தமிழுக்காக ரூ.25 கோடி செலவு...ராஜேந்திர சோழன் சிலை.. திருக்குறள் பாடம் - அசத்தும் கம்போடியா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃப்நாம் பெந்: தாய் மொழியான தமிழ்மொழியை தமிழ்நாட்டிலிருந்து சிறிது சிறிதாக அழித்தொழிக்கும் முயற்சி நடந்துவரும் சூழலில் கிழக்காசிய நாடான கம்போடியா அரசு திருக்குறளை பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைத்ததோடு ராஜேந்திர சோழனுக்கு ரூ.25 கோடியில் சிலை வைக்கவும் முடிவு செய்துள்ளது.

கம்போடியாவின் கலாச்சார அமைச்சகத்தின் பிரதிநிதியான பன்னாட்டு தமிழர் நடுவம் அமைப்பின் தலைவரான தணிகாச்சலம், திருக்குறள் தமிழில் இருந்து கிமெர் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாமன்னன் ராஜேந்திர சோழனின் புகழை உலகறியச் செய்யும் விதமாக கம்போடியாவில் ரூ.25 கோடியில் சிலை வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிலையை திறக்க பிரதமர் மோடியை அழைக்கவும், இந்தியா மற்றும் கம்போடியா நாடுகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என்றும் தணிகாச்சலம் தெரிவித்தார்.

தமிழில் பேசினால் குற்றமோ
 

தமிழில் பேசினால் குற்றமோ

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடிகள் என்றும், உலகில் தோன்றிய மொழிகளின் தாய் மொழி என்றும், ஆதி மொழி என்றும் போற்றப்படும் தமிழ் மொழியை இன்னும் சில காலம் கழித்து தமிழ்நாட்டில் பேசினாலோ அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் நிலைக்கு தமிழ் மொழி தள்ளப்படும் போலிருக்கிறது.

தமிழுக்கு கெட் அவுட்டா

தமிழுக்கு கெட் அவுட்டா

இன்றைக்கு மருத்துவப் படிப்பிற்காக மத்திய அரசு நடத்தும் நீட் (NEET) நுழைவுத் தேர்வு முதல் அனைத்த நுழைவுத் தேர்வுகளை தமிழ் மொழியில் எழுதுவதற்கு எவ்வளவோ போராடியும், சிலர் தற்கொலை செய்தும், நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுதுவதற்கு அனுமதி அளிக்க விடாப்பிடியாக மறுத்துவருகிறது. அதே சமயத்தில் வடமாநில மாணவர்கள் அவர்கள் தாய்மொழியில் எழுதவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்திக்கு 349 கோடி செலவு

இந்திக்கு 349 கோடி செலவு

இதற்கு ஒரு படி மேலே போய், 150 ஆண்டுகளே ஆன இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்புவதற்காக கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 349 கோடி ரூபாய் வரை மத்திய அரசு செலவிட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது மேலும் சுமார் 50 கோடி ரூபாய் செலவழித்து இந்தி ஆசிரியர்களை நியமிக்கப்போவதாக நடப்பு 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

45 நாடுகளில் தமிழ் ராஜ்ஜியம்
 

45 நாடுகளில் தமிழ் ராஜ்ஜியம்

இந்தியாவிற்கு வெளியில் பிற நாடுகள் தமிழ் மொழியின் தொன்மையையும், மகத்துவத்தையும் அறிந்து தமிழ் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம்முடைய மத்திய அரசு மட்டும் ஏனோ அளிக்க மறுத்து வருகிறது. நம் அண்டை நாடான சீனா, ஜப்பான், சிங்கப்பூர், இலங்கை, மாலத்தீவுகள், மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, அரபு நாடுகள், கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா என 45 நாடுகளும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

வாணிபத் தொடர்பு

வாணிபத் தொடர்பு

உலக நாடுகள் பலவும் தமிழ் மொழிக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணமே, தமிழ்நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அனைவருமே மேற்கண்ட அனைத்து நாடுகளுடன் வாணிபத் தொடர்பு வைத்திருந்ததோடு நட்போடு இருந்ததுதான். இதன் காரணமாகவே இன்றளவும் அந்த நாடுகள் அனைத்தும் அவர்களின் தாய் மொழிக்கு அளிக்கும் அதே மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நம் தமிழ் மொழிக்கும் அளிக்கின்றனர். திருக்குறளும் உலகப் பொதுமறையாக மதிக்கப்படுவதற்கும் இது தான் காரணமாகும்.

அயல்நாடுகளில் வாழும் தமிழ்

அயல்நாடுகளில் வாழும் தமிழ்

குறிப்பாக கி.பி 800ஆம் ஆண்டு முதல் கி.பி.1300ஆம் ஆண்டுகள் வரையிலும் தமிழகத்தை ஆட்சி செய்த சோழ மன்னர்கள் அனைவருமே, கீழை நாடுகளான மலேசியா, ஜாவா, சுமத்ரா, மாலத்தீவுகள், கம்போடியா போன்ற நாடுகளை வென்று அங்கே தமிழ்மொழியை பரப்பியதோடு பல கோவில்களையும் கட்டி இந்து மதத்தையும் பரப்பினார்கள். இதன் காரணமாகவும் இன்றும் அங்கே தமிழ் வாழ்ந்துகொண்டிருக்கிறது. மேற்கண்ட நாடுகளும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளித்துவருகின்றனர்.

ராஜேந்திர சோழனின் ஆட்சி

ராஜேந்திர சோழனின் ஆட்சி

அதிலும், கி.பி. 1012 முதல் கி.பி.1044ஆம் ஆண்டுவரையிலும் தமிழகத்தை ஆட்சி புரிந்த முதலாம் ராஜேந்திர சோழன், தென்னிந்தியா மட்டுமல்லாமல் ஸ்ரீவிஜயம் (பீகார்), வங்காளம், பர்மா (மியான்மர்), அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், என அனைத்தும் ராஜேந்திர சோழன் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய மன்னர்களிலேயே முதன் முதலில் வெளிநாட்டிற்கு படையெடுத்துச்சென்று வெற்றி கண்ட மன்னன் என்பதோடு, அயல் நாட்டை வெற்றி கொண்ட ஒரே மன்னன் என்றும் பெயர் பெற்றான்.

பாடத்திட்டத்தில் திருக்குறள்

பாடத்திட்டத்தில் திருக்குறள்

தற்போது கிழக்காசிய நாடான கம்போடியா, முதலாம் ராஜேந்திர சோழ மன்னனின் புகழைப் பரப்பவும், தமிழ் மொழியை அந்நாடு முழுவதும் பரவச் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக, உலகப் பொதுமறை என்றும், உலகமெங்கும் ஜாதி, மதம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து அனைவருக்கும் பொதுவான ஒரு படைப்பாக இருக்கும் திருக்குறளை அந்நாட்டு பள்ளிகளில் பாடத்திட்டத்தில் இணைத்திருக்கிறது. மேலும், ராஜேந்திர சோழ மன்னனுக்கு 25 கோடி ரூபாய் செலவில் சிலை எழப்பவும் திட்டமிட்டுள்ளது. அந்தச் சிலையை இந்தியப் பிரதமர் மோடியை வைத்து திறந்து வைக்கச்செய்யவும் திட்டமிட்டுள்ளது.

நட்புக்கு மரியாதை

நட்புக்கு மரியாதை

கடந்த வாரம் கம்போடிய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் பிரதிநிதியான பன்னாட்டு தமிழர் நடுவம் அமைப்பின் தலைவர் தணிகாச்சலம், திருக்குறள் தமிழில் இருந்து கிமர் (கம்போடியா) மொழியில் மாற்றம் செய்யப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கிமர் பேரரசர்களின் நட்புறவை பாராட்டும் விதமாகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ராஜேந்திர சோழனுக்கு சிலை

ராஜேந்திர சோழனுக்கு சிலை

மேலும், மாமன்னன் ராஜேந்திர சோழனின் புகழை உலகறியச் செய்யும் விதமாக கம்போடியாவில் ரூ.25 கோடியில் சிலை வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டில் இச்சிலையை திறக்க பிரதமர் மோடியை அழைக்கவும், இந்தியா மற்றும் கம்போடியா நாடுகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என்றும் தணிகாச்சலம் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: modi மோடி
English summary

Rajendra Chola statue in Cambodia at a cost of Rs 25 crore

In an attempt to eradicate the mother tongue Tamil language from Tamil Nadu, the East Asian country has added the Cambodia government to the Tirukkural school curriculum and decided to make a statue of Rajendra Chola at Rs 25 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more