ஏம்ப்பா இது ரயில்நிலையமா இல்ல ஏர்போர்ட்டா - சர்வதேச தரத்திற்கு மாறும் சூரத் ரயில் நிலையம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூரத்: அதிக அளவில் பயணிகளைக் கவரும் வகையில், சர்வதேச விமான நிலையங்களில் உள்ளதைப்போல், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பல்முனை போக்குவரத்து மையமாக மாற்றும் பணிகள் முடிந்து விரையில் பயன்பாட்டுக்கு தயாராகும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாராகும், இப்போக்குவரத்து மையத்தில், 900 கார்களை நிறுத்தும் கார் பார்க்கிங் வசதி, மிகப்பெரிய டிக்கெட் ஹால், விரைவு போக்குவரத்து பேருந்து நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளும் இடம்பெறும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சூரத் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் திட்டத்தை இந்திய ரயில்வேயின் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கான நிதியை மத்திய மாநில அரசுகளோடு உள்ளாட்சி அமைப்புகள் சேர்ந்து நிறைவேற்றும் திட்டமாகும். இதற்கு முன்பு குஜராத்தின் காந்தி நகர் ரயில் நிலையமும், மத்திய பிரதேசத்தின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையமும் சர்வதேச விமான நிலையம் போல் தரம் உயர்த்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோசமான பராமரிப்பு
 

மோசமான பராமரிப்பு

இந்தியாவில் பயணிகள் ரயில் போக்குவரத்து கிட்டத்தட்ட 175 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் கூட, நாட்டின் பெரும்பாலான ரயில் நிலையங்கள் இன்னமும் ரயில் சேவை தொடங்கப்பட்ட போது எப்படி இருந்ததோ, அதே மாதியே இப்பொழுதும், இன்னும் சில ரயில் நிலையங்கள் அதைவிட படு மோசமாகவும் உள்ளன. அந்த ரயில் நிலையங்களில் நுழைந்தாலே ஏதோ புராதன ரயில் நிலையத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றும்.

தமிழ்நாட்டில் மோசம்

தமிழ்நாட்டில் மோசம்

இது ஏதோ, சாதாரண ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த நிலை என்று இல்லை. கட்டமைப்பு வசதிகளும் தகவல் தொழில்நுட்ப வசதிகளும் பெருகிய நகரங்களிலும் கூட இந்த நிலையே நீடித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்திலுள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் இந்த நிலைதான் தொடர்கிறது. தலைநகரான சென்னை, மதுரை உள்ளிட்ட சில குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படியான வசதிகள் உள்ளன.

கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறிதான்

கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறிதான்

ஆனால், இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி வருவாயை அதிக அளவில் ஈட்டித்தரும் திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களின் ரயில் நிலையங்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 30 முதல் 40 ரயில்கள் நின்று செல்கின்றன. வெளிமாநிலங்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் குறைந்த பட்சமாக 50 ஆயிரம் பேராவது இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றன.

எச்சரிக்கை, அபாயம்
 

எச்சரிக்கை, அபாயம்

அவ்வளவு ஏன், மதுரை ரயில் நிலையம் கூட சமீபத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டலுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் ரயில் நிலையத்திற்கு உள்புறம் மட்டுமே அப்படி உள்ளதே தவிர, வெளிப்புறங்களில் இருக்கும் அதிநவீன கழிப்பறைகள் என்ற பெயரில் நான்கு பக்கமும் சுவர்கள் மட்டுமே உள்ளன. இயற்கை உபாதையை கழிக்க உள்ளே நுழைபவர்கள் சற்று மனதை திடப்படுத்திக் கொண்டுதான் செல்லவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் அவ்வளவுதான். இதெல்லாம் தமிழகத்திலுள்ள ரயில் நிலையங்களுக்கு மட்டுமே சொந்தம்.

அன்பான உபசரிப்பு

அன்பான உபசரிப்பு

இதற்கு மாறாக பிற மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்கள் எல்லாமே அடிப்படை வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் அனைத்து கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடனேயே இருக்கின்றன. அதேபோல், தங்கள் மாநில பயணிகளை இன்முகத்துடனேயே வரவேற்கின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் சூரத் நகர ரயில் நிலையம் தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய பல்முனை போக்குவரத் மையமாக மாற்றமடைந்து வருகிறது.

வைர நகரம்

வைர நகரம்

குஜராத்தின் சூரத் நகரம் ஜவுளி உற்பத்திக்கும் வைரம் பட்டை தீட்டும் தொழிலுக்கும் சர்வதேச அளவில் பெயர்பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. இந்தியாவின் அந்நியச் செலாவணி வருவாயில் இந்நகரம் முக்கிய பங்கு வகித்துவருகிறது. நாள்தோறும் வேலை நிமித்தமாகவும், வியாபர விசயமாகவும் லட்சக்கணக்கானவர்கள் இந்நகரத்திற்கு வந்து செல்வதால் இந்தியாவிலேயே மிகவும் பிஸியான நகரமாக விளங்கி வருகிறது.

சுத்தமான ரயில் நிலையம்

சுத்தமான ரயில் நிலையம்

இந்தியாவின் மிகவும் பிஸியான சூரத் நகரத்தை சர்வதேச அளவில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக கடந்த ஆண்டு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயை மறுசீரமைப்பு நிதியாக ஒதுக்கியது. இதன்படி, விமான நிலையங்களில் உள்ளது போல் அனைத்து வசதிகளும் சூரத் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளன. மேலும் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வசதிகளையும் பெறும் மூன்றாவது ரயில் நிலையமாக சூரத் ரயில் நிலையம் விளங்கும். ஏற்கனவே இந்நகரம் இந்தியாவின் சுத்தமான ரயில் நிலையம் என்று பெயரெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தரம்

சர்வதேச தரம்

இத்திட்டம் 3,19,700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 40 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் விரைவு போக்குவரத்து பேருந்து முனையம், நகர பேருந்து முனையமும் அமைய உள்ளது. அதேபோல் சுமார் 900 கார்களை நிறுத்துவதற்கான கார் நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலையத்தை இணைக்கும் ஐந்து சாலைகளின் கீழ் பாலங்களும் கட்டப்பட உள்ளன.

சகல வசதிகளும் இருக்கு

சகல வசதிகளும் இருக்கு

சூரத் ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் இரண்டும் முற்றிலும் நவீனமயமாக்கப்பட உள்ளன. ரயில் பயணிகளை வரவேற்பதற்கு வரவேற்பு குழுக்களும் பயணிகள் இளைப்பாறுவதற்கும் பொழுதுபோக்கு அம்சங்களும் உருவாக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தின் இரண்டு பக்கமும் பரந்த வெளிகளும், மிகப் பெரிய டிக்கெட் புக்கிங் அரங்கும் உருவாக்கப்படுகின்றன. கூடவே, ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக ரயில் நிற்கும் நடைமேடைக்கு செல்லும் வகையில் பாலங்களும் உருவாக்கப்படுகின்றன.

விரைவில் திட்டம் நிறைவேரும்

விரைவில் திட்டம் நிறைவேரும்

சர்வ தேச விமான நிலையங்களில் உள்ளது போல், ஷாப்பிங் மால்கள், உணவுக் கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்து அம்சங்களும் நிறைந்த சர்வதேச ரயில் நிலையமாக மாற்றும் திட்டங்கள் அசுர கதியில் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்து நடப்பு ஆண்டிற்குள் முடிவுக்கு வரும் என்று சூரத் ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 மூன்றாவது ரயில் நிலையம்

மூன்றாவது ரயில் நிலையம்

சூரத் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் திட்டத்தை இந்திய ரயில்வேயின் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்கான நிதியை மத்திய மாநில அரசுகளோடு உள்ளாட்சி அமைப்புகள் சேர்ந்து நிறைவேற்றும் திட்டமாகும். இதற்கு முன்பு குஜராத்தின் காந்தி நகர் ரயில் நிலையமும், மத்திய பிரதேசத்தின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையமும் சர்வதேச விமான நிலையம் போல் தரம் உயர்த்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Surat Railway Station transform like Multi-Modal Transport Hub

The Indian Railway Administration has said that all the amenities will be converted to a multi-modal transport hub (MMTH )and ready for use, as in the international airports, which attract more travelers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X