நாட்டின் ஜிடிபி 7 சதவிகிதம்தான்... 7.2 சதவிகிதத்தை எட்டாது - ஆசிய வளர்ச்சி வங்கி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நடப்பு 2019-20ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது முந்தைய மதிப்பீட்டான 7.2 சதவிகிதத்தை காட்டிலும் குறைந்து 7 சதவிகிதம் என்ற அளவிலேயே இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் தற்போதைய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

 

அதே போல், அடுத்த 2020-20ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது நாம் எதிர்பார்த்தது போலவே நிச்சயம் 7.2 சதவிகிதம் என்ற இலக்கை எட்டக்கூடும் என்றும் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஜிடிபி 7 சதவிகிதம்தான்... 7.2 சதவிகிதத்தை எட்டாது - ஆசிய வளர்ச்சி வங்கி

கடந்த 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது 7.5 சதவிகிதத்தை எட்டக்கூடும் என்று உலக வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கை புள்ளிவிவரத்தை வெளியிட்டது. ஆனால் அதையும் மீறி நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதத்திலேயே நின்றுவிட்டது. இதை சமீபத்தில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையும் தெளிவு படுத்தியது.

எங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..!

அதே போல், நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் 7 சதவிகிதமாகவே இருக்கக்கூடும் என்றும் 2020-21ஆம் ஆண்டில் 7.2 சதவிகிதத்தை எட்டும் என்றும் தலைமை பொருளாதா ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முக்கியமாக நடப்பு நிதியாண்டில் தற்போது இருக்கும் பருவநிலை தொடர்ந்து, பருவமழை வழக்கமாக பெய்யும் சராசரி அளவிலேயே இருக்கும் என்பதால் விவசாய விளைச்சலும் அதிகரிக்கும் என்பதாலேயே இந்த வளர்ச்சி சாத்தியம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் சொன்னதுபோல் நடப்பு நிதியாண்டில் 7 சதவிகிதத்தை எட்ட வேண்டுமானால், வழக்கமாக பெய்யும் தென்மேற்கு பருவமழையானது எதிர்பார்த்த சராசரி அளவைக் காட்டிலும் சுமார் 20 சதவிகிதம் வரை குறைவாகவே பெய்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விளைச்சலும் குறைந்துள்ளது

 

இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank-ADB) நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் நாட்டின் நடப்பு 2019-20ஆம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி நிச்சயம், 7 சதவிகிதத்தை எட்டக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இது தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி சொன்னதற்கு ஒத்துப்போவது போல் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக குறைவதற்கு முக்கிய காரணம், கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்பாராத விதமாக 6.8 சதவிகிதமாக முடங்கியதால் அதன் தாக்கம் நடப்பு 2019-20ஆம் ஆண்டிலும் எதிரொலிக்கிறது என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s GDP rate will 7 percent in FT 20-Asian Development Bank

The country's economic growth in the current fiscal year is likely to be 7%, down from the previous estimate of 7.2%, according to a report by the Asian Development Bank. Agriculture is expected to grow at a healthy rate in 2019-20 as current weather trends indicate a normal monsoon.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X