9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு ஏர் கண்டிசனிங் செய்ய ரூ.253 கோடி.. மத்திய அரசு அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : மும்பையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மஹாராஷ்டிரா அரசும் இணைந்து மும்பை சென்ட்ரல் மற்றும் பாந்த்ரா இடையேயான மெட்ரோ திட்டத்தை தொடங்கியது.

 

இந்த நிலையில், ஏர் கண்டிஷனிங் மற்றும் வணிக குளிர்பதன நிறுவனமான, புளு ஸ்டார் லிமிடெட் கடந்த செவ்வாய் கிழமையன்று, மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 253 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏர் கண்டிஷனிங் மற்றும் சுரங்கப்பாதை காற்றோட்டம் அமைப்பு குறித்தான ஆர்டரை பெற்றுள்ளதாம்.

9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களுக்கு ஏர் கண்டிசனிங் செய்ய ரூ.253 கோடி.. மத்திய அரசு அதிரடி!

மும்பை சென்ட்ரல் மற்றும் பாந்த்ரா இடையேயான பாதையில் 9 நிலத்தடி நிலையங்களுக்கான வடிவமைப்பு, பொறியியல், சப்ளை, இன்ஸ்டாலேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங், சுரங்கப்பாதை காற்றோட்டம், சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்ட பணிகள் இந்த ஆர்டரில் அடங்கியுள்ளனவாம்.

மேலும் MMRCL என்பது மத்திய அரசுக்கும், மஹாராஷ்டிரா அரசுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும். மேலும் இந்த திட்டம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் ஓரளவு நிதியளிக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் Colaba-Bandra-SEEPZ என்றும் அழைக்கப்படுகிறது. இது நாட்டிலேயே மிக நீண்ட தொடர்ச்சியான நிலத்தடி மெட்ரோ ரயில் பாதை கொண்ட திட்டம் என்றும் கூறப்படுகிறது.

மும்பையில் விண்வெளி தடைகள் அதிகம் இருப்பதால், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது. ஒவ்வொரு நிலைய அமைப்பும் மிகச் சிறியதாகவே இருக்கிறதாம்.

இதன் காரணமாகவே கணினி வடிவமைப்பு, அளவிடுதல் மற்றும் சாதனங்களின் இடம் ஆகியவை வரையறுக்கப்பட்ட இடத்திற்குள் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் இது புளு ஸ்டார் நிறுவனம் அதன் பொறியியல் வலிமையை நிரூபிக்க இது சரியான திட்டம் என்றும், மேலும் சரியான நேரத்தில் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, பல சிக்கலான திட்டங்களை செயல்படுத்த, புளூ ஸ்டார் நிறுவனம் நன்கு தயாராக உள்ளது என்றும் ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mumbai Metro Railway gives Rs.253 crore order to Blue Star

Mumbai Metro Railway gives Rs.253 crore order to Blue Star
Story first published: Tuesday, July 23, 2019, 15:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X