவர்கள் நாடுவது நிச்சயமாக ஓட்டல் சரவண பவன் தான். அதற்கு முக்கிய காரணம் சுவையும் தரமும் தான். அந்த அளவிற்கு உணவில் தரத்தையும் சுவையையும் கொடுத்த சரவணபவன் அண்ணாச்சியின் வீழ்ச்சியும் கடைசி அத்தியாயமும் ஜீவ ஜோதி என்ற பெண்ணால் எழுதப்பட்டு விட்டது.

 

தமிழ் சினிமாவில் ஒரு காமெடி காட்சியில், எச்எஸ்பி அப்டின்னா ஹாங்காங் அண்டு ஷாங்காய் பேங்கா என்ற கேட்க பதிலுக்கு, கெடையாது ஓட்டல் சரவண பவன், என்று பதில் சொல்லுவார். அந்த அளவிற்கு இன்றைக்கு சென்னையில் யாராவது ஒருவரை நிறுத்தி அவரிடம் ஏம்பா இந்த எச்எஸ்பி (HSB) என்று கேட்டால் சுலபமாக வழியை சொல்லிவிடுவார். அந்த அளவிற்கு நம்ம அண்ணாச்சியின் ஓட்டல் சரவண பவன் பிரபலம்.

அதே போல், ஒரு இடத்தில் மட்டும் ஓட்டல் நடத்துவது சரியான தீர்வாக இருக்காது, ஒரு இடத்தில் கிடைக்கும் அதே உணவு, அதே சுவை மற்றும் அதே தரத்தில் பல்வேறு இடங்களிலும் கிடைக்குமாறு செய்யவேண்டும் என்ற நினைப்பில் உருவானதுதான் சங்கிலித் தொடராக வெவ்வேறு ஊர்களிலும் தொடங்கப்பட்ட சரவண பவன் ஓட்டல் கிளைகள்.

மளிகை கடையில் ஞானோதயம்

மளிகை கடையில் ஞானோதயம்

புத்தபிரானுக்கு எப்படி போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டு தியானத்தில் இருந்தபோது எப்படி திடீர் ஞானோதயம் தோன்றியதோ, அதேபோலத்தான், ராஜகோபால் அண்ணாச்சிக்கு தன்னுடைய மளிகைக் கடையில், அந்த உச்சி வெயில் மண்டையை பிளக்கும் வேளையில் சுறுசுறுப்பாக பொட்டலம் மடித்துக்கொண்டு இருந்தபோது தோன்றியது.

நல்ல ஓட்டல் இல்லையே

நல்ல ஓட்டல் இல்லையே

ஒரு நாள் தன்னைப் பார்க்க வந்த தன் நண்பரிடம் என்ன இந்தப் பக்கம் வந்திருக்கே என்று கேட்டதற்கு அவர் நண்பர், அட என்னப்பா, இந்த ஏரியா நல்ல டெவலப் ஆயிட்டு வருது, ஆனா என்னதான் தேடுனாலும், உருப்படியா ஒரு நல்ல சைவ ஓட்டல் இல்லியே, இதுக்காக நா மெனக்கெட்டு தி.நகர் போகனும் என்று அலுத்துக்கொண்டார்.

நாமளும் ஆரம்பிக்கலாமா
 

நாமளும் ஆரம்பிக்கலாமா

அப்போது தோன்றியது தான், அட நாம ஏன் ஒரு ஓட்டல் ஆரம்பிக்கக்கூடாது என்று மனதில் பட்ட ஐடியாவை செயல்படுத்த நினைத்தார். அந்த நினைப்பை வெகு விரைவில் செயலில் காட்டத் தொடங்கி விரைவிலேய அந்த பிஸியான கே.கே. நகர் பிரதான சாலையில் ஓட்டல் சரவண பவன் (Hotel Saravana Bhavan-HSB) என்னும் பெயரில் தன்னுடைய முதல் ஓட்டல் கிளையை தொடங்கினார்.

சங்கிலித் தொடர் உணவகம்

சங்கிலித் தொடர் உணவகம்

அதே போல், ஒரு இடத்தில் மட்டும் ஓட்டல் நடத்துவது சரியான தீர்வாக இருக்காது, ஒரு இடத்தில் கிடைக்கும் அதே உணவு, அதே சுவை மற்றும் அதே தரத்தில் பல்வேறு இடங்களிலும் கிடைக்குமாறு செய்யவேண்டும் என்ற நினைப்பில் உருவானதுதான் சங்கிலித் தொடராக வெவ்வேறு ஊர்களிலும் தொடங்கப்பட்ட சரவண பவன் ஓட்டல் கிளைகள்.

சமையலுக்கு ரெஸ்ட்

சமையலுக்கு ரெஸ்ட்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலானவர்கள், என்றைக்காவது ஒரு நாள் வீட்டில் சமைப்பதற்கு ஓய்வளித்துவிட்டு, ஓட்டலுக்கு சென்று சாப்பிட நினைத்தால் அவர்களுக்கு சட்டென நினைவுக்கு வருவது நம்ம அண்ணாச்சியின் ஓட்டல் சரவண பவன் தான். சென்னையில் மட்டுமே சுமார் 30க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.

தரம் மற்றும் சுவை

தரம் மற்றும் சுவை

உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால், சென்னையில் தி.நகரில் உள்ள ஒரு ஓட்டலில் காலை டிபனாக கேசரி, இட்லியோ அல்லது தனக்கு பிடித்த பரோட்டா குருமாவோ சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். மறுநாள் காலையில் அதே நபர் ஏதோ ஒரு வேலை விஷயமாக எக்மோர் ரயில் நிலையத்திற்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அங்கிருக்கும் தி.நகரிலுள்ள ஓட்டலின் எக்மோர் கிளையில் சாப்பிட்டும் போது முந்தைய நாளில் தி.நகரில் சாப்பிட்ட போது கிடைத்த அந்த தரம் மற்றும் சுவை அனுபவம் அந்த நபருக்கு எக்மோர் கிளையில் கிடைக்காது. இது 100 சதவிதிம் உறுதியானது.

100 சதவிகிதம் அதே தரம் சுவை

100 சதவிகிதம் அதே தரம் சுவை

ஆனால், அதுவே, அதே தி.நகரில் உள்ள நம்ம அண்ணாச்சியின் ஓட்டல் சரவண பவன் கிளையில் ஏதோ ஒரு காலை டிபன் அல்லது ரவா கேசரி சாப்பிட்டார் என்றால் மறுநாள் அதே நபர் எக்மோரில் உள்ள சரவண பவன் கிளையில் அதே போல் காலை டிபன் சாப்பிடும் போதும், தி.நகரில் சாப்பிட்டபோது கிடைத்த அதே தரம் மற்றும் சுவை அனுபவம் கிடைக்கும். இதுவும் 100 சதவிகிதம் உறுதியானது. அதற்கு முக்கிய காரணம் சென்னையின் அனைத்து கிளைகளுக்கும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்ட உணவுகளை அனைத்து கிளைகளுக்கும் கொண்டு செல்வதுதான்.(உடனடி உணவுகளைத் தவிர).

வாடிக்கையாளரின் திருப்தி

வாடிக்கையாளரின் திருப்தி

இதற்கு முக்கிய காரணம், தன்னுடைய ஓட்டலின் எந்த கிளையில் ஒரு வாடிக்கையாளர் சாப்பிட்டாலும், அதே தரம் மற்றும் சுவையை அனுபவிக்கவேண்டும், அப்போது தான் அவர் மீண்டும் மீண்டும் தனது ஓட்டலுக்கு வருவார் என்று நினைத்திருந்ததால் தான். அண்ணாச்சி அவர்கள் அந்த அளவிற்கு வாடிக்கையாளரின் மனதை நன்கு அளந்து வைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். இவருடைய இந்த வாடிக்கையாளரின் மன திருப்தி (Customer's satisfy) என்ற ஐடியாவை சென்னை மட்டுமல்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலும் தனது ஓட்டல் கிளைகளை தொடங்க முக்கிய காரணமாகும்.

சாப்பாடு தான் பிரச்சனை

சாப்பாடு தான் பிரச்சனை

ஒரு காலத்தில் அரபு நாடுகளுக்கோ, அல்லது சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா என எந்த நாட்டுக்கு வேலைக்கு சென்றாலும், அவர்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருந்தது சாப்பாடு பிரச்சனைதான். இதனாலேயே பெரும்பாலான சைவப் பிரயர்கள் தாங்கள் ஊரிலிருந்து கிளம்பும்போது தங்களுடன் சமையலுக்கு தேவையான பொருட்களையும் சேர்த்தே பார்சல் கட்டிக்கொண்டு கிளம்பியதுண்டு.

யாமிருக்க பயமேன்

யாமிருக்க பயமேன்

ஆனால், அண்ணாச்சி அவர்கள் தன்னுடைய சரவண பவன் ஓட்டல் கிளைகளை உலகின் பல்வேறு நாடுகளிலும் நிறுவியதால், வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாட்டுப் பிரச்சனை முற்றிலும் தீர்ந்தது என்று தான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் சவுதி அரேபிய தலைநகரான ரியாத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் தன்னுடைய அனுபவத்தை சொல்லும்போது, எனக்கு சாப்பாட்டுக்கு எந்த பிரச்சனையும் இல்லடா, தோ, பக்கத்துலயே நம்ம எச்எஸ்பி (HSB) இருக்கில்ல, என்று கூலாக சொன்னார்.

சாப்பாட்டு பிரச்சனை தீர்ந்தது

சாப்பாட்டு பிரச்சனை தீர்ந்தது

இன்றைக்கு அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் செய்யும் முதல் காரியம், கூகுளில் தேடுதளத்தில் எங்கெங்கு ஓட்டல் சரவண பவனின் கிளைகள் உள்ளது என்று தேடுவதுதான். அவர்கள் நினைப்பதுபோல் அங்கே சரவண பவனின் கிளைகள் இருந்தால், அப்பாடா ஒரு வழியா நம்ம சாப்பாட்டு பிரச்சனை தீந்ததுடா சாமீயோவ் என்பதுதான். அப்படி வாடிக்கையாளர்களின் மனதை அறிந்து அவர்களுக்கு ஏற்ப சுவையான தரமான உணவை கொடுத்த சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி கடைசியில் ஜீவஜோதி என்ற பெண்ணின் மேல் ஆசைப்பட்டு தனது வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை தானே எழுதிக்கொண்டார் என்பதுதான் சோகம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hotel Saravana Bhavan Secrets of success

If some body a vegetarian and they want to eat and choose the type of veg food, they will prefer what they are looking for is of course, The Hotel Saravana Bhavan (HSB). The main reason for that is the taste and quality.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X