Automation வந்தா பணியாளர்கள் வேலை பறி போகாதுங்க! தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி, இந்தியா: Automation பணியாளர்களை மாற்றியது இல்லை, மாறாக உற்பத்தியைப் பெருக்கி இருக்கிறது. பணியாளர்கள் நன்கு யோசித்து முடிவு எடுக்கக் கூடிய வேலைகளில் கவனம் செலுத்த உதவி இருக்கிறது Automation. எனவே Automation வந்தால் பணியாளர்களுக்கான வேலை பறி போகும் என கவலைப் பட வேண்டாம் என மக்களவையில் சொல்லி இருக்கிறார் மத்திய தொழிலாலர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்கார்.

அதோடு "புதிய தொழில்நுட்பங்களால் நிறைய வேலை வாய்ப்பு உருவாகும், உற்பத்தி அதிகரிக்கும், இதனால் திறன் படைத்த தொழிலாளர்களுக்கான தேவையும் அதிகரிக்கும் எனச் சொல்லி இருக்கிறார் சந்தோஷ் கங்வார். அதோடு இந்திய ஐடி மற்றும் ஐடி சார் தொழில் துறைகள் இப்போது வரை ஆட்களை எடுக்கும் துறையாகத் தான் இருக்கிறார்கள். ஐடி துறை சார்ந்தவர்களே ஆட்களை வேலைக்கு எடுத்து பணிக்கான பயிற்சியும் அளிப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

Automation வந்தா பணியாளர்கள் வேலை பறி போகாதுங்க! தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார்..!

National Association of Software and Services Companies (Nasscom) இந்திய தேசிய மென்பொருள் மற்றும் சேவை சங்கத்தின் கணக்குப் படி கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 41.38 லட்சம் பேர் ஏற்கனவே வேலையில் இருந்திருக்கிறார்கள். மேற் கொண்டு 1.7 லட்சம் ஊழியர்களை வேலைக்கு எடுத்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

ஐடி துறையில் பணியாளர்களின் திறனை மேம்படுத்த ஒரு தனி திட்டத்தை National Association of Software and Services Companies (Nasscom), ஐடி துறை மற்றும் கல்வியாளர்களோடு, அரசு பேசி வருகிறதாம். இந்த திட்டத்தை அரசு முன்னிருந்து ஒருங்கிணைக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார் சந்தோஷ் கங்கார். இந்த திட்டத்தின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் ஐடி ஊழியர்களின் திறனை மேம்படுத்த இலக்கு வைத்திருக்கிறார்களாம்.

இந்த ஐடி ஊழியர்கள் திறன் மேம்பாட்டு திட்டத்துக்காக, ஏற்கனவே National Association of Software and Services Companies (Nasscom) மற்றும் மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஒரு (MoU - Memorandum of Understanding) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

automation doesnt replace the employees santosh gangwar

automation does not replace the employees santosh gangwar
Story first published: Monday, July 22, 2019, 19:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X