ராஜகோபால் மறைந்தும் கூட... விடாமல் இயங்கிய சரவணபவன் ஹோட்டல்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சென்னை : என்னதான் குற்றவாளி என்று கூறப்பட்டாலும், மறுபுறம் சரவணபவன் என்னும் மெகா பிராண்டை உருவாக்கிய பெருமை ராஜகோபாலனையே சேரும். அதிலும் அவரின் தரம், ருசி, பிரமாண்டம் என அசத்தியவர் தற்போது இல்லை என்பது வருந்தக்க விஷயமே.

 

ஒரு புறம் குற்றவாளியாக கருதப்பட்டாலும், மறுபுறம் ஊழியர்களுக்கு அண்ணாச்சியின் மறுபுறமே வேறு என்கிறார்கள். ஆமாங்க தனது உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கல்வி முதல் கொண்டு பல விதங்களில் உதவி வந்திருக்கிறார். இதனாலேயே இவ்வளவு உதவும் குணம் படைத்தவர் இந்த விஷயத்தில் இப்படி ஆகிவிட்டாரே என்று கதறுகின்றனர் ஊழியர்கள்.

ஜோசியத்தால் வந்த வினை? இளம் பெண்னை திருமணம் செய்து கொண்டால், தொழில் இன்னும் அபிவிருத்தி ஆகும் என்று கூறி விட்டு போய்விட்டான். ஆனால் அதை நம்பிய அண்ணாச்சியின் கதி இப்படியாகி விட்டதே என்றும் கூறுகிறார்களாம்.

கடைசி ஆசை லீவு விட வேண்டாம்!

கடைசி ஆசை லீவு விட வேண்டாம்!

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட்டது போல, ஏற்கனவே செல்வ செழிப்புடன் இருந்தாலும், இன்னும் வர்த்தகம் செழிக்க வேண்டும், செல்வம் கொழிக்க வேண்டும் என்று ஜீவஜோதியை கைபிடிக்க முயன்றார். இந்த நிலையிலேயே தற்போது உயிரையும் தற்போது விட்டு விட்டார். எனினும் தான் செத்தாலும், அன்றும் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தக் கூடாது என்ற அண்ணாச்சியின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளனர் அவரது அன்பான ஊழியர்கள்.

ஜோதிடனின்  பேச்சை நம்பி இப்படி மண்ணாய்  போன அண்ணாச்சி?

ஜோதிடனின் பேச்சை நம்பி இப்படி மண்ணாய் போன அண்ணாச்சி?

ஆக அவர் இறந்த நாளான நேற்று வழக்கம் போல ஹோட்டல்கள் செயல்பட்டன. இந்த நிலையில் இது குறித்து அவரின் உணவக ஊழியர்கள்.. செல்வாக்கிலும், மரியாதையிலும் மிக உச்சத்தில் இருந்த அண்ணாச்சியின் வளர்ச்சி, ஒரு ஜோதிடனின் பேச்சை நம்பி இப்படி மண்ணாய் போய்விட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, சிறு வயதிலிருந்தே கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து, தனது உழைப்பால் உயர்ந்து, பல தொழிலதிபர்களுக்கு உதாரணமாக விளங்கிய, இவர் தன்னுடைய உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தவர். ஆனால் ஜோதிடத்தை நம்பி வேதவாக்காக எடுத்துக்கொண்டு அற்ப விஷயத்துக்காக இப்படி அல்லல்பட்டு மடிந்தது மிக வேதனையளிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

பிரமாண்டம் நீடிக்குமா?
 

பிரமாண்டம் நீடிக்குமா?

பிரச்சனைகள் என்பது ஒரு புறம் இருந்தாலும் அதை ஒரு நாளும் தன் தொழிலில் காட்டியதே இல்லை எனலாம். அதிலும், வெஜிடேரியன் உணவகத்தில் இந்த அளவுக்கு வான் புகழ் எட்டியது அண்ணாச்சியாக மட்டும் தான் இருக்கும். அதிலும் 2 இட்லிக்கு 4 வகை சட்னிகள் என பிரமாண்டம் காட்டிய அந்த சேவை இனி இருக்குமா? கிடைக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.

ஊழியர்கள் நன்றாக இருக்க வேண்டும்?

ஊழியர்கள் நன்றாக இருக்க வேண்டும்?

ஒரு புறம் ஊரே இவரை குற்றம் சொன்னாலும், மறுபுறம் ஊழியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட காரணம் இதுவே. வெளியூர்களில் வேலை செய்யும் ஊழியர்களின் குழந்தைகளுக்கோ, குடும்பத்திற்கோ ஏதேனும் பிரச்சனை எனில் உடனடியாக ஆட்களை அனுப்பி தகுந்த உதவி செய்வதும், இதே உள்ளூர் எனில் அவர்களுக்கு பணத்தை கொடுத்து விடுப்பும் அளித்து ஊருக்கு அனுப்புவாராம், ஊழியர்கள் நன்றாக இருந்தால் தானே சந்தோஷமாக வேலை செய்வார்கள் என்பாராம். இது வியாபார யுக்தி என்றாலும், இதை செய்ய யாருக்கும் மனம் வரும். இந்த நல்ல மனம் இனி யாருக்கு வரும் என்று கதறுகிறார்கள் சரவனபவன் ஊழியர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Saravana bavan hotel employees fulfilled the last wish of late rajagopal

Saravana bavan hotel employees fulfilled the last wish of late rajagopal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X